Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | விரிவான விடையளிக்கவும்

மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம் | வரலாறு | சமூக அறிவியல் - விரிவான விடையளிக்கவும் | 9th Social Science : History : Evolution of Humans and Society - Prehistoric Period

   Posted On :  04.09.2023 12:14 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம்

விரிவான விடையளிக்கவும்

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம் - புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : விரிவான விடையளிக்கவும்

VI. விரிவான விடையளிக்கவும். 

1. விவசாயம், பானை செய்தல், உலோகக் கருவிகள் செய்தல் ஆகிய துறைகளில் நிகழ்ந்த வளர்ச்சி பெருங்கற்காலத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான மாற்றமாகும் - உறுதிப்படுத்தவும்.

விடை:  

விவசாயம்: 

• பெருங்கற்கால (இரும்புகால) மக்கள் வேளாண்மையில் ஈடுபட்டபொழுது திணையும் நெல்லும் பயிரிடப்பட்டன. 

• நதிகள், குளங்களுக்கு அருகே பெருங்கற்கால இடங்கள் அமைந்ததால் பாசன நிர்வாகம் மேம்பட்டது. பாசன தொழில் நுட்பம் வளர்ந்தது. 

• ஈமச் சின்னங்களுக்குள நெல்லை வைத்துப் புதைத்தார்கள். சான்றுகள்: ஆதிச்சநல்லூர், பொருந்தல். 

பானை செய்தல்: 

• கறுப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்கள் இக்காலத்தில் பயன்படுத்தப்பட்டன. உள்ளே கறுப்பாகவும், வெளியே சிவப்பாகவும், பளபளப்பாகவும் இம் மண்பாண்டங்கள் காணப்பட்டன.

• இப்பாண்டங்கள் சமையல், பொருள்கள் சேமிப்பு மற்றும் சாப்பிடுவதற்கு பயன்பட்டன. 

உலோகக்கருவிகள் 

• பெருங்கற்கால இரும்புக் கருவிகள் வேளாண்மை, வேட்டையாடுதல், உணவு சேகரித்தல் மற்றும் போர்களில் பயன்படுத்தப்பட்டன. வாள், குறுவாள், கோடவரி, உளி, விளக்கு, மக்காலி ஆகியவை கிடைத்துள்ளன. 

வெண்கலக் கிண்ணங்கள், கலங்கள், முகம் பார்க்கும் கண்ணாடி, மணிகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. 

• இக்கால கல்லறைகளில் ஈமப்பொருட்களாக இரும்புப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. 


2. மனிதர்களின் வரலாறு பூமியின் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு உடையது - தெளிவுப்படுத்துக 

விடை: 

• புவியின் மேலடுக்குகளில் வரலாற்றுக் கால கட்டங்கள் குறித்த நிலவியல், தொல்லியல், உயிரியல் பதிவுகள் காணப்படுகின்றன. குறிப்பாக மனித மூதாதையரின் எலும்பு புதை படிவங்கள் புதைந்துள்ளன. 

• மண் மற்றும் பாறை அடுக்குகள், தொல்மானுடவியல் அறிஞர்கள் மற்றும் தொல்லியல் அறிஞர்களால் அகழ்ந்து, சான்றுகள் சேகரிக்கப்படுகின்றன. 

• அறிவியல் பூர்வமாக கணிக்கப்படும் புதை படிவங்கள் மற்றும் மண்ணடுக்குகளின் காலம் மனிதர்களின் பரிணாமம், தொல் பழங்காலம் பற்றி அறிய உதவுகிறது. 

• நிலவியல் ஆய்வாளர்களால் புவியின் நீண்ட நெடிய வரலாறு நெடுங்காலம் (Era), காலம் (Period), ஊழி (Epoch), என பிரிக்கப்படுகிறது.

• முந்தைய தொல்லுயிரூழி- பல செல் உயிரினங்கள்

பழந்தொல்லுயிரூழி - மீன்கள், ஊர்வன, தாவரங்கள் 

இடைத் தொல்லுயிரூழி - டைனோஸர் 

பாலூட்டிகள் காலம் - ஆஸ்ட்ரோலாபித்திஸைன்கள் (குரங்கினம்) 

(இக் குரங்கினத்திலிருந்துதான் நவீன மனித இனம் தோன்றியது)


வரலாற்றுடன் வலம் வருக

VII. மாணவர் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது) 

1. உலக வரைபடத்தில் வரலாற்றுக்கு முந்தைய கால நாகரிகம் நிலவிய பகுதிகளைக் குறிக்கவும்

2. வரலாற்றுக்கு முந்தைய காலம் தமிழ்நாட்டில் நிலவிய இடங்கள் என்ற தலைப்பில் ஒரு கண்காட்சியை அமைக்கவு


ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் செய்ய வேண்டியவை

1. கீழ்க்கண்ட தலைப்புகளில் பட விளக்கக்காட்சியை (Power Point) உருவாக்குக.

2. மனித இனத்தின் தோற்றம்

3. வரலாற்றுக்கு முந்தைய காலக் கருவிகள்

4. பழங்காலத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் வரையப்பட்ட ஓவியங்கள்


மேற்கோள் நூல்கள்

1. Noboru Karashima. A Concise History of South India: Issues and Interpretations. Oxford University Press.

2. K. Rajan. Iron Age-Early Historic Transition In South India: An Appraisal. Padmashri Amalananda Ghosh Memorial Lecture, New

Delhi: Institute of Archaeology.

3. Ralph, Burns and others. World Civilizations

இணையத் தொடர்புகள்

1. http://www.sharmaheritage.com

2. https://www.nature.com

3. http://www.ancient-origins.net

4. http://humanorigins.si.edu

5. https://www.britannica.com

இணையச் செயல்பாடு

அருங்காட்சியகத்தில் உள்ள வரலாற்றுக்கு முந்தைய காலப் பொருட்களைப் பற்றி ஆராய்வோம்.

படிகள்: படி 1: கொடுக்கப்பட்டிருக்கும் உரலி / விரைவுக்குறியீட்டைப் பயன்படுத்தி 'Google art and culture என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்க. படி 2: திரையின் இடப்பக்கம் தெரியும் மூன்று பட்டைகளைச் சொடுக்குக. படி 3: 'Collections' ஐத் தேர்வு செய்தால் உலகின் புகழ்பெற்ற அருங்காட்சியகங்களின் பட்டியல் திரையில் தோன்றும். அதில் 'British museum'என்பதைத் தேர்வு செய்து 'மஞ்சள் வண்ண மனிதன் குறியீட்டைத் தேர்வு செய்து அருங்காட்சியகத்தைச் சுற்றி வருக. படி 4: கடிகாரத்தைத் தேர்வு செய்து காலக் கோட்டைக் காண்க. உரலி:https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.cultural

Tags : Evolution of Humans and Society - Prehistoric Period | History | Social Science மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம் | வரலாறு | சமூக அறிவியல்.
9th Social Science : History : Evolution of Humans and Society - Prehistoric Period : Answer the following in detail Evolution of Humans and Society - Prehistoric Period | History | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம் : விரிவான விடையளிக்கவும் - மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம் | வரலாறு | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம்