Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | மீள்பார்வை - மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம்

வரலாறு - மீள்பார்வை - மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம் | 9th Social Science : History : Evolution of Humans and Society - Prehistoric Period

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 1 : மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம்

மீள்பார்வை - மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம்

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம்

மீள்பார்வை

● மனிதர்களின் வரலாறு புவியின் வரலாற்றோடு நெருக்கமாகப் பிணைந்துள்ளது. புவி சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. „

● மனித மூதாதையர்களான ஹோமினின்கள் சுமார் 5-7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றினார்கள். „

● மனிதர்களின் தோற்றம் குறித்து மக்கள் தெய்வீகமான விளக்கங்களை தொடக்க காலத்தில் தந்தனர். ஆனால் விஞ்ஞானரீதியாக மனிதர்கள் பெருங்குரங்குகளிலிருந்து (GreatApes) பரிணமித்தார்கள் என்ற கொள்கையை முன்வைக்கிறது

● மனிதர்கள் விலங்குகளைப் பழக்கப்படுத்தி, பயிர் செய்ய ஆரம்பித்தார்கள். இந்த வேளாண்மைப் புரட்சி பல மாற்றங்களுக்கு இட்டுச் சென்றது. மனிதர்கள் நிரந்தரமான வீடுகளில், ஊர்களில் வசித்தார்கள். பானைகள் செய்தார்கள். உபரியின் உற்பத்தி மூலம் பல்வேறு கலைகளை வளர்த்துக் கொண்டார்கள்.

● தமிழ்நாட்டில் முதன்முதலில் மனிதர்கள் சுமார் 2-1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

● இடைப் பழங்கற்காலப் பண்பாடு தமிழ்நாட்டின் சில பகுதிகளில் காணப்படுகின்றது.

● இடைகற்கால மக்கள் தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வாழ்ந்திருக்கிறார்கள்.

● புதிய கற்கால சான்றுகள் தமிழகத்தின் வட மேற்கு பகுதியில் கிடைக்கின்றன.

● இரும்புக்காலத்தில் மக்கள் பல்வேறு நிலப்பகுதிகளில் மேலும் பரவினார்கள். இவர்கள் பின்னால் வந்த சங்ககாலத்திற்கு அடித்தளமிட்டார்கள்.

● வேளாண்மையில் இரும்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

Tags : History வரலாறு.
9th Social Science : History : Evolution of Humans and Society - Prehistoric Period : Summary of Evolution of Humans and Society - Prehistoric Period History in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 1 : மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம் : மீள்பார்வை - மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம் - வரலாறு : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 1 : மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம்