Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | சுருக்கமான விடையளி

இடைக்காலம் | வரலாறு | சமூக அறிவியல் - சுருக்கமான விடையளி | 9th Social Science : History: The Middle Ages

   Posted On :  05.09.2023 01:20 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்காலம்

சுருக்கமான விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்காலம் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : சுருக்கமான விடை தருக.

V. சுருக்கமான விடையளி


1. சீனப் பெருஞ்சுவர்

விடை:

சீனப் பெருஞ்சுவர்:

தங்களுக்குள்ளே போரிட்டுக் கொண்டிருந்த சீன அரசுகள், வடக்கேயிருந்து வரும் எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, கி.மு. 8 மற்றும் 7ஆம் நூற்றாண்டுகளில் இடைப்பட்ட காலத்தில் சுவர்களை எழுப்பிக் கொண்டன.

கிழக்கிலிருந்து மேற்காக, சின் அரசவம்சத்தின் காலத்தில் தனித்தனியாக இருந்த சுவர்கள் இணைக்கப்பட்டு சுமார் 5000 கி.மீ. நீளமுடைய உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் பெருஞ்சுவர் உருவானது.

வலுவூட்டப்பட்ட சீனப் பெருஞ்சுவரின் மொத்த நீளம் 6700 கிலோ மீட்டர் ஆகும்.

 

2. சிலுவைப் போர்களின் தாக்கம்.

சிலுவைப்போர்களின் தாக்கம் :

நிலப்பிரபுத்துவம் சார்ந்த உறவுகளுக்கு முடிவு கட்டியது. பண்ணை அடிமைகள் பலர் நிலத்தோடு தங்களை கட்டிப் போட்டிருந்த அடிமைக்கட்டுகளை உடைத்து வெளியேறினர்.

கீழை நாட்டுப் பொருட்களுக்கான தேவை அதிகரித்ததால் வியாபாரம் பெருகியது. வெனிஸ், ஜெனோவா, பைசா ஆகிய நகரங்கள் முக்கிய வணிக மையங்களாக உருவெடுத்தன. கிழக்கும் மேற்குமான கான்ஸ்டாண்டி நோபிளின் இடைத்தரகர் பாத்திரம் முடிவுக்கு வந்தது.

இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் முடியாட்சி வலுப்பெற்றது. போப்பின் ஆட்சிமுறை செல்வாக்கையும் மரியாதையையும் இழந்தது.

 

3. இடைக்காலத்தில் நிலப்பிரபுத்துவம் எவ்வாறு அமைக்கப்பட்டிருந்தது?

விடை:

நிலப்பிரபுத்துவ முறை அண்டியிருத்தலை மையமாகக் கொண்டது.

அரசர் - கவுளின் பிரதிநிதி. நிலப்பிரபுத்துவத்தின் தலைவராகக் கருதப்பட்டார். நிலங்களைப் பிரித்து நிலப்பிரபுகளுக்கு கொடுத்தார்.

நிலப்பிரபுக்கள் - கோமகன்களாகக் கருதப்பட்ட டியூக்குகள் 'கவுண்ட்டுகள், ‘யேல்'கள், அரசரிடம் இருந்து நிலம் பெற்றுக்கொண்டு அவருக்காக போரிட்டவர்கள். இவர்கள் தாங்கள் பெற்ற நிலங்களைப் பிப் (Fief) துண்டுகளாகப் பிரித்து வைஸ் கவுண்ட் என்போருக்கு விநியோகம் செய்தனர். அரசவை அண்டியிருந்தோர்.

வைஸ் கவுண்ட் - நிலப்பிரபுக்களிடம் பிப் துண்டு நிலங்களைப் பெற்று அவர்களை அண்டியிருந்தோர். நைட் (சிறப்புப்பணி வீரர்கள்) - தங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை வேறு எவருக்கும் பிரித்து தர முடியாது. பிரபுக்களை அண்டியிருந்தோர்.

பண்ணை அடிமைகள் - அனைவருக்கும் கீழ் அடி மட்டத்தில் இருந்தவர்கள். இவர்கள் வில்லொயன் அல்லது செர்ப் என அறியப்பட்டனர்.

 

4. இடைக்காலத்தில், சமயகுருமார்கள் தங்கள் அதிகாரத்தை வலியுறுத்தப் பயன்படுத்திய இரண்டு கருவிகள் யாவை?

விடை:  

திருச்சபையிலிருந்து விலக்கம்: தகுதியான கிறிஸ்தவனுக்குறிய உரிமைகள் மறுக்கப்படுதல். திருச்சபைக்குள் புனித சடங்குகளை நிறைவேற்ற முடியாது. இறந்தபின் உடலை திருச்சபைக் கல்லறையில் புதைக்க முடியாது..

மத விலக்கம்: ஓர் அரச குடிமகனுக்கு தகுதியான சமயம் சார்ந்த பயன்களை மறுத்தல். அரசனுக்கு எதிராக வெறுப்பு கொள்ளத் தூண்டுவது.

Tags : The Middle Ages | History | Social Science இடைக்காலம் | வரலாறு | சமூக அறிவியல்.
9th Social Science : History: The Middle Ages : Answer the following briefly The Middle Ages | History | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்காலம் : சுருக்கமான விடையளி - இடைக்காலம் | வரலாறு | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்காலம்