Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம் | வரலாறு | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Social Science : History : Evolution of Humans and Society - Prehistoric Period

   Posted On :  04.09.2023 05:39 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம்

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

பயிற்சிகள் : l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக புத்தக வினாக்கள் V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும்

வரலாறு 

அலகு ஒன்று

மனித பரிணாம வளர்ச்சியும் சமூகமும் : - வரலாற்றுக்கு முந்தைய காலம்

புத்தக வினாக்கள் 


பயிற்சிகள்


I. சரியான விடையைத் தேர்வு செய்க 

1. மனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது. 

அ) கொரில்லா 

ஆ) சிம்பன்ஸி 

இ) உராங் உட்டான் 

ஈ) பெருங்குரங்கு

விடை :

ஆ) சிம்பன்ஸி 


2. வேளாண்மை மற்றும் விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் தொடங்கிய காலகட்டம் 

அ) பழைய கற்காலம்

ஆ) இடைக்கற்காலம் 

இ) புதிய கற்காலம்

ஈ) பெருங்கற்காலம்

விடை: 

இ) புதிய கற்காலம் 


3. பரிணாம வளர்ச்சி வரிசையில் நவீன மனிதனின் நேரடி முன்னோர் ஆவர். 

அ) ஹோமோ ஹேபிலிஸ்

ஆ) ஹோமோ எரக்டஸ் 

இ) ஹோமோ சேபியன்ஸ்

ஈ) நியாண்டர்தால் மனிதன்

விடை: 

இ) ஹோமோ சேபியன்ஸ் 


4. எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி ...................... எனப்படுகிறது 

அ) கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு

ஆ) பிறைநிலப் பகுதி 

இ) ஸோலோ ஆறு

ஈ) நியாண்டர் பள்ளத்தாக்கு

விடை: 

ஆ) பிறைநிலப்பகுதி 


5. சர் இராபர்ட் புரூஸ் ஃபூட் என்ற இங்கிலாந்து நிலவியளாலர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் …………………… கருவிகளை முதன்முறையாக கண்டுபிடித்தார். 

அ) நுண்கற்காலம் 

ஆ) பழங்கற்காலம் 

இ) இடைக் கற்காலம் 

ஈ) புதிய கற்காலம்

விடை: 

ஆ) பழங்கற்காலம் 


6. i) எழுத்து தோன்றுவதற்கு முந்தைய காலம் வரலாற்றுக்கு முந்தையதாகும்.

ii) வரலாற்றுக்கு முந்தைய கால மக்கள் மொழியை வளர்த்தெடுத்தார்கள்; அழகான ஓவியங்களையும் கலைப்பொருட்களையும் உருவாக்கினார்கள். 

iii) வரலாற்றுக்கு முந்தைய காலச் சமூகங்கள் படிப்பறிவு பெற்றிருந்ததாகக் கருதப்படுகின்றன, 

iv) வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம் பழங்காலம் என்று அழைக்கப்படுகிறது. 

அ) i) சரி 

ஆ) i) மற்றும் ii) சரி 

இ) i) மற்றும் iv) சரி 

ஈ) ii) மற்றும் iii) சரி

விடை: 

இ) i) மற்றும் iv) சரி 


7. i) செல்ட் எனப்பட்ட மெருகேற்றப்பட்ட கற்கோடரிகளைப் புதிய கற்கால மக்கள் பயன்படுத்தினார்கள். 

ii) புதிய கற்காலக் கிராமம் குறித்த சான்று சென்னை மாவட்டத்தில் உள்ள பையம்பள்ளியில் காணப்படுகிறது. 

iii) புதிய கற்காலத்தைத் தொடர்ந்து வந்த பண்பாட்டுக்காலம் பழங்கற் காலம் எனப்படுகிறது. 

iv) விலங்குகளை வளர்த்தல் , பயிர் செய்தல் ஆகியவை நடந்த காலகட்டம் இடைக்கற்காலம்  எனப்படுகிறது. 

அ) i) சரி  

ஆ) ii) சரி 

இ ) ii) மற்றும் iii) சரி 

ஈ) iv) சரி 

விடை: 

அ ) i) சரி 


8. கூற்று : தமிழகத்தின் ஆறுகள், குளங்கள் அருகே இடைக் கற்கால வாழ்விடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

காரணம்: நீர்ப்பாசன மேலாண்மை இடைக் கற்காலத்தில் வளர்ச்சியடைந்து இருந்தது.

