பருவம் 2 அலகு 3 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பட்டியல் | 6th Maths : Term 2 Unit 3 : Bill, Profit and Loss

   Posted On :  22.11.2023 03:15 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 3 : பட்டியல், இலாபம் மற்றும் நட்டம்

பட்டியல்

கோதை தனது இரண்டாம் பருவக் கற்றலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறாள். அதற்காகக் குறிப்பேடு, எழுதுகோல், பென்சில், கணித உபகரணப் பெட்டி போன்றவற்றை வாங்குவதற்காகக் கோதைக்கு அவளது அம்மா ₹300 தருகிறார். கோதை பின்வரும் பட்டியலில் காணும் பொருள்களை வாங்கினாள்.

பட்டியல்

கோதை தனது இரண்டாம் பருவக் கற்றலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறாள். அதற்காகக் குறிப்பேடு, எழுதுகோல், பென்சில், கணித உபகரணப் பெட்டி போன்றவற்றை வாங்குவதற்காகக் கோதைக்கு அவளது அம்மா ₹300 தருகிறார். கோதை பின்வரும் பட்டியலில் காணும் பொருள்களை வாங்கினாள்.


மேற்கண்ட பட்டியலிலிருந்து கோதை பின்வரும் விவரங்களைப் புரிந்து கொள்கிறாள்.

1. அங்காடியின் பெயர்.

2. பட்டியலின் வரிசை எண்.

3. பட்டியல் தயாரிக்கப்பட்ட நாள்.

4. வாங்கப்பட்ட பொருள்களின் விவரம்.

5. ஒவ்வொரு பொருளின் விலை.

6. வாங்கப்பட்ட பொருள்களின் மொத்த எண்ணிக்கை.

7. பொருள்கள் வாங்கியதற்கான தொகை.

8. வரி விவரம் (அடுத்த வகுப்பில் கற்பீர்கள்).

பொருள்களை வாங்கிய பிறகு அவளிடம் சிறிது தொகை மீதம் இருந்தது. அவள் செய்த செலவுகளை சரிபார்க்க விரும்புகிறாள்.


1. பட்டியல் சரிபார்த்தல்

மேற்கண்ட பட்டியலைப் பின்வருமாறு கோதை சரிபார்க்கிறாள் :


சிந்திக்க

ஒரு நாளில் 55 பட்டியல்கள் தயாரிக்கப்பட்டால், அவை அனைத்திலும் மாறாமல் இருக்கும் விவரம் என்ன?

கோதையின் அப்பா மேற்கண்ட பட்டியல் மீது சில வினாக்கள் எழுப்பக் கோதை பின்வருமாறு விடையளிக்கிறாள்.

(i) எத்தனை குறிப்பேடுகள் வாங்கப்பட்டன? 3

(ii) ஓர் எழுதுகோலின் விலை என்ன? ₹ 35

(ii) பென்சில்களுக்காகச் செலவிடப்பட்ட தொகை எவ்வளவு ? ₹30

(iv) கடைக்காரரிடம் 3 நூறு ரூபாய்கள் கொடுத்தால் அவர் உனக்கு மீதி எவ்வளவு தருவார்? ₹ 80

செயல்பாடு: இந்தப் பட்டியல் மீது மேலும் சில வினாக்களை எழுப்புக. ஓர் கரிக்கோல் விலை என்ன? பொருள்களின் எண்ணிக்கை எவ்வளவு


2. பட்டியல் தயாரித்தல்

அறிவு, ஒரு பெட்டிக்கடையிலிருந்து பின்வரும் காய்கறிகளை வாங்கினார்.

கிலோ ₹12 வீதம் (@₹12) 2 கி.கி கத்தரிக்காய், கிலோ ₹16 வீதம் 3 கி.கி வெங்காயம், கிலோ ₹20 வீதம் 3 கி.கி தக்காளி மற்றும் கிலோ ₹ 24 வீதம் 2 கி.கி உருளைக்கிழங்கு.


