நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் | அலகு 9 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - தனிமங்கள் | 8th Science : Chapter 9 : Matter Around Us
தனிமங்கள்
தனிமங்கள் எங்கும் நிறைந்துள்ளன. பென்சில், மேசை,மலை, வாகனம்,
புத்தகம் போன்ற பூமியில் உள்ள அனைத்துப் பொருள்களின் கட்டுமானத் தொகுதிகளாக தனிமங்கள்
உள்ளன. சுவாசிக்கும் போது நீங்கள் உண்மையிலேயே காற்றை சுவாசிக்கிறீர்கள் என்பது உங்களுக்குத்
தெரியுமா? நீங்கள் சுவாசிக்கும் காற்று ஆக்சிஜன், நைட்ரஜன் மற்றும் ஆர்கான் போன்ற பல
தனிமங்களால் ஆனது.
தனிமம் என்பது ஒரு தூய பொருள் அதை இரசாயன முறைகளால் எளிமையான
கூறுகளாக உடைக்க முடியாது. உதாரணமாக, தங்கம் என்ற தனிமத்தை, தங்கத்தைத் தவிர வேறு எந்தக்
கூறுகளாகவும் உடைக்க முடியாது. நீங்கள் தங்கத்தை ஒரு சுத்தியலால் அடித்தால், அது சிறு
சிறு துண்டுகளாக மாறிவிடும். ஆனால், ஒவ்வொரு துண்டும் எப்போதும் தங்கமாகவே இருக்கும்.
தனிமங்கள் ஒரே வகை அணுக்களையே கொண்டிருக்கும். ஒரு அணு என்பது
ஒரு தனிமத்தின் மிகச்சிறிய துகள் ஆகும். அது அந்தத் தனிமத்தின் பண்புகளை மட்டுமே கொண்டிருக்கும்.
தனிமத்தின் அனைத்து ஒரு குறிப்பிட்ட அணுக்களும் ஒரே மாதிரியான வேதியியல் அமைப்பு, அளவு
மற்றும் நிறை ஆகியவற்றைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு அணுவிற்கும் ஒரு அணு எண் உள்ளது, இது
அந்தத் தனிமத்தின் அணுவின் உட்கருவில் இருக்கும் புரோட்டான்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.
மொத்தம் 118 தனிமங்கள் உள்ளன. பல தனிமங்கள் இயற்கையாகவே பூமியில் கிடைக்கின்றன. இருப்பினும்,
ஒருசில தனிமங்கள் ஆய்வகத்தில் அறிவியலாளர்களால் உருவாக்கப்படுகின்றன.
1. தனிமங்களின்
குறியீடுகள்
ஒரு குறிப்பிட்ட பொருளை உணர்த்தக்கூடிய உருவம், பொருள் ஆகியவையே
குறியீடு எனப்படும். எடுத்துக்காட்டாக, நாம் அமைதியின் குறியீடாக புறாவைக் கூறுகிறோம்.
அதுபோல கணிதச் செயல்பாடுகளையும் நாம் குறியீடு மூலம் குறிக்கிறோம். உதாரணமாக கூட்டல்
செயலை '+' என்ற குறியீட்டினாலும், கழித்தல் செயலை'' என்ற குறியீட்டினாலும் குறிக்கிறோம்.
இதுபோலவே, வேதியியலில் ஒவ்வொரு தனிமமும் ஒரு குறியீட்டினால் குறிக்கப்படுகிறது. ஒவ்வொரு
முறையும் தனிமத்தின் பெயரை எழுதுவது என்பது மிகவும் கடினமாக இருக்கும். எனவே, தனிமத்தின்
பெயரினை குறியீடாக சுருக்க வடிவில் குறிக்கின்றோம். தனிமங்களின் குறியீடு பற்றிய வரலாற்றை
இங்கு சுருக்கமாகக் காண்போம்.
அ. கிரேக்கக் குறியீடுகள்
நம்மைச் சுற்றியுள்ள நான்கு இயற்கைக் கூறுகளான நிலம், நீர்,
காற்று மற்றும் நெருப்பைக் குறிக்க வடிவியல் உருவங்களை பண்டைய கிரேக்கர்கள் பயன்படுத்தினார்.
ஆ. இரசவாதிகளின் குறியீடுகள்
இரசவாதிகளின் காலத்தில் சிலர் குறைந்த மதிப்புடைய உலோகங்களை
தங்கமாக மாற்ற முயற்சித்தனர். அவர்களின் செயலுக்கு இரசவாதம் என்று பெயர். அவ்வாறு செய்பவர்கள்
இரசவாதிகள் அழைக்கப்பட்டனர் இரசவாதிகள் என் பயன்படுத்திய தாம் வெவ்வேறு பொருள்களை கீழ்க்காணும்
குறியீடுகளால் குறித்தனர்.
இ. டால்டனின் குறியீடுகள்
1808ல் ஜான் டால்டன் என்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அறிவியல்
அறிஞர் பல்வேறு தனிமங்களை படங்களைக் கொண்டு குறித்தார். ஆனால், அப்படங்களை வரைவது அவ்வளவு
எளிதாக இல்லாத காரணத்தால் அவை பயன்படுத்தப்படவில்லை. எனவே, இவை வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்தவையாக மட்டுமே உள்ளன.
ஈ. பெர்சிலியஸ் குறியீடுகள்
ஜான் ஜேகப் பெர்சிலியஸ் என்பவர் 1813 ஆம் ஆண்டு தனிமங்களைக்
குறிப்பதற்த படங்களுக்குப் பதிலாக ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தும் முறை ஒன்றை
உருவாக்கினார். பெர்சிலியஸ் முறையின் மாற்றியமைக்கப்பட்ட வடிவமே தனிமங்களின் குறியீடுகளைத்
தீர்மானிக்கும் முறை எனப் பின்பற்றப்படுகிறது.
உ. தனிமங்களின் குறியீடுகளைத் தீர்மானிக்கும் தற்கால முறை
1. தனிமங்கள், பெரும்பாலும் அலோகங்கள் அவற்றின் ஆங்கிலப் பெயர்களின்
முதல் எழுத்துக்களைக் குறியீடுகளாகக் கொண்டுள்ளன.
2. இரு தனிமங்களின் ஆங்கிலப் பெயர் ஒரே முதல் எழுத்தைக் கொண்டிருந்தால்
முதலி இரண்டு எழுத்துக்களையும் சேர்த்து அவற்றின் குறியீடு எழுதப்படுகிறது.
இவ்வாறு எழுதும்போது முதல் எழுத்து பெரிய எழுத்தாகவும், இரண்டாவது
எழுத்து சிறிய, எழுத்தாகவும் எழுதப்படுகிறது.
3. குறியீட்டின் முதல் இரண்டு எழுத்துக்களும் ஒன்றாகவே உள்ள
தனிமங்களுள் ஒரு தனிமத்திற்கு முதல் இரண்டு எழுத்துக்களும், மற்றொரு தனிமத்திற்க முதல்
மற்றும் மூன்றாவது எழுத்தும் குறியீடாகப் பயன்படுத்தப்படுகின்றன.
4. சில தனிமங்களின் குறியீடுகள் அவற்றின் அடிப்படையில் எழுதப்படுகின்றன.
இவ்வாறு 11 தனிமங்கள் பெயரிடப்பட்டுள்ளன.
கிரேக்கப் பெயர்களின்
5. சில தனிமங்களின் பெயர்கள் அறிவியல் அறிஞர்கள், நிறம், புராண
கதாபாத்திரங்கள், கோள்களின் பெயர்கள் நாடுகள், இவற்றிலிருந்து பெறப்படுகின்றன.
2. ஒரு
தனிமத்தின் குறியீட்டை எழுதுதல்
ஒரு தனிமத்தின் குறியீட்டை எழுதும்போது பின்வரும் விதி முறைகளைக்
கடைபிடிக்க வேண்டும்.
1. ஒரு தனிமம் தனித்த ஆங்கில எழுத்தைக் குறியீடாகக் கொண்டிருந்தால்
அவ்வெழுத்தினை பெரிய எழுத்தில் எழுத வேண்டும்.
2. இரண்டு
எழுத்துக்களைக் குறியீடாகக் கொண்ட தனிமங்களுக்கு முதல் எழுத்தினை ஆங்கில பெரிய எழுத்திலும்,
தொடர்ந்து வரும் எழுத்தினை ஆங்கில சிறிய எழுத்திலும் எழுத வேண்டும்.