நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் | அலகு 9 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - சேர்மங்கள் | 8th Science : Chapter 9 : Matter Around Us

   Posted On :  28.07.2023 08:28 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 9 : நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

சேர்மங்கள்

ஒரு சேர்மம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் சேர்க்கையின் நிறை வேதிச் மூலம் இணைத்து உருவாகும் தூய பொருளாகும். சேர்மத்தின் பண்புகள் அவற்றின் பகுதிப்பொருள்களின் பண்புகளிலிருந்து வேறுபடுகின்றன.

சேர்மங்கள்

ஒரு சேர்மம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் சேர்க்கையின் நிறை வேதிச் மூலம் இணைத்து உருவாகும் தூய பொருளாகும். சேர்மத்தின் பண்புகள் அவற்றின் பகுதிப்பொருள்களின் பண்புகளிலிருந்து வேறுபடுகின்றன. நீர், கார்பன் டைஆக்சைடு, சோடியம் குளோரைடு ஆகியவை சேர்மங்களுக்கான சில எடுத்துக்காட்டுகளாகும். ஒரு மூலக்கூறு நீரில் ஓர் ஆக்சிஜன் அணுவும், இரு ஹைட்ரஜன் அணுக்களும் 1:2 என்ற கன அளவு விகிதத்தில் அல்லது 81 என்ற நிறை விகிதத்தில் இணைந்து காணப்படுகின்றன.

 

1. சேர்மங்களின் வகைப்பாடு

சேர்மங்களின் பகுதிப்பொருள்கள் எவற்றிலிருந்து பெறப்படுகின்றன என்பதின் அடிப்படையில் அவற்றை கனிமச்சேர்மங்கள், கரிமச்சேர்மங்கள் என இரு வகைகளாகப் பிரிக்கலாம்.


அ. கனிமச் சேர்மங்கள்

பாறைகள், தாதுக்கள் போன்ற உயிரற்ற பொருள்களிலிருந்து கிடைக்கப் பெறும்  சேர்மங்கள் கனிமச் சேர்மங்கள் என  அழைக்கப்படுகின்றன

எ.கா. சுண்ணக்கட்டி, ரொட்டி சோடா போன்றவை.


ஆ. கரிமச் சேர்மங்கள்

தாவரங்கள், விலங்குகள் போன்ற உயிருள்ள மூலங்களிலிருந்து கிடைக்கும் சேர்மங்கள் கரிமச்சேர்மங்கள் என் அழைக்கப்படுகின்றன எடுத்துக்காட்டு புரதம், கார்போஹைட்ரேட் போன்றவை.

கனிம மற்றும் கரிமச்சேர்மங்கள் திண்மம், திரவம் மற்றும் வாயு ஆகிய மூன்று நிலைகளிலும் காணப்படுகின்றன. திண்ம. திரவ மற்றும் வாயுநிலைகளில் காணப்படும் சில முக்கிய சேர்மங்களைப்பற்றி காண்போம்.

திட நிலையிலுள்ள சேர்மங்கள் சில அட்டவணை 9.7 ல் கொடுக்கப்பட்டுள்ளன.


திரவநிலையிலுள்ள சேர்மங்கள் அட்டவணை 9.8 ல் கொடுக்கப்பட்டுள்ளன.


ஒருசில சேர்மங்கள் வாயு நிலையில் காணப்படுகின்றன. அவை அட்டவணை 9.9 ல் கொடுக்கப்பட்டுள்ளன.



 

2. சேர்மங்களின் பயன்கள்

நாம் அன்றாட வாழ்வில் பல்வேறு சேர்மங்களைப் பயன்படுத்துகிறோம் அவற்றின் பகுதிப் பொருள்களை அட்டவணையில் 9.10 ல் காணலாம்.


Tags : Classsification and Uses | Matter Around Us | Chapter 9 | 8th Science நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் | அலகு 9 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 9 : Matter Around Us : Compounds Classsification and Uses | Matter Around Us | Chapter 9 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 9 : நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் : சேர்மங்கள் - நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் | அலகு 9 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 9 : நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்