Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | சுற்றளவு மற்றும் பரப்பளவு

பருவம் 3 அலகு 3 | 6 ஆம் வகுப்பு கணக்கு - சுற்றளவு மற்றும் பரப்பளவு | 6th Maths : Term 3 Unit 3 : Perimeter and Area

   Posted On :  23.11.2023 09:51 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : சுற்றளவு மற்றும் பரப்பளவு

சுற்றளவு மற்றும் பரப்பளவு

கற்றல் நோக்கங்கள் • மூடிய வடிவங்களின் சுற்றளவு மற்றும் பரப்பளவு பற்றிய கருத்துகளைப் புரிந்துகொள்ளுதல். • சதுரம், செவ்வகம், செங்கோண முக்கோணம் மற்றும் இவற்றை உள்ளடக்கிய கூட்டு வடிவங்களின் சுற்றளவு மற்றும் பரப்பளவைக் கணக்கிடல். • சுற்றளவு மற்றும் பரப்பளவில் அலகுகளைச் சரியாகப் பயன்படுத்துவதைப் புரிந்துகொள்ளுதல்.

இயல் 3

சுற்றளவு மற்றும் பரப்பளவு



கற்றல் நோக்கங்கள்

மூடிய வடிவங்களின் சுற்றளவு மற்றும் பரப்பளவு பற்றிய கருத்துகளைப் புரிந்துகொள்ளுதல்

சதுரம், செவ்வகம், செங்கோண முக்கோணம் மற்றும் இவற்றை உள்ளடக்கிய கூட்டு வடிவங்களின் சுற்றளவு மற்றும் பரப்பளவைக் கணக்கிடல்.

சுற்றளவு மற்றும் பரப்பளவில் அலகுகளைச் சரியாகப் பயன்படுத்துவதைப் புரிந்துகொள்ளுதல்.


அறிமுகம்

நமது அன்றாட வாழ்வில், சில வடிவங்களையும், அவ்வடிவங்களின் எல்லைகள் மற்றும் மேற்பரப்புகளை அணுகும் பல சூழல்களையும் நாம் கடந்து வந்துள்ளோம். எடுத்துக்காட்டாக,

ஒரு நிலத்தைச் சுற்றி வேலி அமைத்தல்.

ஒரு புகைப்படத்திற்குச் சட்டம் அமைத்தல்.

ஒரு சுவரின் மேற்பரப்பைக் கணக்கிட்டு, தேவையான வண்ணத்தின் (paint) அளவைக் கண்டறிதல்.

பாடப்புத்தகம் மற்றும் குறிப்பேடுகளுக்கு மாணவர்கள் பழுப்பு நிறத் தாளினால் உறையிடுதல்

தரையை நிரப்பத் தேவையான தள நிரப்பிகளின் (tiles) எண்ணிக்கையைக் கணித்தல்.


இதுபோன்ற சில சூழல்களைக் கீழ்க்கண்ட காரணங்களுக்காகத் திறமையுடன் அணுகுவது அவசியமாகும்.

கொடுக்கப்பட்ட நிலத்தில் முகப்புக்கூடம், சமையல் அறை, படுக்கை அறை போன்றவற்றைப் போதிய இட அமைப்பில் கட்டுதல் மற்றும் தேவையான அளவில் பொருள்களை வாங்கத் திட்டமிடல்

வீட்டில் படுக்கை, தொலைக்காட்சிப் பெட்டி, அலமாரி, மேசை போன்றவற்றைப் பொருத்தமான இடத்தில் வைத்தல்.

மேற்கண்ட அனைத்துச் செயல்களிலும் செலவினங்களைக் குறைத்தல்.

இவ்வகையான சூழல்களில் சுற்றளவு மற்றும் பரப்பளவு குறித்துக் கற்பது மிகவும் தேவையானதாகும்.

இந்தச் சூழல் குறித்துச் சிந்திக்க

அபூர்வாவும் அவளது அண்ணனும் பள்ளியிலிருந்து திரும்புகிறார்கள். அவளது அம்மா அவர்களுக்குச்சில பிஸ்கட்டுகளைத் தருகிறார். அவர்கள் அவற்றை ஒவ்வொன்றாக உண்ணும்போது, அபூர்வா பிஸ்கட்டுகளைத் தட்டின் மீது அடுக்கி விளையாடுகிறாள். அப்போது தட்டில் 12 பிஸ்கட்டுகளை மட்டும் அடுக்க முடிவதைக் கவனிக்கிறாள். அவள் அவ்வாறே பிஸ்கட்டுகளைத் தொடர்ந்து அடுக்க வேண்டும் எனில் அவளுக்கு இதை விட ஒரு பெரிய தட்டு தேவைப்படுகிறது. ஏனெனில் தட்டின் மேற்பகுதி முழுவதும் 12 பிஸ்கட்டுகளால் நிரம்பி விட்டது. கண்ணிற்குப் புலப்படும் விளிம்புகளின் மொத்த நீளம் அத்தட்டின் சுற்றளவு எனவும் பிஸ்கட்டுகளால் நிரப்பப்பட்ட தட்டின் மேற்பகுதி தட்டின் பரப்பளவு எனவும் அழைக்கப்படுகின்றன. சுற்றளவு மற்றும் பரப்பளவு குறித்து இந்த இயலில் விரிவாகக் கற்போம்.


எங்கும் கணிதம்அன்றாட வாழ்வில் சுற்றளவு மற்றும் பரப்பளவு


தச்சர் இருக்கையைத் தயாரிக்கத் தேவையான மரக்கட்டையின் நீளத்தை அளத்தல்.


தரையின் மேற்பரப்பில் கொத்தனார் தளநிரப்பிகளைப் பொருத்துதல்.

Tags : Term 3 Chapter 3 | 6th Maths பருவம் 3 அலகு 3 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 3 Unit 3 : Perimeter and Area : Perimeter and Area Term 3 Chapter 3 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : சுற்றளவு மற்றும் பரப்பளவு : சுற்றளவு மற்றும் பரப்பளவு - பருவம் 3 அலகு 3 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : சுற்றளவு மற்றும் பரப்பளவு