Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளி

தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் | குடிமையியல் | சமூக அறிவியல் - பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளி | 9th Social Science : Civics : Election, Political Parties and Pressure Groups

   Posted On :  10.09.2023 10:33 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளி

V. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளி.

1. நேரடித் தேர்தலின் நிறைகள் மற்றும் குறைகளை விவாதி

விடை:

நிறைகள் :

வாக்காளர்கள் தங்களது பிரதிநிதிகளை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதால், நேரடித் தேர்தல் முறையானது வலுவான மக்களாட்சி கொண்டதாகக் கருதப்படுகிறது.  

அரசாங்க நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வும், தகுதியான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும் மக்களுக்குக் கற்பிக்கிறது. மேலும் மக்கள் அரசியலில் முக்கிய பங்கு வகிக்க ஊக்கமளிக்கிறது

குறைகள் :

நேரடித் தேர்தல் முறை அதிக செலவு கொண்டதாக உள்ளது.

எழுத்தறிவற்ற வாக்காளர்கள், சாதி, மதம் மற்றும் பிற பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் பிரச்சாரங்கள் மற்றும் பொய்யானப் பரப்புரைகளால் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.

சில அரசியல் கட்சி வேட்பாளர்கள், வாக்காளர்கள் மீது பணம், பொருள் () பணிகள் மூலமாக தங்களது செல்வாக்கைச் செலுத்துவது என்பது மற்றொரு சவாலாகும்.

தேர்தல் பரப்புரைகளின் போது சில நேரங்களில் வன்முறைகள், பதற்றங்கள், சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை முறை பாதிக்கப்படுகிறது.

 

2. அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் யாவை?

விடை:

கட்சிகள் தேர்தல்களில் போட்டியிடுகின்றன. கட்சிகள் தங்களைத் தேர்ந்தெடுக்க அவர்களது கொள்கைகளையும், திட்டங்களையும் தேர்தல் தொகுதிகளில் முன்னிறுத்துகின்றனர்.

நாட்டில் சட்டங்கள் இயற்றுவதில் அரசியல் கட்சிகள் முக்கிய பங்களிப்புச்செய்கின்றன. நாடாளுமன்றங்களிலும், சட்டமன்றங்களிலும் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன.

அரசியல் கட்சிகள் அரசாங்கத்தினை அமைத்து, அவற்றை வழிநடத்துகின்றன.

•  தேர்தலில் தோல்வியடைந்த கட்சிகள் எதிர்கட்சியாக அரசின் குறைகள் மற்றும் தவறான கொள்கைகளை எதிர்த்து பல்வேறுபட்ட பார்வைகளை முன்வைக்கின்றன, விமர்சனம் செய்கின்றன.

மக்கள் கருத்திற்கு அரசியல் கட்சிகள் வடிவம் கொடுக்கின்றன. அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் ஒரு பாலமாக அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் இருக்கின்றன.

 

3. இந்தியாவில் அழுத்தக் குழுக்களின் செயல்பாடுகள் யாவை?

விடை:

பிரதிநிதித்துவப்படுத்துதல், அரசியல் பங்கேற்பு, கல்வி, கொள்கை உருவாக்கம் மற்றும் கொள்கை அமலாக்கம் போன்ற பல செயல்பாடுகளை அழுத்தக் குழுக்கள் மேற்கொள்கின்றன.

அரசியல் பங்கேற்பு :

மனுக்கள், பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் போன்ற அரசியல் செயல்பாடுகள் மூலம் மக்கள் ஆதரவைத் திரட்டி தங்கள் செல்வாக்கினை அழுத்தக் குழுக்கள் விரிவுபடுத்துகின்றன.

கல்வி :

பல அழுத்தக் குழுக்கள் ஆராய்ச்சிகள் மேற்கொள்வது, இணையத்தளம் பராமரிப்பு, அரசுக் கொள்கைகள் மீது கருத்துகள் வெளியிடுவது மற்றும் உயர்நிலைக் கல்வியாளர்கள், அறிவியலாளர்கள் மட்டுமல்லாமல் முக்கிய பிரபலங்களிடமிருந்தும் கருத்துகளைத் திரட்டி வல்லுநர்களின் ஆதரவினைப் பெறுவது ஆகிய செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன.

கொள்கை உருவாக்கம் :

அரசுக்குத் தகவல் அளிப்பதிலும், ஆலோசனைகளை வழங்குவதிலும் இந்த அழுத்தக் குழுவினர் வலுவான பங்களிப்புச் செய்து வருகின்றனர். கொள்கை உருவாக்கச் செயல்முறைகளில் அவர்கள் தொடர்ந்து ஆலோசனை தருகின்றனர்.

Tags : Election, Political Parties and Pressure Groups | Civics | Social Science தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் | குடிமையியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Civics : Election, Political Parties and Pressure Groups : Answer in detail Election, Political Parties and Pressure Groups | Civics | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் : பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளி - தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் | குடிமையியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்