கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | வடிவியல் | பருவம் 2 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 4.2 | 6th Maths : Term 2 Unit 4 : Geometry

   Posted On :  22.11.2023 05:44 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : வடிவியல்

பயிற்சி 4.2

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : வடிவியல் : பயிற்சி 4.2 : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 4.2


1. AB = 7 செ.மீ அளவில் ஒரு கோட்டுத்துண்டு வரைந்து கோட்டுத்துண்டின் மீது P என்ற புள்ளியைக் குறிக்கவும். P வழியே AB கோட்டுத்துண்டிற்குச் செங்குத்துக்கோடு வரைக.

விடை :


படி 1 : AB = 7செ.மீ என்ற கோடு வரைந்து, கோட்டின் மீது P என்ற புள்ளியைக் குறிக்க 

படி 2 : மூலைமட்டத்தின் செங்கோணம் உருவாக்கும் முனையானது P என்ற புள்ளியிலும் மற்றும் செங்கோணத்தை உருவாக்கும் ஒரு பக்கம் AB என்ற கோட்டின் மீதும் பொருத்துக

படி 3 : மூலைமட்டத்தின் செங்கோணத்தை உருவாக்கும் மற்றொரு பக்கத்தின் விளிம்பை ஒட்டி P என்ற புள்ளியிலிருந்து PQ என்ற கோடு வரைக

படி 4 : கோடு PQ ஆனது AB–க்குச் செங்குத்துக் கோடாகும். அதாவது PQ ┴AB மற்றும் APQ = BPQ = 90°.


2. LM = 6.5 செ.மீ அளவில் ஒரு கோட்டுத்துண்டு வரைக. கோட்டுத்துண்டின் மீது அமையாதவாறு (மேலே/கீழே) P என்ற புள்ளியைக் குறிக்க. மூலைமட்டத்தைப் பயன்படுத்தி P வழியே LM கோட்டுத்துண்டிற்குச் செங்குத்துக்கோடு வரைக.

விடை :


படி 1: LM= 6.5 செ.மீ என்ற கோடு வரைக. கோடு LM விற்கு மேலே P என்ற புள்ளியைக் குறிக்க

படி 2 : மூலைமட்டத்தின் செங்கோணத்தை உருவாக்கும் ஒரு பக்கம் LM கோட்டின் மீதும் மற்றொரு பக்கம் P என்ற புள்ளியைத் தொடுமாறும் படத்தில் காட்டியுள்ளவாறு அமைக்க

படி 3 : மூலைமட்டத்தின் மற்றொரு விளிம்பை ஒட்டி P இன் வழியே கோடு LM Q இல் சந்திக்குமாறு ஒரு கோடு வரைக

படி 4 : கோடு PQ ஆனது LM க்குச் செங்குத்துக் கோடாகும். அதாவது PQ ┴LM.


3. கொடுக்கப்பட்ட ஒவ்வொரு சோடி கோடுகளுக்கும் இடையேயான தொலைவை இரு வேறு புள்ளிகளில் மூலைமட்டத்தைப் பயன்படுத்திக் கண்டறிக. அவை இணைகோடுகளா? என்பதைச் சோதித்தறிக.


விடை :

ஆம் இணைகோடுகள் 


4. 7.8 செ.மீ அளவில் ஒரு கோட்டுத்துண்டு வரைக. கோட்டுத்துண்டிற்கு மேலே 5 செ.மீ தூரத்தில் B என்ற புள்ளியைக் குறிக்க. B வழியே கோட்டுத்துண்டிற்கு இணைகோடு வரைக.

விடை :


படி1 : MN = 7.8 செ.மீ அளவுள்ள ஒரு கோட்டுத்துண்டு வரைந்து MN க்கு மேலே B என்ற புள்ளியைக் குறிக்க

படி 2 : கோட்டுத்துண்டு MN இன் கீழாக மூலை மட்டத்தைப் பொருத்துக. மூலைமட்டத்தின் மற்றொரு விளிம்பை ஒட்டி அளவுகோலைப் பொருத்துக.

படி 3 : அளவுகோலை நகர்த்தாமல் மூலைமட்டத்தை B என்ற புள்ளி வரை நகர்த்துக. மூலைமட்டத்தின் விளிம்பை ஒட்டி B வழியாக AB என்ற கோடு வரைக

படி 4 : கோடு MN ஆனது AB–க்கு இணைக் கோடாகும். அதாவது MN || AB.


5. ஒரு கோடு வரைக. கோட்டிற்குக் கீழே 5.4 செ.மீ தூரத்தில் R என்ற புள்ளியைக் குறிக்க. R வழியே அக்கோட்டிற்கு இணைகோடு வரைக.

விடை :


படி 1 : அளவுகோலைப் பயன்படுத்தி AB என்ற கோடு வரைக. கோட்டின் மீது Q என்ற புள்ளியைக் குறிக்க

படி 2: மூலைமட்டத்தின் செங்கோணத்தை உருவாக்கும் ஒரு பக்கம் AB என்ற கோட்டின் மீதும், செங்கோணத்தை உருவாக்கும் முனை Q என்ற புள்ளியிலும் படத்தில் காட்டியுள்ளவாறு அமைக்க. Qவிலிருந்து 5.4 செ.மீ தூரத்தில் R என்ற புள்ளியைக் குறிக்க

படி 3: அளவுகோல் மற்றும் மூலைமட்டத்தைப் படத்தில் காட்டியவாறு பொருத்துக.

படி 4 : அளவுகோலை நகர்த்தாமல் மூலைமட்டத்தை R என்ற புள்ளி வரை நகர்த்துக. மூலைமட்டத்தின் விளிம்பை ஒட்டி R வழியே RS என்ற கோடு வரைக

படி 5 : RS ஆனது AB என்ற கோட்டிற்கு இணைகோடாகும். RS||AB.


Tags : Questions with Answers, Solution | Geometry | Term 2 Chapter 4 | 6th Maths கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | வடிவியல் | பருவம் 2 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 2 Unit 4 : Geometry : Exercise 4.2 Questions with Answers, Solution | Geometry | Term 2 Chapter 4 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : வடிவியல் : பயிற்சி 4.2 - கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | வடிவியல் | பருவம் 2 அலகு 4 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : வடிவியல்