Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள், வாழ்வியல் திறன்

தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் | குடிமையியல் | சமூக அறிவியல் - செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள், வாழ்வியல் திறன் | 9th Social Science : Civics : Election, Political Parties and Pressure Groups

   Posted On :  10.09.2023 10:35 pm

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள், வாழ்வியல் திறன்

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள், வாழ்வியல் திறன்

VI. செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. தேசியக் கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் சாதனைகளை ஒப்பிடுக.

 

VII. சிந்தனை வினா.

1. தேர்தல்கள் பிரதிநிதித்துவ மக்களாட்சியில் முக்கியத்துவமாகக் கருதப்படுகின்றது.ஏன்?

விடை:

மக்களாட்சி என்பதற்குநாட்டு மக்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் உள்ளது' என்பது பொருளாகும்.

மக்களாட்சி முறையில் மக்கள் தங்களை ஆட்சி செய்பவர்களைத் தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்காற்றுகின்றனர்.

தேர்தல் என்பது ஆட்சியிலிருப்பவர்களை மக்களே தேர்ந்தெடுக்கும் முறை ஆகும்.

இதில் மக்களே அதிகாரம் படைத்தவர்களாக இருக்கின்றனர். மக்கள் நேரடித் தேர்தல் மூலமாகவோ அல்லது மறைமுகத் தேர்தல் மூலமாகவோ தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

மக்களாட்சியின் வெற்றி என்பது ஒரு நாட்டில் குறிப்பிட்ட இடைவேளைக்குப் பிறகு நடத்தப்படும் தேர்தலைப் பொறுத்து அமைந்துள்ளது.

தேர்தல் மூலமாகவே அரசின் செயல்பாடுகள் பற்றிய தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர். எனவே மக்களாட்சியில் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன.

 

2. வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் முக்கியத்துவம் என்ன?

விடை:

ஜனநாயக நாடுகளில் வயது வந்தோர் வாக்குரிமை முறை நடைமுறையில் உள்ளது.

இந்தியாவில் பதினெட்டு வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியக்குடிமகனும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள்.

சாதி, சமயம், இனம், பால், கல்வித்தகுதி என எவ்விதப் பாரபட்சமும் இன்றி சமமான வாக்குரிமையைப் பெற்றுள்ளனர்.

குடிமக்கள் அனைவருக்கும் நிர்வாகத்தில் சமவாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.

3. மக்களாட்சியின் நிறைகள் மற்றும் குறைகளை விவாதி.

விடை:

நிறைகள் : .

பொறுப்பும், பதிலளிக்கும் கடமையும் கொண்ட அரசாங்கங்கள்.

சமத்துவம் சகோதரத்துவம்.

மக்களிடையே பொறுப்புணர்ச்சி.

தலசுய ஆட்சி.

அனைவருக்கும் வளர்ச்சியும் வளமும்.

மக்கள் இறையாண்மை

சகோதர மனப்பான்மை மற்றும் கூட்டுறவு.

குறைகள் :

மறைமுக அல்லது பிரதிநிதித்துவ முறை கொண்ட மக்களாட்சி.

வாக்காளர்களிடையே போதிய ஆர்வமின்மை.

குறைந்த வாக்குப்பதிவு. சில சமயங்களில் நிலையற்ற அரசாங்கத்திற்கு வழி வகுக்கிறது.

மக்களாட்சியில் கையூட்டுகளையும் அதிகாரிகளின் சட்ட மீறல்களையும் தடுக்க முடிவதில்லை .

முடிவெடுக்கும் முறையில் காலதாமதம்.

 

4. பல கட்சி ஆட்சி முறையினை விவாதி.

விடை:

இரண்டிற்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கு பெறுவது பலகட்சி முறை ஆகும். இந்தியா, இலங்கை, இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் பல கட்சி முறை உள்ளது.

இந்தியா போன்ற பெரியநாடுகளில் பல இன, மத, மொழி மக்கள் இருப்பதனால் பலகட்சிகள் தோன்ற வழி வகுக்கிறது.

பலகட்சிகள் இருப்பதால் ஒவ்வொரு கட்சியும் ஆட்சியைப் பிடிக்கும் ஆர்வத்தில் நல்ல திட்டங்களை சிந்தித்து செயல்படுத்த முடியும்.

இரண்டு கட்சிகளில் உள்ள தலைவர்களை மட்டுமே நம்பியிராமல், புதிய கருத்துக்களையும், புதிய கோணத்தில் பிரச்சனைகளைத் தீர்க்கும் சக்தியுள்ள புதிய தலைவர்களையும் தேர்வு செய்ய முடியும்.

ஆயினும் பல கட்சி முறையில் ஊழல், பிராந்திய உணர்வு ஆகியவை ஊக்கப்படுத்தப்படும். ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்குத் தாவுகின்ற கட்சித்தாவல் மூலம் அரசின் நிலைத்தன்மைக்கு ஊறு ஏற்படும்.

 

VIII. வாழ்வியல் திறன் (மாணவர்களுக்கானது)

1. உங்களுடைய வகுப்பறையில் மாதிரி வாக்குப் பதிவை நடத்துக.

Tags : Election, Political Parties and Pressure Groups | Civics | Social Science தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் | குடிமையியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Civics : Election, Political Parties and Pressure Groups : Project and Activity, Hots, Life Skill Election, Political Parties and Pressure Groups | Civics | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் : செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள், வாழ்வியல் திறன் - தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் | குடிமையியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்