அ) கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது. 

ஆ) கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை . 

இ) கூற்று சரி; காரணம் தவறு, 

ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.

விடை: 

ஈ) கூற்றும் காரணமும் தவறானவை


II. கோடிட்ட இடங்களை நிரப்புக 

1. கைகோடரிகளும் வெட்டுக்கருவிகளும் ………………………. பண்பாட்டைச் சேர்ந்த முக்கியமான கருவி வகைகளாகும்.

விடை: 

கீழ் பழங்கற்கால 

2. கற்கருவிகளை உருவாக்குவதற்குத் தேவையான வழிமுறைகளும் நுட்பமும் ……………………. தொழில் நுட்பம் என அழைக்கப்படுகின்றன.

விடை: 

கற்கருவி 

3. பழங்கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலம் ……………. எனப்படும்.

விடை: 

இடைக்காலம் 


III. சரியான கூற்றைத் தேர்வு செய்க 

1. அ) மனிதர்களின் தோற்றத்தை அறிவியல் நோக்கில் புரிந்து கொள்ள ‘தகுதியுள்ளது தப்பிப்பிழைக்கும்' என்ற கருத்து உதவுகிறது.

ஆ) ‘உயிர்களின் தோற்றம் குறித்து' என்ற நூலை ஹெர்பர்ட் ஸ்பென்சர் பதிப்பித்தார். 

இ) உயிரியல் பரிணாம வளர்ச்சி குறித்த டார்வின் கோட்பாடு இயற்கைத்தேர்வு என்ற வழிமுறையுடன் தொடர்பு உடையது. 

ஈ) கல் தொழில்நுட்பம் குறித்து ஆராய்வது நிலவியல் ஆகும் 

விடை: 

அ) மனிதர்களின் தோற்றத்தை அறிவியல் நோக்கில் புரிந்து கொள்ள ‘தகுதியுள்ளது தப்பிப்பிழைக்கும்' என்ற கருத்து உதவுகிறது


2. அ) குரங்கினங்களில் உராங் உட்டான் மனித மரபுக்கு மிக நெருக்கமான குரங்கினமாகும். 

ஆ) மனிதர்களின் முன்னோர்களை ஹோமினின் என்கிறோம், அவர்களின் தோற்றம் குறித்த சான்றுகள் ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன. 

இ) செதிலை கருவிகள் செய்ய பயன்படுத்த முடியாது. 

ஈ) சிறு செதில்கள் தயாரிக்கப் பயன்படும் மூலக்கல் அச்சூலியன் எனப்படும்.

விடை: 

ஆ) மனிதர்களின் முன்னோர்களை ஹோமினின் என்கிறோம், அவர்களின் தோற்றம் குறித்த சான்றுகள் ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன.


IV. பொருத்துக. 

1. பழங்கால மானுடவியல் – தேரி 

2. கோடரிக்கருவிகள் – வீனஸ் 

3. கல்லிலும் எலும்பிலும் காணப்பட்ட உருவங்கள் – அச்சூலியன்

4 செம்மணல் மேடுகள் - நுண்கற்காலம் 

5 சிறு அளவிலான கல்லால் ஆன செய்பொருள்கள் – 

மனித இன முன்னோர்கள் குறித்த ஆய்வு

விடை: 

1. பழங்கால மானுடவியல் – மனித இன முன்னோர்கள் குறித்த ஆய்வு

2. கோடரிக்கருவிகள்  – அச்சூலியன்

3. கல்லிலும் எலும்பிலும் காணப்பட்ட உருவங்கள் – வீனஸ்

4 செம்மணல் மேடுகள் - தேரி

5 சிறு அளவிலான கல்லால் ஆன செய்பொருள்கள் – நுண்கற்காலம்

Tags : Evolution of Humans and Society - Prehistoric Period | History | Social Science மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம் | வரலாறு | சமூக அறிவியல்.
9th Social Science : History : Evolution of Humans and Society - Prehistoric Period : One Mark Questions Answers Evolution of Humans and Society - Prehistoric Period | History | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம் | வரலாறு | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம்