புள்ளியியல் | பருவம் 1 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு - தரவுகள் | 6th Maths : Term 1 Unit 5 : Statistics

   Posted On :  21.11.2023 06:37 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : புள்ளியியல்

தரவுகள்

நமது அன்றாட வாழ்வில் செய்திகளாகவோ அல்லது எண்களாகவோ உள்ள தகவல்களைச் சேகரிக்க வேண்டிய பல சூழல்கள் ஏற்படுகின்றன.

தரவுகள்

நமது அன்றாட வாழ்வில் செய்திகளாகவோ அல்லது எண்களாகவோ உள்ள தகவல்களைச் சேகரிக்க வேண்டிய பல சூழல்கள் ஏற்படுகின்றன. எடுத்துக்காட்டாக

உனது வகுப்பில் கணிப்பானைப் பயன்படுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை.

உன் உடன்பிறந்தவர்களின் எண்ணிக்கை.

உங்களுக்குத் தெரியுமா?

"தரவு" (Data) என்ற சொல் முதன் முதலில் 1640 களில் பயன்படுத்தப்பட்டது. 1946 இல் "தரவு" என்ற சொல் "பரிமாற்றத்திற்கும், கணினியில் சேமித்து வைப்பதற்கும் உகந்த" என்று பொருள்பட்டது. 1954 இல் தகவல் செயலாக்கம் (Data Processing) என்ற சொல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இலத்தீன் மொழியில்கொடுத்தஅல்லதுகொடுக்கஎனப் பொருள்படும்.

ஒரு கிராமத்தில் உள்ள வெவ்வேறு வகையான வீடுகளின் எண்ணிக்கை.

வளையல் அணிந்துள்ள மாணவிகளின் எண்ணிக்கை.

குறிப்பிட்ட கால நேரத்திற்குள் சாலையில் இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கை.

ஒரு தெருவில் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் தொலைக்காட்சி பார்ப்பவரின் எண்ணிக்கை.

ஒரு வணிக வளாகத்தில் உள்ள துணிக் கடைகளின் எண்ணிக்கை.

ஒரு குறிப்பிட்ட நெடுஞ்சாலையில் செல்லும் ஈருளி, மகிழுந்து வண்டி மற்றும் பிற வண்டிகளின் வேகங்கள்.

திரட்டப்பட்ட தகவல்கள் அல்லது உண்மைகளைத் தரவுகள் என்கிறோம்.


1. தரவுகளைச் சேகரித்தல்


சாந்தி, தனது பிறந்த நாளில் கலந்து கொள்ளவிருக்கும் தனது நண்பர்கள் என்னென்ன இனிப்புகள் சுவைக்க விரும்புகின்றனர் என்ற தரவுகளைப் பின்வருமாறு சேகரித்தாள்.

அட்டவணை: 5.1


இவ்வாறு திரட்டப்பட்ட தரவுகளைக்கொண்டு தன் பிறந்த நாளில் இனிப்பு வகைகளை சாந்தி தயாரித்தார்.

இவற்றை முயல்க

ஒரு கிராமத்தில் உள்ள விவசாயிகளால் பயிரிடப்படும் பல்வேறு வகையான பயிர்களை அட்டவணைப்படுத்துக.

உங்கள் பள்ளி வளாகத்தில் காணும் பல்வேறு வகையான செடிகளின் / மரங்களின் பெயர்களைப் பட்டியலிடுக.

செயல்பாடு

உங்கள் வகுப்பு மாணவர்களின் பிறந்த மாதங்களின் தரவுகளைச் சேகரிக்கவும்


2. தரவுகளின் வகைகள்


சேகரிக்கும் அடிப்படையில் தரவுகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவை முதல் நிலைத் தரவுகள் மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகள்.

முதல் நிலைத் தரவுகள்

முதல் நிலைத் தரவு என்பது மூலத்தரவிலிருந்து பெறப்பட்ட தொகுக்கப்படாத தகவல்கள் ஆகும். மேலும் இத்தரவுகள் வகைப்படுத்துதல் மற்றும் அட்டவணைப்படுத்துதல் போன்ற புள்ளியியல் சார்ந்த செயல்முறைக்கு உட்படாத தரவுகளாகும்.

எடுத்துக்காட்டு

வகுப்பிற்கு வருகை தராத மாணவர்களின் பட்டியலை ஆசிரியர் தயாரித்தல்.

மாணவர்களின் எழுதும் பழக்கங்களைப் பற்றி எழுதுகோல் தயாரிக்கும் ஒரு நிறுவனம் நடத்தும் கணக்கெடுப்பு

மாணவர்கள் பல்வேறு வகையான இலைகளைச் சேகரித்து வகைப்படுத்துதல்

இரண்டாம் நிலைத் தரவு

இரண்டாம் நிலைத் தரவுகள் என்பன ஏற்கனவே, திரட்டப்பட்ட தரவுகளிலிருந்து பெறப்படும் தகவல்கள் ஆகும். இது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒரு குறிப்பிட்ட நபரால் திரட்டப்பட்டுப் பிறரால் அத் தரவுகள் பயன்படுத்தப்படுவதாகும்.