பெட்டிக் கடைக்காரர் அதற்கான பட்டியலைத் தரவில்லை. ஆகவே, அறிவு பின்வருமாறு தானே பட்டியல் தயாரிக்கிறார். தான் செலுத்திய தொகையைச் சரிபார்க்க இது அவருக்கு உதவுகிறது.


உங்களுக்குத் தெரியுமா?

@ (at the rate of) என்பது வீதம் ஆகும். கிலோ ₹12 வீதம் 2 கி.கி கத்தரிக்காய் என்பதை ஆங்கிலத்தில் '2Kg of Brinjal @ ₹ 12 per Kg' என குறிக்கலாம்.

சிந்திக்க

விலை மற்றும் அளவு நிரல்கள் தமக்குள் இடமாற்றம் செய்யப்பட்டால் பட்டியலில் உள்ள மொத்தத் தொகையில் மாற்றம் ஏற்படுமா?


எடுத்துக்காட்டு 1: இரம்யா சில ஒப்பனைப் பொருள்களை வாங்கிக் கொண்டு பின்வரும் பட்டியலைப் பெறுகிறார்.


பட்டியலைக் கவனித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

(i) பட்டியல் எண் என்ன?

(ii) பொருள்கள் வாங்கப்பட்ட தேதியைக் குறிப்பிடுக.

(iii) வாங்கப்பட்ட பொருள்கள் எத்தனை?

(iv) ஒரு தலைமுடிக் கவ்வியின் விலை என்ன?

(v) நாடாவின் மொத்த விலை என்ன?

தீர்வு

(i) பட்டியலின் எண் 100.

(ii) பொருள்கள் 15.05. 2018 அன்று வாங்கப்பட்டன

(iii) நான்கு வெவ்வேறு பொருள்கள் வாங்கப்பட்டன

(iv) ஒரு தலைமுடிக்கவ்வியின் விலை ₹15.

(v) நாடாவின் மொத்த விலை ₹36.


எடுத்துக்காட்டு 2: கோயம்புத்தூரிலுள்ள ஆவின் விற்பனை நிலையத்தில் 25.06.2018 அன்று வாங்கப்பட்ட பின்வரும் பொருள்களுக்கு பட்டியல் எண் 160 உள்ள பட்டியல் தயார் செய்க.


(i) ஒன்று ₹40 வீதம் 100கி பால்கோவா பாக்கெட்டுகள்

(ii) ஒன்று ₹8 வீதம் மோர் பாக்கெட்டுகள் 5

(iii) ஒன்று ₹25 வீதம் 500 மி.லி பால் பாக்கெட்டுகள்

(iv) ஒன்று ₹40 வீதம் 100கி நெய் பாக்கெட்டுகள் 5

தீர்வு

 



குறிப்பு 

பெரும்பாலான பட்டியல்களில், பொருள்கள் மற்றும் சேவை வரி (GST) குறிப்பிடப்பட்டிருக்கும். முன்பிருந்த சேவை வரி, மதிப்புக்கூட்டு வரி போன்ற அனைத்து மறைமுக வரிகளுக்கும் பதிலாக இந்திய அரசால் அண்மையில் ஒரே வரியாக இது அறிமுகப்படுத்தப்பட்டது. வெவ்வேறு பொருள்களுக்கு ஏற்ப இந்த வரியின் அளவு வேறுபடுகிறது. பொருள்கள் மற்றும் சேவை வரி (GST) ஆனது மாநிலப் பொருள்கள் மற்றும் சேவை வரி (SGST); மத்தியப் பொருள்கள் மற்றும் சேவை வரி (CGST) என இரு வகைப்படும்.

Tags : Term 2 Chapter 3 | 6th Maths பருவம் 2 அலகு 3 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 2 Unit 3 : Bill, Profit and Loss : Bill Term 2 Chapter 3 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 3 : பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் : பட்டியல் - பருவம் 2 அலகு 3 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 3 : பட்டியல், இலாபம் மற்றும் நட்டம்