Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | அழுத்தக் குழுக்கள்

குடிமையியல் - அழுத்தக் குழுக்கள் | 9th Social Science : Civics : Election, Political Parties and Pressure Groups

   Posted On :  10.09.2023 10:26 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

அழுத்தக் குழுக்கள்

'அழுத்தக் குழுக்கள்' என்ற சொல் ஐக்கிய அமெரிக்க நாட்டில் உருவாக்கப்பட்டது. பொது நலன்களைப் பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் தீவிரமாக செயல்படும் குழு அழுத்தக் குழு என்று அழைக்கப்படுகிறது. அரசு மீது அழுத்தம் செலுத்தி அரசின் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரும்படி நெருக்கடி தருவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

அழுத்தக் குழுக்கள்

'அழுத்தக் குழுக்கள்' என்ற சொல் ஐக்கிய அமெரிக்க நாட்டில் உருவாக்கப்பட்டது. பொது நலன்களைப் பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் தீவிரமாக செயல்படும் குழு அழுத்தக் குழு என்று அழைக்கப்படுகிறது. அரசு மீது அழுத்தம் செலுத்தி அரசின் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரும்படி நெருக்கடி தருவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

அழுத்தக் குழுக்கள் 'நலக்குழுக்கள்' அல்லது தனிப்பட்ட நலக்குழுக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. அதே சமயம் இவை அரசியல் கட்சியிலிருந்து வேறுபட்டவை தேர்தலில் போட்டியிடுவதில்லை . அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற விளைவதும் இல்லை.


 

1. இந்தியாவில் அழுத்தக் குழுக்கள்

இந்தியாவில் தற்போது அதிக எண்ணிக்கையிலான அழுத்தக் குழுக்கள் உள்ளன. ஆனால் அவைகள் அமெரிக்கா அல்லது மேற்கத்திய நாடுகளான இங்கிலாந்து, பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற நாடுகளில் இருப்பதைப் போல் வளர்ச்சி அடைந்தவையாக காணப்படுவதில்லை.


இந்தியாவில் செயல்படும் அழுத்தக் குழுக்களைக் கீழ்க்காணும் வகைகளாக வகைப்படுத்தலாம்.

 1. வணிகக்குழுக்கள்

 2. தொழிற்சங்கங்கள்

 3. விவசாயக் குழுக்கள்

4. தொழில் முறைக் குழுக்கள்

 5. மாணவர் அமைப்புகள்

 6. மத அமைப்புகள்

7. பழங்குடி அமைப்புகள்

8. மொழிக் குழுக்கள்

9. கோட்பாட்டு அடிப்படைக் குழுக்கள்

10. சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுக்கள்

உங்களுக்குத் தெரியுமா?

அழுத்தக் குழுக்களுக்கான எடுத்துக்காட்டுகள்

1. இந்திய வணிகம் மற்றும் தொழிற்துறை சம்மேளத்தின் கூட்டமைப்பு (FICCI)

2. அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC)

3. அகில இந்திய விவசாயிகள் சங்கம் (AKIS)

 4. இந்திய மருத்துவச் சங்கம் (IMA)

5. அகில இந்திய மாணவர் சம்மேளனம் (AISF)

6. அகில இந்திய சீக்கிய மாணவர் பேரவை

7. இளம் பதாகா சங்கம் (YBA)

8. தமிழ்ச் சங்கம்

9. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

10. நர்மதா பச்சாவோ அந்தோலன்

இந்தியாவில் அழுத்தக் குழுக்களின் செயல்பாடுகள்

அரசின் கொள்கையில் செல்வாக்குச் செலுத்துவதன் மூலம் குறிப்பிட்ட நலன்களைப்பெறச் செயல்படும் நலக் குழுக்கள் அழுத்தக் குழுக்கள் எனப்படும். அவை எந்த அரசியல் கட்சியுடனும் அணி சேருவதில்லை . ஆனால் மறைமுக முடிவுகள் எடுப்பதில் அதிக செல்வாக்குச் செலுத்தும் அளவுக்கு ஆற்றல் மிக்கவை பிரதிநிதித்துவப்படுத்துதல், அரசியல் பங்கேற்பு கல்வி கொள்கை உருவாக்கம் மற்றும் கொள்கை அமலாக்கம் போன்ற பல வகைகளான செயல்பாடுகளை அழுத்தக் குழுக்கள் மேற்கொள்கின்றன.

அரசியல் பங்கேற்பு

அரசியலின் மற்றொரு முகம் என்று அழுத்தக் குழுக்களைக் கூறலாம். மனுக்கள், பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் போன்ற அரசியல் செயல்பாடுகள் மூலம் மக்கள் ஆதரவைத் திரட்டி தங்கள் செல்வாக்கினை அழுத்தக் குழுக்கள் விரிவுபடுத்துகின்றன. இத்தகைய செயல்பாடுகள் இளைய சமுதாயத்தினரை வெகுவாகக் கவர்ந்திழுக்கின்றன.

கல்வி

பல அழுத்தக் குழுக்கள் ஆராய்ச்சிகள் மேற்கொள்வது. இணையத்தளம் பராமரிப்பு அரசுப் கொள்கைகள் மீது கருத்துகள் வெளியிடுவது மற்றும் உயர்நிலைக் கல்வியாளர்கள், அறிவியலாளர்கள் மட்டுமல்லாமல் முக்கிய பிரபலங்களிடமிருந்தும் கருத்துகளைத் திரட்டி வல்லுநர்களின் ஆதரவினைப் பெறுவது ஆகிய செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன.

கொள்கை உருவாக்கம்

அழுத்தக் குழுவினர் கொள்கைகளை உருவாக்குபவர்கள் இல்லை என்ற போதிலும் கொள்கை உருவாக்கச் செயல்முறைகளில் அவர்கள் பங்கேற்பதைத் தடுப்பதில்லை. அரசுக்குத் தகவல் அளிப்பதிலும், ஆலோசனைகளை வழங்குவதிலும் இந்த அழுத்தக் குழுவினர் வலுவான பங்களிப்புச் செய்து வருகின்றனர். கொள்கை உருவாக்கச் செயல்முறைகளில் அவர்கள் தொடர்ந்து ஆலோசனை தருகின்றன.

Tags : Indian Civics குடிமையியல்.
9th Social Science : Civics : Election, Political Parties and Pressure Groups : Pressure Groups Indian Civics in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் : அழுத்தக் குழுக்கள் - குடிமையியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்