எடுத்துக்காட்டு

வகுப்பிற்கு வருகை தராத மாணவர்களின் பட்டியலைத் தலைமை ஆசிரியர் பள்ளி அலுவலகத்திலிருந்து பெறுதல் 

ஒரு வலைதளத்திலிருந்து மட்டைப்பந்து (கிரிக்கெட்) தரவுகளைப் பெறுதல்

தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களிலிருந்து பெறும் தரவுகள்

தொலைபேசி எண்களை தொகுப்பு நூலிலிருந்து பெறுதல்

உங்களுக்குத் தெரியுமா?

முதல்நிலை தரவுகள் இரண்டாம் நிலை தரவுகளைவிட நம்பகத்தன்மை வாய்ந்தவை. ஏனெனில் அவை நேரடியாகச் சேகரிக்கப்படுகிறது.


3. தரவுகளை முறைப்படுத்துதல்


திரட்டப்பட்ட தரவுகளை விரைவாகவும், எளிதாகவும், திறம்படக் கையாளவும், புரிந்து கொள்ளும் வகையில் மாற்றவும் ஒரு குறிப்பிட்ட வகையில் முறைப்படுத்த வேண்டியுள்ளது. தரவுகளை முறைப்படுத்தும் வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.

நேர் கோட்டுக் குறிகள்

சாந்தியால் திரட்டப்பட்டத் தரவுகளைக் (அட்டவணை–5.1) கருதுக. ஆனால் இந்தத் தரவுகளிலிருந்து தேவையான செய்திகளை எளிதில் பெற முடிகிறதா? இல்லை, எடுத்துக்காட்டாக, லட்டுகள் விரும்பாதவர்கள் எத்தனைப்பேர் என உடனடியாகக் கூற இயலுமா? இல்லை. எனவே இக்காரணங்களால் சாந்தி, தரவுகளை முறைப்படுத்த முடிவு செய்கிறாள் (படம் 5.3 இல் காணலாம்). அவளுடைய நண்பர்கள் அவளுக்கு உதவுகின்றனர்.


மலர் பின்வருமாறு அட்டவணையில் தரவுகளை முறைப்படுத்துகிறாள். ஒவ்வொரு நண்பரும் விரும்பும் இனிப்புகளைக் குறித்துக்கொண்டு, அதற்கு ஏற்றவாறு பயன்படுத்துகிறாள். ஒவ்வோர் இனிப்புகளின் எண்ணிக்கையை நிகழ்வெண் என்கிறோம்.


ஆனால், இரஹீம் அதே தரவுகளைப் பின்வருமாறு முறைப்படுத்தினான்



'' அல்லது ‘|' குறிகளைப் பயன்படுத்துவது ஒரு பொருட்டல்ல என்பதை காணலாம்.

இருவரும் மிகச் சரியாகச் செய்தனர். ஆனால் நாம் நேர்க்கோட்டுக் குறிகளே எளிமையாக இருப்பதால் அதனையே பயன்படுத்துவோம்.


இவ்வாறாக, மேலேயுள்ள அட்டவணையைக் கொண்டு ஆசிரியர் பின்வருமாறு தரவுகளை வகைப்படுத்தினார்



நேர்க்கோட்டுக் குறி முறையில் குறித்துக் காட்டுவது மிக எளிதாக உள்ளது.

'நேர்க்கோட்டுக் குறிகளைப்' பயன்படுத்தித் தரவுகளை வகைப்படுத்தும் இந்த முறையே நிலையான திட்ட முறையாகும்.

குறிப்பு

ஒவ்வொரு தகவலின் நிகழ்வும் ஒரு குத்துக்கோட்டுக் குறி ' | ' ஐக் கொண்டு குறிக்கலாம்.

ஒவ்வொரு ஐந்தாவது குறியும் முந்தைய நான்கு குறிகளின் குறுக்கே எனக் குறிக்கப்படுகிறது

இம்முறை நேர்க்கோட்டுக் குறிகளை எளிதாக எண்ணுவதற்கு உதவுகிறது

எடுத்துக்காட்டு 5.1

தாமரை நூல்களைப் படிப்பதில் ஆர்வமுடையவள். 40 நாட்கள் விடுமுறையில் ஒவ்வொரு நாளும் அவளால் படிக்கப்பட்ட நூல்களின் பக்கங்களின் எண்ணிக்கை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. இத்தரவிற்கு நேர்க்கோட்டுக்குறி அட்டவணை அமைக்கவும்

1 3 5 6 6 3 5 4 1 6 2 5 3 4 1 6 6 5 5 1

1 2 3 2 5 2 4 1 6 2 5 5 6 5 5 3 5 2 5 1

தீர்வு

நேர்க்கோட்டுக் குறி அட்டவணை பின்வருமாறு.


சிந்திக்க

இப்போது யாரேனும் ஒருவர் வழக்கமாகத் தாமரை ஒரு நாளில் எத்தனைப் பக்கங்கள் படிக்கிறாள் எனக் கேட்டால் உனது விடை என்ன?

Tags : Statistics | Term 1 Chapter 5 | 6th Maths புள்ளியியல் | பருவம் 1 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 1 Unit 5 : Statistics : Necessity of collecting Data Statistics | Term 1 Chapter 5 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : புள்ளியியல் : தரவுகள் - புள்ளியியல் | பருவம் 1 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : புள்ளியியல்