Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | வாழ்வியல்: திருக்குறள்: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 3 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் - வாழ்வியல்: திருக்குறள்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 3 Chapter 2 : Oppuravu olluku

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு

வாழ்வியல்: திருக்குறள்: கேள்விகள் மற்றும் பதில்கள்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு : வாழ்வியல்: திருக்குறள்: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

(இயல் 2 : வாழ்வியல் : திருக்குறள்)


பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்க.

1. --------- ஒரு நாட்டின் அரணன்று. 

அ) காடு

ஆ) வயல் 

இ) மலை

ஈ) தெளிந்த நீர் 

[விடை : ஆ. வயல்]


2. மக்கள் அனைவரும் --------- ஒத்த இயல்புடையவர்கள். 

அ) பிறப்பால்

ஆ) நிறத்தால் 

இ) குணத்தால்

ஈ) பணத்தால்

[விடை : அ. பிறப்பால்]


3. ‘நாடென்ப என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது --- 

அ) நான் + என்ப

ஆ) நா + டென்பது 

இ) நாடு + என்ப

ஈ) நாடு + டேன்ப

[விடை : இ. நாடு + என்ப]


4. கண் + இல்லது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் --- 

அ) கணிஇல்லது

ஆ) கணில்லது 

இ) கண்ணில்லாது

ஈ) கண்ணில்லது

[விடை : ஈ. கண்ணில்லது] 


பின்வரும் குறட்பாக்களில் உவமையணி பயின்று வரும் குறளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா

செய்தொழில் வேற்றுமை யான். 

2. வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

யானையால் யானையாத் தற்று. 

3. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம் கற்ற 

மிக்காருள் மிக்க கொளல். 

விடை : 2. வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

யானையால் யானையாத் தற்று.


குறு வினா

1. ஒரு செயலைச் செய்ய எவற்றையெல்லாம் ஆராய வேண்டும்?

பொருள், கருவி, காலம், செயலின் தன்மை, உரிய இடம் ஆகிய ஐந்தும் ஆராய்ந்து அறிந்து ஒரு செயலைச் செய்ய வேண்டும். 


2. ஒரு நாட்டுக்கு எவையெல்லாம் அரண்களாக அமையும்?

தெளிந்த நீர் 

நிலம் 

மலை 

நிழல் உடைய காடு

- ஆகிய நான்கும் ஒரு நாட்டிற்கு அரண்கள் ஆகும். 


3. சிறந்த நாட்டின் இயல்புகளாக வள்ளுவர் கூறுவன யாவை?

மிக்க பசி, ஓயாத நோயும், அழிவு செய்யும் பகை சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடு ஆகும். பெரிய அளவில் முயற்சி இல்லாமல் வளம் தரும் நாடே சிறந்த நாடு. 


படங்களுக்கு பொருத்தமான திருக்குறளை எழுதுக.


மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்

காடும் உடையது அரண்.


உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேராது இயல்வது நாடு.

Tags : Term 3 Chapter 2 | 7th Tamil பருவம் 3 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ்.
7th Tamil : Term 3 Chapter 2 : Oppuravu olluku : Valviyal: Thirukkural: Questions and Answers Term 3 Chapter 2 | 7th Tamil in Tamil : 7th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு : வாழ்வியல்: திருக்குறள்: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 3 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் : 7 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு