Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | ஊரக முன்னேற்றத்திற்கான தேவைகள்

இந்தியப் பொருளாதாரம் - ஊரக முன்னேற்றத்திற்கான தேவைகள் | 11th Economics : Chapter 10 : Rural Economics

   Posted On :  07.10.2023 12:08 am

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 10 : ஊரக பொருளாதாரம்

ஊரக முன்னேற்றத்திற்கான தேவைகள்

அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக தேவைத் திட்டங்களை மேம்படுத்துவதற்கு முதலீடுகளை அதிகரிக்க செய்தல் வேண்டும்.

ஊரக முன்னேற்றத்திற்கான தேவைகள்

ஸ்லேட்டரின் கிராமங்கள்: 

கில்பெர்ட்ஸ்லேட்டர் என்பவர் சென்னை பல்கலைக்கழகத்தின் முதல் பொருளாதார பேராசிரியர். இவர்தனது மாணவர்களைக்கொண்டு சிலகிராமங்களை ஆய்வு செய்தார். வடமலைபுரம் (ராமநாதபுரம்), கங்கை கொண்டான் (திருநெல்வேலி), பாலக்குறிச்சி (தஞ்சாவூர்) மற்றும் துசி (வடஆற்காடு) ஆகிய தமிழ்நாட்டில் உள்ள சில கிராமங்களை ஆய்வு செய்து 1918ஆம் ஆண்டு சில தென்னிந்திய கிராமங்கள் என்ற புத்தகத்தை வெளியிட்டார். இதனை தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சி குழுவினரும் இதனை 1930, 1950 மற்றும் 1960ஆம் ஆண்டுகளில் ஆய்வு செய்தனர். இதில் இரண்டு கிராமங்கள் மட்டும் 21ம் நூற்றாண்டுக்கு முந்தைய கால கட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டதாகும். இந்த மறு ஆய்வில் முக்கியமான வரலாற்றுப் பதிவுகள் காணப்படுகின்றன. இந்த கிராமங்களை ஆய்வு செய்யும் பிற ஆராய்ச்சியாளர்களுக்கு வழிகாட்டியாக அமைகிறது. மற்றும் பிற்கால ஆராய்ச்சியாளர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது. இந்த ஆய்வின் மூலம் ஊரக பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை பற்றி நாம் அறிந்து கொள்ளலாம்.

1. விவசாயம் மற்றும் விவசாயம் சாரா துறைகளில் ஊரக உண்மை வருமானம் உருவாக்கும் முயற்சிகள் தேவை. வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருமானம் உண்டாக்குதல், ஊரக தொழில்மயமாக்குதல், உடல்நல மற்றும் ஊட்டச்சத்து, கல்வி வசதி, வீட்டு வசதி மற்றும் பல்வேறு மக்கள் நல பணிகளை மேற்கொள்வதற்கு முயற்சிகள் தேவை.

2. அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக தேவைத் திட்டங்களை மேம்படுத்துவதற்கு முதலீடுகளை அதிகரிக்க செய்தல் வேண்டும்

3. தற்போதுள்ள பிரச்சனையை தீர்க்க ஒருங்கிணைக்கப்பட்ட திட்டங்களை தீட்டுவதுடன் அவற்றின் மூலம் நிலையான வளர்ச்சியினை பெறுவதற்கும் வழிவகுக்க வேண்டும்.

4. வளர்ச்சி திட்டங்களை வகுக்கும் போது ஊரக பகுதி மக்களின் பிரச்சனைகளை பற்றி அறிந்த நபர்களையோ அல்லது தலைவர்களையோ மற்றும் தொலை நோக்கு பார்வையுள்ள சிந்தனையாளர்களையோ கலந்தாலோசிக்க வேண்டும்.



தொகுப்புரை

பல்வேறு கொள்கைகளின் அடிப்படையில், ஊரகப் பொருளாதாரத்தை திடப்படுத்தும் முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், கட்டமைப்பு, கல்வி, சிறு வணிகம் ஆகியவற்றில் முதலீடு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வருங்காலங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்த நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஊரகப் பகுதிகளில் நகர்ப்புற வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கு (PURA- Provision of Urbanfacilitiesfor Rural Areas)) முக்கியத்துவம் தர வேண்டும். அதன் மூலம் இந்திய கிராமங்களை ஒளிரச் செய்ய முடியும்.


சொற்களஞ்சியம்

ஊரக பொருளாதாரம்

பொருளாதாரக் கொள்கைகளை ஊரக பகுதியில் நடைமுறைப்படுத்துதல்

மக்கள் தொகை அடர்த்தி

அடர்த்தி ஒரு சதுரகிலோமீட்டர் பரப்பளவில் வாழும் மக்களின் எண்ணிக்கை

வேலையின்மை 

மக்கள் வேலை செய்ய விருப்பமும், தகுதியும் இருந்தும் வேலையில்லா சூழ்நிலை 

வெளிப்படையான வேலையின்மை 

வேலையில்லா மக்களை எளிதாகக் காண முடிதல்

பருவகால வேலையின்மை

ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே வேலை கிடைத்தல் மற்றும் ஆண்டின் எஞ்சிய காலத்தில் வேலையில்லாதிருத்தல்.

குறை வேலையின்மை

தேவைக்கு அதிகமாக வேலையை பலர் செய்தல்.

ஏழ்மை

உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகள் இல்லாதிருத்தல்.

இரட்டைதன்மை

இரண்டு முற்றிலும் வேறுபட்ட பண்புகள் ஒருங்கே இருப்பது

ஊரக மேம்பாடு 

கிராமப் பகுதி, கிராம மக்கள் மற்றும் கிராம வாழ்க்கை சிறப்பாதல்.

ஊரக மின் இணைப்பு

மின்சார சக்தியை ஊரக பகுதிக்கு அளித்தல்.


Tags : India | Economics இந்தியப் பொருளாதாரம்.
11th Economics : Chapter 10 : Rural Economics : Requirements for Rural Development India | Economics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 10 : ஊரக பொருளாதாரம் : ஊரக முன்னேற்றத்திற்கான தேவைகள் - இந்தியப் பொருளாதாரம் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 10 : ஊரக பொருளாதாரம்