Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | தொடர் உடற்பயிற்சியின் நன்மைகள் (Benefits of Regular Exercise)
   Posted On :  09.01.2024 02:45 am

11 வது விலங்கியல் : பாடம் 9 : இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம்

தொடர் உடற்பயிற்சியின் நன்மைகள் (Benefits of Regular Exercise)

உடற்பயிற்சி மற்றும் உடற்செயல்பாடுகளை 4 அடிப்படை வகைகளாகப் பிரிக்கலாம். அவை தாங்கும் தன்மை, உறுதித்தன்மை, சமநிலைத்தன்மை மற்றும் வளைந்து கொடுக்கும் தன்மை ஆகியனவாகும்.

தொடர் உடற்பயிற்சியின் நன்மைகள்  (Benefits of Regular Exercise) 

உடற்பயிற்சி மற்றும் உடற்செயல்பாடுகளை 4 அடிப்படை வகைகளாகப் பிரிக்கலாம். அவை தாங்கும் தன்மை, உறுதித்தன்மை, சமநிலைத்தன்மை மற்றும் வளைந்து கொடுக்கும் தன்மை ஆகியனவாகும்.

தாங்கும் தன்மை: சுவாசப்பயிற்சிகள், சுவாசம் மற்றும் இதயச் செயல் அளவு ஆகியவற்றை உயர்த்துகின்றது. இது இரத்த ஓட்ட மண்டலத்தை நலமுடன் வைத்து உடலின் கட்டமைப்பை மேம்படுத்துகிறது.

உறுதித்தன்மை உடற்பயிற்சி (Strength Exercises): இது தசைகளை மேலும் உறுதியாக்குகின்றது. இது தனித்தன்மமையுடன் இருக்கவும் அன்றாட  செயல்பாடுகளான மாடிப்படி ஏறுதல் மற்றும் சுமைப்பபைகளைத் தூக்குதல் போன்றவற்றைச் செய்யப் பயன்படுகின்றது.

சமநிலைப்பயிற்சி: இது வயதானவர்களிடம் பொதுவாகக் காணப்படுகின்ற தவறி விழுந்துவிடல் போன்றனவற்றைத் தடுக்க உதவும் பயிற்சியாகும். பல உடல் உறுதிப்பயிற்சிகள் உடல் சமநிலையையும் மேம்படுத்துகிறது.

வளைந்து கொடுக்கும் தன்மைப் பயிற்சி: மூட்டுகள் சுதந்திரமாக இயங்குவதற்கு ஏற்றபடி உடல் தசைகள் நீட்சியடைய இது உதவி செ ய்கிறது


தொடர் உடற்பயிற்சியினால் பல உடற்சசெயலியல் நன்மமைகள் உண்டு. அவை :


தசைகள் நீண்டு வளர்வதுடன் உறுதியாகின்றது.


இதயத் தசை ஓய்வு வீதம் குறைகின்றது.


தசைநார்களில் நொதிகளின் உற்பத்தி உயர்கின்றது.


தசைநார்கள் மற்றும் தசை நாண்கள் உறுதியடைகின்றன.


மூட்டுகள் மேலும் வளையும் தன்மையடைகின்றது.


மாரடைப்பிலிருந்து பாதுகாப்பு கிடைக்கின்றது.


ஹார்மோன்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.


அறிவாற்றல் தொடர்பான பணிகளை மேம்படுத்துகிறது.


உடல் பருமனைத் தடுக்கிறது.


தன்னம்பிக்கையையும்  மரியாதையையும் அதிகரிக்கிறது.


நல்ல உடற்கட்டு அழகுப்பண்பைக் கூட்டும்


தரமான வாழ்வுடன் ஒட்டுமொத்தமாக உடல் நலமடைகின்றது.


மன அழுத்தம், தகைப்பு மற்றும் பதட்டம் ஆகியவற்றைத் தடுகிறது.


உடற்பயிற்சி செய்யும்போது வளர்சிதை மாற்ற வீதம் அதிகரிக்கிறது. அதற்கேற்ப தசைகளில் ஆக்ஸிஜன் தேவையும் அதிகரிக்கிறது. இத்தேவையை ஈடுசெய்ய அதிக அளவு ஆக்ஸிஜன் கொண்ட இரத்த சிவப்பணுக்கள், செயல்படும் மையங்களுக்குச் செல்கின்றன. இதய துடிப்பும், இதயத்திலிருந்து வெளியேறும் இரத்தத்தின் அளவும் அதிகமாகிறது. தசைகளையும் எலும்புகளையும் உறுதியாக்க, சரிவிகித உணவுடன், உடற்பயிற்சியும் முக்கிய பங்காற்றுகிறது.

11th Zoology : Chapter 9 : Locomotion and Movement : Benefits of regular Exercise in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 9 : இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் : தொடர் உடற்பயிற்சியின் நன்மைகள் (Benefits of Regular Exercise) - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 9 : இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம்