இடைக்காலம் | வரலாறு | சமூக அறிவியல் - விரிவான விடையளி | 9th Social Science : History: The Middle Ages

   Posted On :  05.09.2023 01:23 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்காலம்

விரிவான விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்காலம் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : சுருக்கமான விடை தருக.

VI. விரிவான விடையளி

1. சோகுனேட்களின் கீழ் ஜப்பானின் எழுச்சி பற்றி விரிவாகக் கூறுக.

விடை:

தாரா, மினமோட்டா எனும் குடும்பங்களுக்கிடையே நடைபெற்ற போரில் யோரிடோமோ வெற்றி பெற்றார்.

கி.பி.(பொ.) 1192 இல் பேரரசர் இவருக்கு செ-ய்-தாய் சோகன் என்ற பட்டம் சூட்டினார்.

காலப்போக்கில் சோகன் உண்மையான ஆட்சியாளரான போது சோகுனேட்டுகளின் ஆட்சி உருவானது.

யோரிடோமோ தனது ராணுவத் தலைமையகத்தை காமகுராவில் நிறுவினார். இது,முதல் சோகுனேட் காமகுரா சோகுனேட் என அழைக்கப்பட்டது.

வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் ஜப்பான் தனக்கேயுரிய வழிகளில் சீனத்தைப் பின்பற்றியது.

நிலப்பிரபுத்துவ ராணுவத் தன்மை கொண்ட அரசு சாமுராய் எனப்பட்ட இராணுவ வீரர்களால் நிர்வகிக்கப் பட்டது.

ஐரோப்பாவை பயமுறுத்திய மங்கோலியரை சோகுனேட்டுகளின் தலைமையில் ஜப்பான் வெற்றி கொண்டது.

கி.பி.(பொ.) 1338-ல் காமகுரா சோகுனேட் வீழ்ச்சியடைந்தது. அதன்பின், அஷிக்காகா சோகுனேட்க் ஆட்சியைக் கைப்பற்றினர்.

இக்காலக்கட்டம் அரசியல் குழப்பங்களும் அதிகாரப் போட்டிகளும் நிறைந்ததாய் இருந்தது.

இறுதியில் போர்புநகா என்ற பிரபு, டய்ம்யாஸ் மற்றும் தொகுகவா இய்யாசு ஆகியோர் ஜப்பானை உள்நாட்டுப் போர்களிலிருந்து மீட்டனர்.

 

2. மங்கோலியர்கள் என்பவர் யார்? அவர்கள் சீனாவை எவ்வாறு ஆட்சி செய்தனர்?

விடை:

மங்கோலியர் ஆட்சி :

வெளிநாட்டவர் படையெடுப்புகள் சீனாவில் சுங் அரச வம்ச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்ததைத் தொடர்ந்து யுவான் அரச வம்சம் என்ற பெயரில் மங்கோலியர்கள் ஆட்சியை நிறுவினர். பாரசீகத்தையும், ஒட்டு மொத்த மத்திய ஆசியாவையும் கைப்பற்றிய மங்கோலியர்கள் சீனாவையும் கைப்பற்றி கி,பி, 1252-இல் மங்குகான் குப்ளேகானை சீனாவின் ஆளுநராகப் பணியமர்த்தினார்.

யூரேசியாவில் பரவியிருந்த மங்கோலிய ஆதிக்கம், சீனாவின் தொழில் நுட்ப முன்னேற்றங்களை வளர்ச்சி குன்றிய மேற்கு சமூகங்களிடையே பரப்ப உதவியது. பெய்ஜிங் அரச சபை மார்க்கோ போலோ போன்ற வெளிநாட்டவர்களிடம் நன்மதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

விவசாயிகள் வறுமையில் வாடினர். மதம் சார்ந்த அமைப்புகளம், ரகசிய அமைப்புகளும் புரட்சியில் இறங்கின.

சிகப்பு தலைப்பாகைகள் (Red Turbans) அமைப்பின் தலைவர் சூ யுவான் சங் கி.பி. 1369-ல் தன்னை பேரரசராகப் பிரகடனப்படுத்திக் கொண்டார்.

 

வரலாற்றுடன் வலம் வருக

 மாணவர் செயல்பாடுகள்

1. உலக வரைபடத்தில் வரலாற்றுக்கு முந்தைய கால நாகரிகம் நிலவிய பகுதிகளைக் குறிக்கவும்.

2. வரலாற்றுக்கு முந்தைய காலம் தமிழ்நாட்டில் நிலவிய இடங்கள் என்ற தலைப்பில் ஒரு கண்காட்சியை அமைக்கவும்.

ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் செய்ய வேண்டியவை

1. உதுமானியரின் குடும்பவழித் தோன்றல்களை அட்டவணைப்படுத்தவும்எகிப்தின்  சலாதீன், உதுமானியப் பேரரசின் உன்னத சுலைமான் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய குறிப்புகளை எழுதவும்.

2. சிங்க இதயம் கொண்ட இங்கிலாந்தின் ரிச்சர்ட் மற்றும் ஜெர்மானியப் பேரரசர் பிரடரிக் பார்பரோசா மேற்கொண்ட சிலுவைப் போர்கள் குறித்து எழுதுக.

 

மேற்கோள் நூல்கள்

1. . இராசாராம் - சீனா, ஜப்பான் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் வரலாறு (கி.பி.1066வரை).பா....கழகம், சென்னை6(ஆவணப்பதிப்பு - ஆகஸ்ட் 2017).

2. . உஸ்மான் ஷெரீப் - உத்மானிய துருக்கியர்களின் வரலாறு, .பா.... கழகம், சென்னை -6 (ஆவணப்பதிப்பு - ஆகஸ்ட் 2017)

3. தி.வை. சொக்கப்பா - அரபுமக்களின் வரலாறு, .பா.... கழகம், சென்னை -6 (ஆவணப்பதிப்பு - ஆகஸ்ட் 2017)

4. Jawaharlal Nehru, Glimpses of World History, Penguin.

5. Chris Harman, People's History of the World, Verso, 1999

6. Philip Ralph and Edward McNail Burns, The World Civilizations: From the Stone Age to the New Millennium, Library of Congress, 1968.

7. Richard Overy(ed.), Complete History of the World, Harper Collins, 2007

8. Paul Kennedy, Rise and Fall of the Great Powers: Economic Change and Military Conflict, Harper Collins, 2007.

 

Tags : The Middle Ages | History | Social Science இடைக்காலம் | வரலாறு | சமூக அறிவியல்.
9th Social Science : History: The Middle Ages : Answer the following in detail The Middle Ages | History | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்காலம் : விரிவான விடையளி - இடைக்காலம் | வரலாறு | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்காலம்