Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் | அலகு 9 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் | 8th Science : Chapter 9 : Matter Around Us

   Posted On :  09.09.2023 10:45 pm

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 9 : நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 9 : நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் : நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

நினைவில் கொள்க

இடத்தை அடைத்துக் கொள்ளக்கூடிய மற்றும் நிறையை உடைய பொருள் பருப்பொருள் எனப்படும்.

வெவ்வேறு தனிமங்களின் ஒன்றுக்கு மேற்பட்ட அணுக்கள் ஒரு குறிப்பிட்ட நிறை விகிதத்தில் வேதிவினையின் மூலம் இணைந்து உருவாகும் புதிய பொருள் சேர்மம் எனப்படும்.

அறை வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட வடிவமும், குறிப்பிட்ட கன அளவும், பல்வேறு மேற்பரப்பையும் கொண்டுள்ள பொருள் திண்மம் என அழைக்கப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட கன அளவு கொண்ட, குறிப்பிட்ட வடிமற்ற ஒரே மேற்பரப்பைக் கொண்ட பொருள் திரவம் என அழைக்கப்படுகிறது.

குறிப்பிட்ட வடிவமோ, குறிப்பிட்ட கன அளவோ அற்ற, எளிதில் அழுத்தப்படக் கூடிய மேற்பரப்பு இல்லாத பொருள் வாயு எனப்படும்.

கடினமான, பளபளப்புள்ள தனிமங்கள் உலோகங்கள் என அழைக்கப்படுகின்றன. உலோகங்கள் வெப்பத்தையும் மின்சாரத்தையும் நன்கு கடத்துபவை. இரும்பு, தாமிரம், தங்கம், வெள்ளி, போன்றவை அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் சில உலோகங்களாகும்.

பளபளப்பற்ற, அதிக கடினத்தன்மையோ, அதிக மென்மைத்தன்மையோ அற்ற பொருள்கள் அலோகங்கள் எனப்படுகின்றன, அனைத்து வாயுக்களும் அலோகங்கள். ஆகும். கந்தகம், கார்பன், ஆக்சிஜன் போன்றவை அலோகங்களுக்கு சில எடுத்துக்காட்டுகளாகும்

உலோகப் பண்புகளையும் அலோகப் பண்புகளையும் பெற்றுள்ள தனிமங்கள் உலோகப்

 

சொல்லடைவு

கிருமிநாசினி நுண்ணுயிரிகளை அழிப்பதற்கோ அல்லது கட்டுப்படுத்துவதற்கோ பயன்படும் வேதிப்பொருள்.

குறைக்கடத்தி குறைந்த வெப்பநிலையில் அரிதிற்கடத்தியாகவும், உயர் வெப்ப நிலையில் நற்கடத்தியாகவும் செயல்படும் பொருள்

குறைப்பான் ஆக்சிஜனேற்ற வினைக்கு உட்படும் பொருள்

கார்போஹைட்ரேட் கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனை உள்ளடக்கிய சேர்மம்

வெளுப்பான் நிறம் நீக்கும் வேதிப்பொருள்

உணவு பாதுகாப்பான் உணவுப்பொருள்கள் நுண்ணுயிரிகளால் கெட்டுப்போகாமல் தடுக்கும் வேதிப்பொருள்.




பிற நூல்கள்

1. Suresh S, Keshav A. "Textbook of Separation Processes, Studium Press (India) Pvt. Ltd (ISBN: 978-93-80012-32-2), 1-459, 2012.

2. Biochemical Techniques Theory and Practice Paperback - 2005 by Robyt J.F ISBN 10: 0881335568 ISBN 13:9780881335569 Published by Waveland Press, Inc., Prospect Heights, IL, 1990


இணையதள வளங்கள்

1. https://schools.aglasem.com/1747

2. https://www. chemi.com/acad/webtext/pre/ pre-1.html


இணையச் செயல்பாடு


நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

இந்த செயல்பாடு மாணவர்களுக்கு பொருளின் பல்வேறுநிலையை அறிய உதவுகிறது

படிநிலைகள்

படி 1: கீழ்க்காணும் உரலி/விரைவுக்குறியீட்டைப் பயன்படுத்தி இச்செயல்பட்டிற்கான இணையப் பக்கத்திற்குச் செல்க.

படி 2: "States of Matter: Basics" என்ற தலைப்பைத் தெரிவு செய்க.

படி 3: பருப்பொருளின் நிலைகள் திரையில் தெரியும் ஆய்வினைத்தொடரவும்.

படி 4: அடுத்தடுத்து சொடுக்கி பருப்பொருள்களின் நிலைகள் குறித்து நன்கு அறியவும்.

உரலி: https://phet.colorado.edu/sims/html/states-of-matter-basics/latest/ states-of-matter-basics_en.htm (or) scan the QR Code

தேவையெனில் Adobe Flashஐ அனுமதிக்க.


Tags : Matter Around Us | Chapter 9 | 8th Science நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் | அலகு 9 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 9 : Matter Around Us : Points to Remember, Glossary, Concept Map Matter Around Us | Chapter 9 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 9 : நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் : நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் - நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் | அலகு 9 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 9 : நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்