Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | இயன் மருத்துவம் (Physiotherapy)
   Posted On :  09.01.2024 05:38 am

11 வது விலங்கியல் : பாடம் 9 : இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம்

இயன் மருத்துவம் (Physiotherapy)

செயலிழந்த கை, கால்களை உடற்பயிற்சி சிகிச்சை மூலம் இயல்பாகச் செயல்பட வைக்கும் முறையே இயன் மருத்துவம் ஆகும்.

இயன் மருத்துவம் (Physiotherapy)

செயலிழந்த கை, கால்களை உடற்பயிற்சி சிகிச்சை மூலம் இயல்பாகச் செயல்பட வைக்கும் முறையே இயன் மருத்துவம் ஆகும். மறுவாழ்வளிக்கும் தொழில் முறையான இந்தச் சிகிச்சை முறை, எல்லா உடல் நல மையங்களிலும் மேற்கொள்ளப் படுகிறது. பிஸியோதெரபிஸ்ட் எனப்படும் இயன் மருத்துவர்கள், சிகிச்சைக்கான பயிற்சிகளை அளிப்பர். தசைகள் வீணாதல் மூட்டுகள் விறைத்த நிலைக்குச் செல்லுதல் ஆகியன எலும்பு முறிவு சிகிச்சையின் இறுதியில் ஏற்படுகின்றன. இயன் மருத்துவ சிகிச்சை முறையான தொடர் உடற்பயிற்சி மூலம் மேலே குறிப்பிட்ட பிரச்சினைகளைச் சரிசெய்யலாம். மூட்டு வலி, ஸ்பான்டைலோசிஸ், தசை மற்றும் எலும்பு குறைபாடுகள் பக்கவாதம் மற்றும் தண்டுவடப் பாதிப்பு போன்றவற்றை இம்முறையில் தீர்க்கலாம் என நிரூபணம் ஆகியுள்ளது.

11th Zoology : Chapter 9 : Locomotion and Movement : Physiotherapy in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 9 : இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் : இயன் மருத்துவம் (Physiotherapy) - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 9 : இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம்