கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் | பருவம் 2 அலகு 3 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 3.2 | 6th Maths : Term 2 Unit 3 : Bill, Profit and Loss

   Posted On :  22.11.2023 03:24 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 3 : பட்டியல், இலாபம் மற்றும் நட்டம்

பயிற்சி 3.2

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 3 : பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் : பயிற்சி 3.2 : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 3.2


பல்வகைத் திறனறிப் பயிற்சிக் கணக்குகள்


1. ஒரு விற்பனையாளர் மூன்று பொருட்களை  ₹325, ₹450 மற்றும்  ₹510 என வாங்குகிறார். அவற்றை முறையே  ₹350, ₹425 மற்றும்  ₹525 என விற்பனை செய்கிறார். அவருடைய மொத்த இலாபம் அல்லது நட்டம் காண்க.

விடை

மூன்று பொருட்களின் மொத்த அடக்க விலை

= 325 + 450 + 510

= 1285 

மூன்று பொருட்களின் மொத்த விற்பனை விலை

= 350 + 425 + 525

= 1,300

அடக்க விலை < விற்பனை விலை 

இலாபம் = விற்பனை விலைஅடக்க விலை

= 1,300 – 1,285 = 15


2. ஒரு பல்பொருள் அங்காடி விற்பனையாளர்  ₹750இக்கு ஒரு கணிப்பானை வாங்கினார். அதனுள் ₹100 மதிப்புள்ள மின்கலம் பொருத்தினார். அதன் வெளி உறைக்காக ₹50 செலவிட்டார். அதை  ₹850இக்கு அவரால் விற்பனை செய்ய முடிந்தது எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.

விடை

அடக்க விலை = 750 + 100 + 50

= 900 

விற்பனை விலை = 850 

விற்பனை விலை < அடக்க விலை 

நட்டம் = அடக்க விலைவிற்பனை விலை

= 900 – 850 

நட்டம் = 50


3. நாதன் ஒரு கிராமத்து விற்பனையாளரிடமிருந்து  ₹800இக்கு 10 குடுவைகள் தேன் வாங்கினார். அவற்றை ஒரு நகரத்தில் ஒரு குடுவை  ₹100 வீதம் விற்பனை செய்தார். அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.

விடை

10 குடுவைகள் தேனின் அடக்கவிலை = 800 

அடக்க விலை = 800 

10 குடுவைகள் தேனின் விற்பனை விலை

= 100 × 10 

விற்பனை விலை = 1000 

விற்பனை விலை > அடக்க விலை 

இலாபம் = விற்பனை விலைஅடக்க விலை

= 1,000 – 800

= 200


4. ஒருவர் 400 மீட்டர் நீளமுள்ள துணியை ₹60,000இக்கு வாங்கி, ஒரு மீட்டர்  ₹400 வீதம் விற்பனை செய்தார் எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.

விடை

400 மீ நீளமுள்ள துணியின் அடக்க விலை

= 60,000 

அடக்க விலை = .60,000 

400 மீ துணியின் விற்பனை விலை

= 400 × 400 

விற்பனை விலை = 1,60,000 

விற்பனை விலை > அடக்க விலை 

இலாபம் = விற்பனை விலைஅடக்க விலை

= 1,60,000 – 60,000

= 1,00,000 



மேற்சிந்தனைக் கணக்குகள்


5. ஒரு வியாபாரி ஒரு டசன்  ₹20 வீதம் 2 டசன் வாழைப்பழங்கள் வாங்கினார். ஒரு வாழைப்பழம்  ₹3 வீதம் அவற்றை விற்பனை செய்தார் எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.

விடை

2 டசன் வாழைப்பழங்களின் அடக்கவிலை = 2 × 20

அடக்கவிலை = 40

2 டசன் = 24வாழைப்பழங்கள்

2 டசன் வாழைப்பழங்களின் விற்பனை விலை = 3 × 24 

விற்பனை விலை = 72 

விற்பனை விலை > அடக்க விலை 

இலாபம் = விற்பனை விலைஅடக்க விலை

= 72 – 40 

= 32


6. ஒரு விற்பனை நிலையம் ஒரு டசன் பேனாக்களை  ₹216இக்கு வாங்கியது. மேலும் சில்லரை செலவாக  ₹58 செலவு செய்தது. பின்பு ஒரு பேனாவிற்கு  ₹2 குறைத்து விற்பனை செய்ததில் இலாபம்  ₹50 கிடைத்தது எனில் ஒரு பேனாவின் குறித்த விலை எவ்வளவு?

விடை

1 டசன் பேனாக்களின் அடக்க விலை

= 216 + 58 

அடக்க விலை = 274 

ஒவ்வொரு பேனாவுக்கும் தள்ளுபடி =

ஒட்டு மொத்த இலாபம் = 50 

12 பேனாக்களுக்கும் மொத்த தள்ளுபடி

= 2 × 12

= 24 

12 பேனாக்களின் விற்பனை விலை = குறித்த விலைதள்ளுபடி 

விற்பனை விலை = குறித்த விலை 24 

இலாபம் = விற்பனை விலைஅடக்க விலை 

50 = குறித்த விலை 24 – 274 

குறித்த விலை = 50 + 24 + 274

= 348 (1 டசன்

ஒரு பேனாவின் குறித்த விலை = 348/12 

= 174/6 = 29


7. ஒரு காய்கறி விற்பனையாளர் ஒரு வாரத்தின் முதல் மூன்று நாட்களில் ஒரு நாளுக்குக் கிலோ ஒன்றுக்கு  ₹10 வீதம் 10 கி.கி தக்காளி வாங்கினார். இந்த 3 நாட்களில் நாள் ஒன்றுக்கு 1 கி.கி தக்காளி நசுங்கிவிட்டது. வாரத்தின் மீதமுள்ள 4 நாட்களில் தினமும் கிலோ ஒன்றுக்கு  ₹8 வீதம் 15 கி.கி தக்காளி வாங்கினார். வாரம் முழுவதிலுமே ஒரு கி.கி தக்காளி ₹20 வீதம் விற்பனை செய்கிறார் எனில் அந்த வாரத்தின் அவரது இலாபம் அல்லது நட்டம் காண்க.

விடை

முதல் 3 நாட்கள் 

முதல் நாளில் வாங்கிய தக்காளியின் எடை= 10 கிகி 

3 நாட்களில் வாங்கிய தக்காளியின் மொத்த எடை = 3 × 10 கிகி = 30 கிகி 

30 கிகி தக்காளியின் அடக்க விலை = 10 × 30 = 300 

அடுத்த 4 நாட்கள் 

முதல் நாளில் வாங்கிய தக்காளியின் எடை = 15 கிகி 

4 நாட்களில் வாங்கிய தக்காளியின் எடை

= 4 × 15 கிகி = 60 கிகி 

60 கிகி தக்காளியின் அடக்க விலை

= 8 × 60 = 480 

மொத்த அடக்க விலை

= 300 + 480 = 780 

முதல் 3 நாட்களில் நசுங்கிய தக்காளியின் எடை

= 3 × 1 கிகி = 3 கிகி 

மீதமுள்ள தக்காளியின் எடை

= (30 – 3) கிகி = 27 கிகி 

அந்த வாரத்தில் மீதம் இருக்கின்ற தக்காளியின் எடை 

= (27 + 60) கிகி

= 87 கிகி 

1 கிகி தக்காளியின் விற்பனை விலை = 20 

87 கிகி தக்காளியின் விற்பனை விலை = 20 × 87 

விற்பனை விலை = 1,740 

விற்பனை விலை > அடக்க விலை 

இலாபம் = விற்பனை விலைஅடக்கவிலை

= 1,740 – 780 = 960


8. ஒரு எலக்ட்ரீசியன் பயன்படுத்தப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றையும், குளிர்சாதனப் பெட்டி ஒன்றையும் முறையே  ₹12,000இக்கும்,  ₹11,000இக்கும் வாங்கினார். தொலைக்காட்சிப் பெட்டியைச் சரி செய்ய  ₹1000உம், குளிர்சாதனப் பெட்டிக்கு வண்ணம் செய்ய  ₹1500உம் செலவு செய்த பின் தொலைக்காட்சி பெட்டிக்கு  ₹15,000 மற்றும் குளிர் சாதனப் பெட்டிக்கு  ₹15,500 என விலை நிர்ணயம் செய்தார். இவை ஒவ்வொன்றுக்கும்  ₹1000 தள்ளுபடி செய்தார் எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.

விடை :

தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் குளிர்சாதனப் பெட்டியின் மொத்த அடக்க விலை 

= 12,000 + 11,000 + 1,000 + 1,500 

= 25,500 

தொலைக்காட்சிப் பெட்டியின் விற்பனை விலை

= குறித்த விலைதள்ளுபடி

= 15,000 – 1,000

= 14,000 

குளிர்சாதனப் பெட்டியின் விற்பனை விலை

= குறித்த விலைதள்ளுபடி 

= 15,500 – 1,000

= 14,500 

தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் குளிர்சாதனப் பெட்டியின் மொத்த விற்பனை விலை

= 14,000 + .14,500

= 28,500 

விற்பனை விலை > அடக்க விலை 

இலாபம் = விற்பனை விலைஅடக்க விலை

= 28,500 – 25,500 

= ₹ 3,000

Tags : Questions with Answers, Solution | Bill, Profit and Loss | Term 2 Chapter 3 | 6th Maths கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் | பருவம் 2 அலகு 3 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 2 Unit 3 : Bill, Profit and Loss : Exercise 3.2 Questions with Answers, Solution | Bill, Profit and Loss | Term 2 Chapter 3 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 3 : பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் : பயிற்சி 3.2 - கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் | பருவம் 2 அலகு 3 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 3 : பட்டியல், இலாபம் மற்றும் நட்டம்