Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி
   Posted On :  25.12.2023 06:20 am

11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள்

பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி

11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள் : பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி

II. பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி.


26. நீரில் சோடியம் ஹைட்ராக்சைடின் கரைதிறன், சோடியம் குளோரைடின் கரைதிறனை விட மிக அதிகம் ஏன்?

i) NaOH வலிமை மிகு காரம்

ii) இது நீரில் தீவிரமாக நீரேற்றம் அடைவதால் (NaOH.H2O () NaOH.2H2O) வெப்பத்தை வெளியேற்றி அதிகம் கரைகிறது மற்றும் இது ஒரு நீர் ஈர்க்கும் திண்மம்.

iii) NaCl 273K வெப்பநிலையில் 100g நீரில் 36.0g கரைதிறனைக் கொண்டுள்ளது.

iv) வெப்பநிலை அதிகரிப்பால் கரைதிறன் அதிகரிப்பதில்லை.


27. சோடியம் கார்பனேட்டை தயாரிக்கும் சால்வே முறையில் நிகழும் வேதிவினைகளின் சமன்பாடுகளை எழுதுக.

2NH3 + H2O + CO2 → (NH4)2 CO3 

(NH4)2 CO3 + H2O + CO2 → 2NH4 HCO3 

2NH4 HCO3 + NaCl → NH4Cl + NaHCO3 

2 NaHCO3 → Na2CO3 + CO2 + H2O


28. ஒரு கார உலோகம் (X) அதன் நீரேற்றிய சல்பேட் X2SO4.10H2O உருவாக்குகிறது. அந்த உலோகம் சோடியமாகவோ அல்லது பொட்டாசியமாகவோ இருக்க வாய்ப்புள்ளதா?

i) Na2SO4.10H2O உருவாக வாய்ப்பு அதிகம். x = Na

ii) கார உலோகங்களின் நீரேற்றம் பெறும் தன்மை உருவளவிற்கு எதிர்த்தகவில் உள்ளது.

iii) Li+ < Na+ < K+

(iv) K+ விட Na+அயனியின் சிறிய உருவளவு அதிக நீரேற்ற விகிதத்திற்கு காரணம்.


29. பின்வரும் வேதி வினைகளுக்கு சமன்படுத்தப்பட்ட சமன்பாடுகளை எழுதுக.

(i) நைட்ரஜன் வாயுவுடன் லித்தியம் வினைபுரிதல்

(ii) திட சோடியம் பைகார்பனேட்டை வெப்பப்படுத்துதல்

(iii) ஆக்சிஜன் வாயுவுடன் ருபீடியம் வினைபுரிதல் 

(iv) CO2 உடன் திண்ம பொட்டாசியம் ஹைட்ராக்சைடு வினைபுரிதல்

(v) கால்சியம் கார்பனேட்டை வெப்பப்படுத்துதல்

(vi) ஆக்சிஜன் வாயுடன் கால்சியம் சேர்த்து வெப்பப்படுத்துதல்

(i) 6Li + N2 → 2Li3N



30. பெரிலியம் மற்றும் அலுமினியத்திற்கு இடையேயான ஒற்றுமைகளை சுருக்கமாக விவாதிக்கவும்.

பண்புகள்

1. அலுமினியம் குளோரைடைப் போன்றே, குளோரைடு இணைப்பு பாலத்தினைக் கொண்டுள்ள இரட்டை வடிவமைப்பினை பெரிலியம் குளோரைடு கொண்டுள்ளது. இருமை வடிவத்தினை பெற்றிருப்பதுடன், பலபடிசார் சங்கிலி வடிவமைப்பை உடைய வடிவமைப்பினையும் பெரிலியம் குளோரைடு பெற்று உள்ளது. இரண்டும் கரிமக் கரைப்பான்களில் கரைகின்ற மற்றும் வலிமையான லூயி அமிலங்களாகும்.

2. அதிகப்படியான காரத்தில் பெரிலியம் ஹைட்ராக்ஸைடு கரைந்து பெரிலேட் அயனியை [Be(OH)4]2− மற்றும் [Al(OH)4] ஹைட்ரஜனைத் தருகிறது. இது அலுமினியம் ஹைட்ராக்ஸைடு, அலுமினேட் அயனியைத் தருவதைப் போல் உள்ளது.

3. பெரிலியம் மற்றும் அலுமினியம் (BeF42−, AlF63−]போன்ற அணைவுச் சேர்மங்களைத் தரும் இயல்பினை அதிக அளவில் பெற்றுள்ளது.

