Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | துணைப்பாடம்: அறிவுசால் ஔவையார்: கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 7 | 8 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: அறிவுசால் ஔவையார்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 8th Tamil : Chapter 7 : Paarukkulle nalla Nadu

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு

துணைப்பாடம்: அறிவுசால் ஔவையார்: கேள்விகள் மற்றும் பதில்கள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு : துணைப்பாடம்: அறிவுசால் ஔவையார்: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு

அறிவுசால் ஒளவையார் - என்னும் நாடகத்தைச் சிறுகதை வடிவில் சுருக்கமாக எழுதுக.

விடை

அதியமானின் அரண்மனையில் ஒளவையார் நீண்டகாலம் தங்கியிருந்தார். அப்போது தொண்டைமான், அதியமான் இருவருக்கும் நடக்கவிருந்த போரைத் தடுத்து நிறுத்தியதைப் பற்றி இக்கதையில் காண்போம்.

ஒருநாள் அதியமான் காட்டுவளத்தைக் காணச் சென்றான். திரும்பி வரும்போது அரிய நெல்லிக்கனியைக் கொண்டு வந்து ஒளவையாரிடம் கொடுத்தான். சுவைத்துப் பார்த்த ஒளவையார் இதுவரை இவ்வளவு சுவையுள்ள கனியை தான் சுவைத்ததே இல்லை என்று கூறினார்.

அமைச்சர் இது அரிய நெல்லிக்கனி , நமது வீரர்களால் பறிக்க இயலவில்லை . நம் மன்னரே மலையுச்சியில் இருந்த மரத்தில் ஏறிப் பறித்தார் என்று கூறினார். மேலும் இக்கனியை உண்டவர்கள் நோய் நொடியின்றி வாழ்வார்கள் என்றும் கூறினார்.

அதனைக் கேட்ட ஒளவையார் வியந்து அதியமானிடம் நீ உண்ணாமல் எனக்கு ஏன் கொடுத்தாய்?” என்று கேட்டார். அதற்கு அதியமான் என்னைப் போன்ற அரசன் இறந்து போனால் வேறு ஒருவர் அரசராகிவிடுவார். ஆனால் உங்களைப் போன்ற அறிவிற்சிறந்த புலவர் ஒருவர் மறைந்தால், அந்த இழப்பை ஈடு செய்ய முடியாது என்று கூறினான். அதியமான் தமிழ் மீது கொண்ட பற்றினைக் கண்டு ஒளவையார் மனமுருகினார்.

மறுநாள் அதியமானின் கவலைகொண்ட முகத்தைக் கண்டு ஒளவையார் காரணம் கேட்டார். அதியமானும் தொண்டைமான் போர்ச் செய்தி அனுப்பியுள்ளான் என்று கூறினான். ஔவையார் அதியமானிடம் எதற்கும் அஞ்சாத நீ போரைக் கண்டு அஞ்சலாமா?” என்று கேட்டார்.

அதியமான் தான் போரைக் கண்டு அஞ்சவில்லை என்றும் அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு அஞ்சுவதாகவும் கூறினான். அதியமானின் உள்ளத்தை அறிந்த ஒளவையார், அதியமானின் ஒப்புதலோடு தொண்டைமானைக் காணச் சென்றார்.

தொண்டைமானின் அரண்மனையில் படைத் தலைவருடன் உரையாடிக் கொண்டிருந்தான். அப்போது படைத்தலைவர் அதியமான் நம் படையின் பெருக்கத்தைக் கண்டு அதிர்ந்துபோய், சமாதானம் வேண்டிப் புலவர் ஒருவரைத் தூது அனுப்பியுள்ளார் என்று கூறினான்.

தொண்டைமான் ஒளவையாரை வரவேற்றான். போர்க்கருவிகள் நிறைந்த படைக்கலக் கொட்டிலைப் பார்க்க அழைத்துச் சென்றான். அப்படைக் கருவிகளைப் பார்த்து ஒளவையார் அளவுக்கதிகமான கருவிகள், அழகாக அடுக்கி வைத்திருக்கும் முறை, புத்தம் புதியனவாய் நெய் பூசப்பெற்று மாலையும் மயில் தோகைகளும் அணிவிக்கப்பட்டு அழகாக உள்ளன என்றார்.

மேலும், ‘அதியமான் எப்போதும் போர் புரிந்து கொண்டே இருப்பதால் அவனது படைக்கருவிகள் பகைவர் உடலைத் துளைத்த குருதிக் கறைகளுடன் நுனி ஒடிந்தும் கூர் மழுங்கியும் கொல்லனின் உலைக்களத்தில் கிடக்கின்றன என்று கூறினார்.

ஒளவையாரின் பேச்சில் இருந்த உட்பொருளை உணர்ந்த தொண்டைமான். தான் இதுவரை போர்க்களத்தைக் கண்டதில்லை என்றும், அதியமான் பல போர்களைக் கண்டுள்ளான் என்றும், கூறி அதியமானுடன் போரிடப் போவதில்லை என்று முடிவெடுத்தான். இதனை அதியமானிடம் தெரிவிக்கும்படியும் கூறினான்.

ஒளவையாரின் அறிவு சார்ந்த செயலினால் இழப்புகளின்றி நாடும், நாட்டு மக்களும் காப்பாற்றப்பட்டனர்.

 

கற்பவை கற்றபின்



1. அறிவுசால் ஔவையார் - என்னும் நாடகத்தை வகுப்பில் நடித்துக் காட்டுக.

விடை

 

2. சங்ககாலப் பெண் புலவர்களின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.

விடை

1. ஒளவையார்

2. அள்ளூர் நன்முல்லையார்

3. ஆதிமந்தி

4. ஓக்கூர் மாசாத்தியார்

5. காக்கைப்பாடினியார்

6. நப்பசலையார்

7. காவற்பெண்டு

8. வெள்ளிவீதியார்

9. பொன்முடியார்

10. முடத்தாமக்கண்ணியார்

11. வெண்ணிக்குயத்தியார்

Tags : Chapter 7 | 8th Tamil இயல் 7 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 7 : Paarukkulle nalla Nadu : Supplementary: Arivushal avvaiyar: Questions and Answers Chapter 7 | 8th Tamil in Tamil : 8th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு : துணைப்பாடம்: அறிவுசால் ஔவையார்: கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 7 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு