நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் | அலகு 9 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - உலோகப் போலிகள் | 8th Science : Chapter 9 : Matter Around Us
உலோகப் போலிகள்
உலோகப் பண்புகளையும், அலோகப் பண்புகளையும் பெற்றுள்ள தனிமங்கள்
உலோகப் போலிகள் எனப்படுகின்றன. எடுத்துக்காட்டு போரான், சிலிக்கான், ஆர்சனிக், ஜெர்மானியம்,
ஆண்டிமனி,டெல்லூரியம் மற்றும் பொலோனியம்.
அ. உலோகப் போலிகளின் இயற்பியல் பண்புகள்
• உலோகப் போலிகள் அனைத்தும் அறைவெப்பநிலையில் திண்மங்கள்.
• உலோகப் போலிகள் பிற உலோகங்களுடன் சேர்ந்து உலோகக் கலவைகளை
ஏற்படுத்துகின்றன.
• சிலிக்கான், ஜெர்மானியம் போன்ற உலோகப் போலிகள் குறிப்பிட்ட
சூழ்நிலைகளில் மின்சாரத்தைக் கடத்துகின்றன. எனவே, அவை குறைகடத்திகள் என அழைக்கப்படுகின்றன.
• சிலிக்கான் பளபளப்பானது (உலோகப் பண்பு). ஆனால், தகடாக விரியும்
பண்பையோ, கம்பியாக நீளும் பண்பையோ பெற்றிருப்பதில்லை. இது, உலோகங்களை விட குறைந்த அளவே
மின்சாரத்தையும், வெப்பத்தையும் கடக்கிறது.
• உலோகப்போலிகளின் இயற்பியல் பண்புகளை பண்புகள் உலோகங்களின்
ஒத்திருக்கின்றன. ஆனால் அவற்றின் பண்புகள் அலோகங்களின் வேதியியல் பண்புகளை ஒத்திருக்கின்றன.
ஆ. உலோகப் போலிகளின் பயன்கள்
.• சிலிக்கான் மின்னணுக் கருவிகளில் பயன்படுகிறது.
• போரான் பட்டாசுத் தொழிற்சாலையிலும், ராக்கெட் எரிபொருளைப்
பற்றவைக்கும் பொருளாகவும் பயன்படுகிறது.