Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

பொருளாதாரம் - தமிழ்நாட்டுப் பொருளாதாரம் | 11th Economics : Chapter 11 : Tamil Nadu Economy

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 11 : தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சமூக மற்றும் பொருளாதார நிலைகள் ஒரே மாதிரியானவையல்ல , மண்டலங்களிடையே பெரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

இயல் 11 

தமிழ்நாட்டுப் பொருளாதாரம்



'உழைப்பின் இயல்பு சரியாக உணரப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டால், உணவு உடல் வளர உதவுவதைப்போல, உழைப்பு உயர்வான திறமையை வளர்த்திட உதவும். - ஜே.சி.குமரப்பா .


கற்றல் நோக்கங்கள்

1. தமிழ்நாட்டின் பொருளாதார வளங்களின் நிலையைப் புரிந்து கொள்ளுதல்.

2. தமிழ்நாட்டின் பொருளாதார செயல்திறனை பிற மாநிலங்களோடு ஒப்பிட்டு ஆய்வு செய்தல்.


அறிமுகம்

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சமூக மற்றும் பொருளாதார நிலைகள் ஒரே மாதிரியானவையல்ல , மண்டலங்களிடையே பெரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்கள் ஏனைய பகுதிகளை விட சிறப்பாக உள்ளன. பூகோள ரீதியாக தமிழ்நாடு 11வது பெரிய மாநிலமாகும். மக்கள் தொகை அடிப்படையில் 3வது பெரிய மாநிலமாகும். தமிழ்நாடு பல்வேறு சாதனைகளுடன் சிறந்த பெரிய பொருளாதாரமாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பில் இரண்டாவது இடத்திலும், தலா வருமான முதலீடு, நேரடி வெளிநாட்டு முதலீடு மற்றும் தொழிற் துறை உற்பத்தி ஆகியவற்றில் 3வது இடத்திலும் உள்ளது. தொழில் செய்ய உகந்த மாநிலங்களின் வரிசையிலும் உள்ளது.

சமூகம் மற்றும் நலத்துறைகளில் ஏனைய மாநிலங்களை விட சிறப்பான நிலையில் உள்ளது. உடல் நலம், உயர் கல்வி, பச்சிளங் குழந்தை இறப்பு விகிதம் (IMR), மகப்பேறு இறப்பு விகிதம் (MMR) ஆகியவற்றில் தமிழ்நாட்டின் செயல்பாடு தேசிய சராசரியைவிட சிறப்பாக உள்ளது.


Tags : Economics பொருளாதாரம்.
11th Economics : Chapter 11 : Tamil Nadu Economy : Tamil Nadu Economy Economics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 11 : தமிழ்நாட்டுப் பொருளாதாரம் : தமிழ்நாட்டுப் பொருளாதாரம் - பொருளாதாரம் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 11 : தமிழ்நாட்டுப் பொருளாதாரம்