4. பெரிலியம் மற்றும் அலுமினியத்தின் ஹைட்ராக்சைடுகள் ஈரியல்புத் தன்மையினைப் பெற்றுள்ளன

5. பெரிலியம் கார்பைடானது நீராற்பகுப்பில், அலுமினியம் கார்பைடைப் போலவே மீத்தேனைத் தருகிறது

6. பெரிலியம் மற்றும் அலுமினியம், நைட்ரிக் அமிலத்தால் செயலற்றதாகிறது.



31. பின்வருவற்றிற்கு முறையான பெயர்களைத் தருக.

(i) மெக்னீசிய பால்மம்

(ii) கடுங்காரம்

(iii) சுண்ணாம்பு

(iv) எரி பொட்டாஷ்

(v) சலவை சோடா

(vi) சோடா சாம்பல்

(vii) ட்ரோனா(trona]

விடை :

(i) மெக்னீசிய பால்மம்மெக்னீசியம் ஹைட்ராக்ஸைடு

(ii) கடுங்காரம்பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு

(iii) சுண்ணாம்பு  − கால்சியம் ஆக்ஸைடு

(iv) எரி பொட்டாஷ்பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு

 (v) சோடா சாம்பல்நீரற்ற சோடியம் கார்பனேட்

(vi) ட்ரோனா (trona) − சோடியம் கார்பனேட் + சோடியம் பை கார்பனேட்


32. முதல் தொகுதி உலோக புளூரைடுகளில் லித்தியம் புளூரைடு மிகக்குறைந்த கரைதிறனை கொண்டுள்ளது - உறுதிப்படுத்து.

i) LiF ஒரு சகப்பிணைப்புச் சேர்மம், மற்ற புளுரைடுகள் அயனிப் படிகங்கள்.

ii) Li+ மிகச்சிறிய நேர்மின் அயனி.

iii) அதிக முனைவுறுத்தும் திறன் கொண்டது.


33. பாரீஸ் சாந்தின் பயன்களைக் குறிப்பிடுக.

i) கட்டுமானத் தொழிலில் இது அதிக அளவில் பயன்படுகிறது.

ii) ஒரு உறுப்பில் எலும்பு முறிவு அல்லது சுளுக்கு பாதிக்கப்பட்டுள்ள இடங்களை நகராமல் இருத்தி வைக்கப் பயன்படுகிறது.

iii) பற்சீராக்கும் துறை, அணிகலன்கள் உருவாக்கும் தொழில், சிலைகள் மற்றும் வார்ப்புகள் உருவாக்குவதில் பயன்படுகிறது.


34. பெரிலியத்தின் ஹேலைடுகள் சகப்பிணைப்புத் தன்மை உடையவை ஆனால் மெக்னீசியத்தின் ஹேலைடுகள் அயனித்தன்மை உடையவை ஏன்?

Be−ன் சிறிய உருவளவு, அதிக எலக்ட்ரான் கவர்திறன். அதிக அயனியாக்கும் ஆற்றல் மற்றும் அதிக முனைவுறுத்தும் திறன்.


35. மூன்றாம் வரிசையை சேர்ந்த காரமண் உலோகம் (A), ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜனுடன் வினைப்பட்டு முறையே சேர்மங்கள் (B) மற்றும் (C) தருகின்றன. இது AgNO3 கரைசலுடன் உலோக இடபெயர்ச்சி வினைக்குட்பட்டு சேர்மம் (D) தருகிறது. (A), (B), (C), மற்றும் (D) கண்டுபிடி.

3ம் வரிசையைச் சேர்ந்த காரமண் உலோகம்

(A) − Mg



36. பின்வரும் செயல்முறைகளுக்கான சமன்செய்யப்பட்ட சமன்பாடுகளை எழுதுக.

() கால்சியம் ஹைட்ரஜன் கார்பனேட் கரைசலை ஆவியாக்குதல்

() கால்சியம் ஆக்சைடை கார்பனுடன் சேர்த்து வெப்பப்படுத்துதல்.

) Ca(HCO3)2 → CaCO3 + CO2 + H2O.



37. இரண்டாம் தொகுதி தனிமங்களின் முக்கியமான பொதுப்பண்புகளை விளக்குக.

1. எலக்ட்ரான் அமைப்பு (மந்த வாயு) ns2

2. அணு மற்றும் அயனி ஆரம் தொகுதியில் அதிகரிக்கிறது.

3. பொதுவான ஆக்ஸிஜனேற்ற நிலை +2. 

