Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | சுருக்கமான விடை தருக

மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம் | வரலாறு | சமூக அறிவியல் - சுருக்கமான விடை தருக | 9th Social Science : History : Evolution of Humans and Society - Prehistoric Period

   Posted On :  04.09.2023 12:14 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம்

சுருக்கமான விடை தருக

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம் : சுருக்கமான விடை தருக

V. சுருக்கமான விடை தருக 

1. ஊகக் காலம் மனிதர்களைத் தன்னுணர்வும் , அறிவும் உள்ளவர்களாக எப்படி மாற்றியது? 

விடை: 

• பரிணாம வளர்ச்சிப் போக்கில் மனிதர்கள் இயற்கை, தம்மைச் சுற்றியுள்ள உயிரினங்கள் மற்றும் உலகம் குறித்துச் சிந்திக்கவும், கேள்வி எழுப்பவும் தொடங்கினர். 

• இதன் மூலம் மனிதர்கள் உணர்தல் நிலையையும் அறிவாற்றலையும் கொண்டவர்களாக மாறினார்கள்.


2. வரலாற்றுக்கு முந்தைய காலத் தமிழக மக்களின் வாழ்வில் கால்நடை வளர்த்தல் ஏற்படுத்திய தாக்கம் பற்றி குறிப்பு தருக.  

விடை: 

• இரும்புக்கால மக்கள் வேளாண்மை மேற்கொண்டு, ஆடு, மாடுகளையும் வளர்த்தார்கள். 

• சில குழுக்கள் வேட்டையாடிக்கொண்டும், உணவு சேகரித்துக் கொண்டும் இருந்தநிலையில், இவர்கள் பாசன நிர்வாகத்தை மேம்படுத்தினர். திணையும், நெல்லும் பயிரிட்டனர்.

• பானைகள் செய்தார்கள். நிரந்தரமான இடங்களில் வசித்தார்கள். கலைகள் பல வளர்ந்தனர். 


3. பெருங்கற்காலத்தில் இறந்தோரைப் புதைக்கும் வழக்கத்தின் வகைகளைக் கூறு

விடை: 

• டோல்மென் எனப்படும் கற்திட்டை. 

• சிஸ்ட் எனப்படும் கல்லறைகள் 

• மென்ஹிர் எனப்படும் நினைவுச்சின்ன குத்துக்கல், தாழி, பாறைக் குடைவு குகைகள்.

• சார்க்கோபேகஸ் எனப்படும் ஈமத்தொட்டிகள். 


4. கருவி செய்வதில் கீழ்ப் பழைய கற்கால மக்களிடமிருந்த தொழில்நுட்பத்தைத் திறனாய்வு செய்க.

விடை: 

• கீழ்ப் பழைய கற்கால மக்கள் தமது வாழ்க்கைத் தேவைகளுக்காக இருமுகக் கருவிகளான கைக்கோடாரி, வெட்டுக்கத்தி போன்ற பல கருவிகளைக் செய்தார்கள். 

• இவை சமபங்கு உருவ அமைப்பை (Symmetry) பெற்றுள்ளன. மனித மூதாதையரின் அறிவுணர் ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. 

• பெரிய கற்களை செதில்களாகக் சீவி பல கருவிகளை வடிவமைத்தார்கள்.

Tags : Evolution of Humans and Society - Prehistoric Period | History | Social Science மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம் | வரலாறு | சமூக அறிவியல்.
9th Social Science : History : Evolution of Humans and Society - Prehistoric Period : Answer the following briefly Evolution of Humans and Society - Prehistoric Period | History | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம் : சுருக்கமான விடை தருக - மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம் | வரலாறு | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம்