Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | முக்கோணத்தின் அடிப்படைக் கூறுகள்

வடிவியல் | பருவம் 2 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு - முக்கோணத்தின் அடிப்படைக் கூறுகள் | 6th Maths : Term 2 Unit 4 : Geometry

   Posted On :  22.11.2023 03:31 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : வடிவியல்

முக்கோணத்தின் அடிப்படைக் கூறுகள்

ஒரு காகிதத்தில் ஒரே நேர்க்கோட்டில் அமையாதவாறு A, B, C என்ற மூன்று புள்ளிகளைக் குறித்து AB, BC மற்றும் CA ஆகிய மூன்று கோட்டுத்துண்டுகளை இணைக்கவும்.

முக்கோணத்தின் அடிப்படைக் கூறுகள்

ஒரு காகிதத்தில் ஒரே நேர்க்கோட்டில் அமையாதவாறு A, B, C என்ற மூன்று புள்ளிகளைக் குறித்து AB, BC மற்றும் CA ஆகிய மூன்று கோட்டுத்துண்டுகளை இணைக்கவும்.


இது ABC என்ற முக்கோணத்தை உருவாக்குகிறது. இதனை ∆ABC அல்லது ∆BCA அல்லது ∆CAB என்றும் குறிக்கலாம்.

∆ABC இல் கோட்டுத்துண்டுகள் AB, BC மற்றும் CA ஆகியவை முக்கோணத்தின் பக்கங்களாகவும், CAB, ABC மற்றும் BCA (A,B மற்றும் C) ஆகியவை முக்கோணத்தின் கோணங்களாகவும் அமைகின்றன. முக்கோணத்தின் எவையேனும் இரண்டு பக்கங்கள் வெட்டிக்கொள்ளும் புள்ளியை முனை என்கிறோம். ∆ABC இல் A, B மற்றும் C ஆகியவை மூன்று முனைகள் ஆகும். எனவே, ஒரு முக்கோணமானது 3 பக்கங்கள், 3 கோணங்கள் மற்றும் 3 முனைகளைப் பெற்றிருக்கும்.

சிந்திக்க

ஒரே நேர்க்கோட்டில் அமைந்த மூன்று புள்ளிகளைக் கொண்டு முக்கோணம் வரைய இயலுமா?


Tags : Geometry | Term 2 Chapter 4 | 6th Maths வடிவியல் | பருவம் 2 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 2 Unit 4 : Geometry : Basic Elements of a Triangle Geometry | Term 2 Chapter 4 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : வடிவியல் : முக்கோணத்தின் அடிப்படைக் கூறுகள் - வடிவியல் | பருவம் 2 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : வடிவியல்