4. அயனியாக்கும் ஆற்றல் குறைகிறது.

5. அதிக நீரேற்று என்தால்பி பெற்றுள்ளன. நீரேற்று ஆற்றல் வரிசை Be > Mg > Ca > Sr > Ba 

6. எலக்ட்ரான் கவர் தன்மை தொகுதியில் குறைகிறது

7. HCl அமிலத்தை வைத்து ஈரமாக்கப்பட்ட காரமண் உலோக உப்புக்கள் சுடரில் குறிப்பிட்ட நிறச்சுடரைத் தருகின்றன

Ca − செங்கல் சிவப்பு, Sr − கிரிம்சன் சிவப்பு, Ba − ஆப்பிள் பச்சை.


38. பெரிலியம் மற்றும் அலுமினியத்திற்குமான ஒத்தத் தன்மைகளை விவரிக்க

பெரிலியம் அலுமினியத்துடன் மூலைவிட்டத் தொடர்பினைக் கொண்டுள்ளது

இதனால் ஓரலகு பரப்பில் அவைகளின் பண்புகள் நெருக்கமாக உள்ளன.

பண்புகள்

1. அலுமினியம் குளோரைடைப் போன்றே, குளோரைடு இணைப்பு பாலத்தினைக் கொண்டுள்ள இரட்டை வடிவமைப்பினை பெரிலியம் குளோரைடு கொண்டுள்ளது. இருமை வடிவத்தினை பெற்றிருப்பதுடன், பலபடிசார் சங்கிலி வடிவமைப்பை உடைய வடிவமைப்பினையும் பெரிலியம் குளோரைடு பெற்றுள்ளது. இரண்டும் கரிமக் கரைப்பான்களில் கரைகின்ற மற்றும் வலிமையான லூயி அமிலங்களாகும்.

2. அதிகப்படியான காரத்தில் பெரிலியம் ஹைட்ராக்ஸைடு கரைந்து பெரிலேட் அயனியை [Be(OH)4]2− மற்றும் ஹைட்ரஜனைத் தருகிறது. இது அலுமினியம் ஹைட்ராக்ஸைடு, அலுமினேட் அயனியைத் [Al(OH)4] தருவதைப் போல உள்ளது.

3. பெரிலியம் மற்றும் அலுமினியம் [BeF42−, AlF63−]போன்ற அணைவுச் சேர்மங்களைத் தரும் இயல்பினை அதிக அளவில் பெற்றுள்ளது.

4. பெரிலியம் மற்றும் அலுமினியத்தின் ஹைட்ராக்சைடுகள் ஈரியல்புத் தன்மையினைப் பெற்றுள்ளன

5. பெரிலியம் கார்பைடானது நீராற்பகுப்பில், அலுமினியம் கார்பைடைப் போலவே மீத்தேனைத் தருகிறது

6. பெரிலியம் மற்றும் அலுமினியம், நைட்ரிக் அமிலத்தால் செயலற்றதாகிறது.


39. கார உலோகங்களை விட கார மண் உலோகங்கள் கடினமானவை ஏன்

i) கார மண் உலோகங்களின் அணுக்கள் / அயனிகள் கார உலோகங்களின் அணுக்கள் / அயனிகள் விட கடினமானவை மற்றும் உருவளவு சிறியவை.

ii) எனவே படிகத்தின் அணுக்கள் / அயனிகள் நெருங்கிப் பொதிந்துள்ளது.


40. பாரீஸ் சாந்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

i) இது கால்சியம் சல்பேட்டின் ஹெமிஹைட்ரேட்டாகும்

ii) ஜிப்சத்தை (CaSO4.2H2O) 393K வெப்பநிலைக்கு வெப்பப்படுத்தி பாரீஸ்சாந்து பெறப்படுகிறது

CaSO4 2H2O(s) → CaSO4 .H2O + 3H2


41. ஜிப்சத்தின் பயன்களைத் தருக

1. உலர் பலகைகள், பூச்சுப் பலகைகள் தயாரிப்பதில் ஜிப்சம் பயன்படுகிறது. சுவர்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கவும், மேற்கூரைகள் மற்றும் அறைகளை பகுதிகளாக பிரிக்கவும், பூச்சுப் பலகைகள் பயன்படுகிறது.

2. ஜிப்சத்தினை 300 டிகிரி பாரன்ஹீட்டில் சூடுபடுத்தி பாரீஸ்சாந்து தயாரிக்கப்படுகிறது. இது ஜிப்சம் பூச்சு எனவும் அழைக்கப்படுகிறது. முக்கியமாக இது சிற்பங்களை வடிவமைப்பதில் பயன்படுகிறது.

