கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | விகிதம் | பருவம் 1 அலகு 3 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 3.1 | 6th Maths : Term 1 Unit 3 : Ratio and Proportion

   Posted On :  21.11.2023 03:08 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : விகிதம் மற்றும் விகித சமம்

பயிற்சி 3.1

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : விகிதம் மற்றும் விகித சமம் : பயிற்சி 3.1 : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 3.1


1. கோடிட்ட இடங்களை நிரப்புக.

(i) ₹3 இக்கும் ₹5 இக்கும் உள்ள விகிதம்____________. 

விடை: 3 : 5

(ii) 3 மீ இக்கும் 200 செமீ இக்கும் உள்ள விகிதம்_________________.

விடை: 3 : 2

(iii) 5 கி.மீ இக்கும் 400 மீ இக்கும் உள்ள விகிதம்_________________.

விடை: 9 : 10 

(iv) 75 பைசாவுக்கும் ₹2 இக்கும் உள்ள விகிதம்______________.

விடை : 3 : 8


2. கீழ்க்காணும் கூற்றுகள் சரியா தவறா எனக் கூறுக.

(i) 130 செ.மீ இக்கும் 1 மீ இக்கும் உள்ள விகிதம் 13:10 [சரி

(ii) விகிதத்தின் ஏதேனும் ஓர் உறுப்பின் மதிப்பு 1 ஆக இருக்காது. [தவறு]


3. கீழ்க்காணும் விகிதங்களுக்கு எளிய வடிவம் காண்க.

(i) 15 : 20

(ii) 32 : 24

(iii) 7 : 15

(iv) 12 : 27

(v) 75 : 100

விடை



4. அகிலன் 1 மணி நேரத்தில் 10 கி.மீ நடக்கிறான். செல்வி 1 மணி நேரத்தில் 6 கி.மீ நடக்கிறாள். எனில், அகிலன் மற்றும் செல்வி நடந்த தொலைவுகளுக்கு இடையே உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க.

விடை

அகிலன் மற்றும் செல்வி நடந்த தொலைவுகளுக்கு உள்ள விகிதம் = 10: 6


= 10/6 = 5/3 = 5 : 3


5. ஒரு மிதிவண்டியின் நிறுத்தக் கட்டணம் ₹5. மேலும், ஓர் இருசக்கர மோட்டார் வாகனத்தின் நிறுத்தக் கட்டணம் ₹15. மிதிவண்டி மற்றும் இருசக்கர மோட்டார் வாகன நிறுத்தக் கட்டணங்களுக்கு இடையே உள்ள விகிதத்தைக் காண்க.

விடை

மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகன நிறுத்தக் கட்டணங்களுக்கு இடையே உள்ள விகிதம் = ₹.5: ₹.15


=5/ 15 = 1/3 =1: 3


6. ஒரு வகுப்பில் உள்ள 50 மாணாக்கர்களில் 30 பேர் மாணவர்கள் எனில்,

(i) மாணவர்களின் எண்ணிக்கைக்கும் மாணவிகளின் எண்ணிக்கைக்கும் இடையேயுள்ள விகிதம் காண்க.

விடை: 30 : 50 = 30/50 = 3 : 5


(ii) மாணவிகளின் எண்ணிக்கைக்கும் மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கும் இடையேயுள்ள விகிதம் காண்க.

விடை: 20 : 50 = 20/50 = 2 : 5


(iii) மாணவர்களின் எண்ணிக்கைக்கும் மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கும் இடையேயுள்ள விகிதம் காண்க.

விடை: 30 : 50 = 30/50 = 3 : 5




புறவய வினாக்கள்


7.  ₹1 இக்கும் 20 பைசாவுக்கும் உள்ள விகிதம்_____________.

() 1 : 5

() 1 : 2

() 2 : 1

() 5 : 1

[விடை: () 5 : 1]


8. 1 லி இக்கும் 50 மி.லி இக்கும் உள்ள விகிதம்____________.

() 1 : 5

() 1 : 20 

() 20 : 1

() 5 : 1

[விடை: () 20 : 1]


9. ஒரு சன்னலின் நீள அகலங்கள் முறையே 1 மீ மற்றும் 70 செ.மீ எனில் நீளத்திற்கும் அகலத்திற்கும் உள்ள விகிதம்__________.

() 1 : 7

() 7 : 1

() 7 : 10

() 10 : 7

[விடை: () 10 : 7]


10. முக்கோணம் மற்றும் செவ்வகத்தின் பக்கங்களின் எண்ணிக்கைகளுக்கு இடையேயுள்ள விகிதம்

() 4 : 3

() 3 : 4

() 3 : 5

() 3 : 2

[விடை: () 3 : 4]


11. அழகனின் வயது 50 மற்றும் அவரது மகனின் வயது 10 எனில் அழகன் மற்றும் அவரது மகனின் வயதுக்கான விகிதத்தின் எளிய வடிவம்

() 10 : 50

() 50 : 10

() 5 : 1

() 1 : 5

[விடை: () 5 : 1]

Tags : Questions with Answers, Solution | Ratio | Term 1 Chapter 3 | 6th Maths கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | விகிதம் | பருவம் 1 அலகு 3 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 1 Unit 3 : Ratio and Proportion : Exercise 3.1 Questions with Answers, Solution | Ratio | Term 1 Chapter 3 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : விகிதம் மற்றும் விகித சமம் : பயிற்சி 3.1 - கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | விகிதம் | பருவம் 1 அலகு 3 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : விகிதம் மற்றும் விகித சமம்