விகிதம் மற்றும் விகித சமம் | பருவம் 1 அலகு 3 | 6 ஆம் வகுப்பு கணக்கு - நினைவில் கொள்க | 6th Maths : Term 1 Unit 3 : Ratio and Proportion
நினைவில் கொள்க
● இரண்டு அளவுகளை வகுத்தலின் மூலம் ஒப்பிடுவது விகிதம் ஆகும்.
● பொதுவாக விகிதங்கள் பின்னங்களாக எளிய வடிவத்தில் எழுதப்படும்.
● விகிதத்திற்கு அலகு இல்லை.
● விகிதத்தின் இரண்டு அளவுகளும் ஒரே அலகினைப் பெற்றிருக்கும்.
● விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்ற முடியாது.
● சமான விகிதத்தைப் பெற விகிதத்தின் பகுதியையும் தொகுதியையும் ஒரே எண்ணால் பெருக்க வேண்டும்.
● இரண்டு விகிதங்கள் சமம் எனில், அவை விகித சமம் எனப்படும்.
● விகிதசம விதிப்படி, கோடி உறுப்புகளின் பெருக்கற்பலனானது, நடுஉறுப்புகளின் பெருக்கற்பலனுக்குச் சமம்.
● ஓரலகு முறை என்பது ஓர் அலகின் மதிப்பினைக் கண்டறிந்து, தேவைப்படும் அலகின் எண்ணிக்கையின் மதிப்பினைக் கண்டறிதல் ஆகும்.
இணையச் செயல்பாடு
விகிதம் மற்றும் விகித சமம்
இறுதியில் கிடைக்கப்பெறும் படம்
படி– 1 : உலாவியில் கீழே கொடுக்கப்பட்டுள்ள உரலியைத் தட்டச்சு செய்க. அல்லது துரித துலங்கல் குறியீட்டை ஸ்கேன் செய்க.
படி– 2 : ஜியோஜீப்ராவில் "Ratio and Proportion" என்ற பயிற்சிதாள் தோன்றும். இரண்டு வகை வண்ணங்களில் மணித்தொகுப்புகள் தோன்றும்.
படி –3 : அதில் ஒவ்வொரு ஜோடி வண்ணமணிகளின் விகிதங்களை கண்டறிக. வலது பக்கத்தில் உள்ள "+" and "–" பொத்தானை சொடுக்குவதன் மூலம் மணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும்.
படி –4 : உங்கள் விடையை சரிபார்க்க "Pattern 1" மற்றும் "Pattern 2" பொத்தானை அழுத்தவும். மணிகளின் எண்ணிக்கையை அதிகரித்து மற்றும் குறைத்து வெவ்வேறு கணக்குகளை செய்து பார்க்கலாம்.
செயல்பாட்டிற்கான உரலி
விகிதம் மற்றும் விகித சமம் : – https://www.geogebra.org/m/fcHk4eRW