3. வேளாண்மைத் துறையில் மண்ணுடன் சேர்க்கப்படும் பொருளாகவும், கட்டுப்படுத்தியாகவும், உரமாகவும் பயன்படுகிறது. களிமண் மற்றும் இறுக்கமான மண்ணை நெகிழச் செய்வதுடன், தாவர வளர்ச்சிக்கு முக்கியமாக பயன்படும் கால்சியம் மற்றும் சல்பரை தரும் பொருளாக உள்ளது. மண்ணிற்கு அதிக உப்புத் தன்மையைத் தரும் Na+அயனிகளை நீக்கவும் பயன்படுகிறது.

4. ஜிப்சம் முக்கியமாக இணைத்தல் மற்றும் கெட்டியாக்கும் பண்புகளைப் பெற்றுள்ளதால் பற்பசை, ஷாம்புகள் மற்றும் முடித் தொடர்பான பொருட்களில் பயன்படுகிறது.

5. போர்ட்லாண்டு சிமெண்டுகளில், ஜிப்சம் ஒரு முக்கியப் பகுதிப் பொருளாகும். இது கடினமாதலை தாமதப்படுத்தும் காரணியாக செயல்படும் தன்மையைப் பெற்றிருப்பதால் கான்கிரீட்டுகள் கடினமாகும் வேகத்தினைக் கட்டுப்படுத்துகிறது.


42. கால்சியம் மற்றும் மெக்னீசியத்தின் உயிரியல் முக்கியத்துவத்தை சுருக்கமாக விவரி

உயிர் செயல்முறைகளில் மெக்னீசியம் மற்றும் கால்சியம் மிக முக்கியப் பங்காற்றுகிறது.

ஒரு சராசரி மனித உடலில் 25g மெக்னீசியம் மற்றும் 1200g கால்சியம் அடங்கியுள்ளது

நொதிகள் வினையூக்கிகளாகச் செயல்படும் உயிர் வேதி வினைகளில் மெக்னீசியம் முக்கிய பங்காற்றுகிறது.

பாஸ்பேட் பரிமாற்றம் மற்றும் ஆற்றல் வெளிப்படுத்துதலில் ATPயை பயன்படுத்தும் நொதிகளில் இது இணைக் காரணியாகவும் செயல்படுகிறது.

இது DNA தொகுத்தலுக்கும் அதன் செயல்பாடுகளுக்கும் மிக முக்கியமானதாகும்.

நம் உடலில் மின் பகுளிகளை சமன்படுத்தும் பணியிலும் இது பயன்படுகிறது.

இதன் குறைபாடு வலிப்பு மற்றும் நரம்புத்தசை இணைப்பில் எரிச்சல் (neuromuscular irritation) உருவாக காரணமாக அமைகிறது.

எலும்பு மற்றும் பற்களில் முக்கிய பகுதிப்பொருளாக கால்சியம் பயன்படுகிறது.

இது இரத்தத்திலும் காணப்படுகிறது. கால்சிடோனின் மற்றும் பாரா தைராய்டு ஹார்மோன்களால் இரத்தத்தில் இதன் அளவு பராமரிக்கப்படுகிறது

இரத்தத்தில் கால்சியத்தின் குறைபாட்டினால் இரத்தம் உறைய அதிக நேரம் ஆகிறது.

மேலும் இது தசைச் சுருக்கத்திற்கும் முக்கிய காரணமாகிறது.

ஒளிச்சேர்க்கையில் முக்கியப்பங்கு வகிக்கும் முக்கிய நிறமியான குளோரோபில் மெக்னீசியத்தினைக் கொண்டுள்ளது.


43. மெக்னீசியம் ஆக்சைடு அல்லது மெக்னீசியம் புளூரைடு இவற்றில் எது அதிக உருகுநிலையை கொண்டிருக்கும் என்று நீ எதிர்பார்க்கிறாய்? அதற்கான காரணத்தை விளக்கு.

i) MgO −ன் உருகுதல் என்தால்பி மதிப்பு மிக அதிகம்

ii) எனவே நிலைப்புத்தன்மை மிக அதிகம்.

MgO−ன் உருகுநிலை − 2852°C

MgF ன் உருகுநிலை− 1263°C.

11th Chemistry : UNIT 5 : Alkali and Alkaline Earth Metals : Answer the following questions: Alkali and Alkaline Earth Metals (Chemistry) in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள் : பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள்