Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | பட விளக்கப்படம் மூலம் தரவுகளைக் குறித்தல்

புள்ளியியல் | பருவம் 1 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பட விளக்கப்படம் மூலம் தரவுகளைக் குறித்தல் | 6th Maths : Term 1 Unit 5 : Statistics

   Posted On :  21.11.2023 06:57 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : புள்ளியியல்

பட விளக்கப்படம் மூலம் தரவுகளைக் குறித்தல்

வண்டிகளால் ஏற்படும் மாசு பற்றி ஆசிரியர் விளக்கிக் கொண்டு இருந்தார். மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்காகப் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது பல வண்டிகளைப் பார்த்ததாகக் கூறினர்.

பட விளக்கப்படம் மூலம் தரவுகளைக் குறித்தல்

வண்டிகளால் ஏற்படும் மாசு பற்றி ஆசிரியர் விளக்கிக் கொண்டு இருந்தார். மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்காகப் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது பல வண்டிகளைப் பார்த்ததாகக் கூறினர். பலர் பலவிதமாக விளக்கினர். ஆனால், அழகி, தான் பார்த்த வண்டிகளைக் கீழ்க்கண்டவாறு படமாக வரைந்துக் காட்டினாள்.


எல்லா மாணவர்களில், அழகி பார்த்தது 5 மகிழுந்துகள், 3 சரக்குந்துகள் மற்றும் 2 பேருந்துகள் என எளிதாகப் புரிந்து கொண்டனர். தரவுகளைப் படங்கள் மூலம் குறிப்பிடும் இந்த முறை பட விளக்கப்படம் எனப்படும்.

இந்நாள்களில், சுற்றுலா, வானிலை முன்னறிவிப்பு, புவியியல் போன்ற துறைகளில் பட விளக்கப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பட விளக்கப்படத்தின் பயன்பாடு

தரவுகளை எளிதாக விளக்கவும் பகுத்தாய்வு செய்யவும் முடியும்.

படங்களும் குறியீடுகளும் நமது புரிதலை மேம்படுத்தும்.

குறிப்பு

பட விளக்கப்படம் என்பது தரவுகளை, படங்கள் மூலம் குறிப்பிடுவது ஆகும்.

உங்களுக்குத் தெரியுமா?

ஒரு சொல் அல்லது சொற்றொடரைப் படம் வழியே குறிப்பிடுவது பட விளக்கப்படம் ஆகும்

படவிளக்கப்படமானது Pictogram என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது

முற்காலத்தில் பட விளக்கப்படங்களே எழுத்து வடிவமாகப் பயன்படுத்தப்பட்டன. கி.மு. (பொ..மு) 3000 ஆண்டுகளுக்கு முன்பாகவே எகிப்து மற்றும் மெசபடோமியாவில் இம்முறையைப் பயன்படுத்தினர் 


1. பட விளக்கப்படத்தில் அளவுத்திட்டத்தின் தேவை

ஒரு பழ அங்காடியில் (படம் 5.4) 40 மாம்பழங்களும், 55 ஆப்பிள்களும், 35 ஆரஞ்சுகளும் மற்றும் 60 வாழைப்பழங்களும் உள்ளன. இவற்றைப் படங்கள் மூலம் நாம் எப்படிக் குறிப்பிடலாம்? தரவுகள் அதிக அளவில் இருந்தால் அவற்றைப் படங்கள் மூலம் குறிப்பிடுவது மிகக்கடினம் மட்டுமல்ல அதிகக் கால அளவும் தேவைப்படும். இத்தகைய சூழலில் ஒரு படத்தின் மூலம் அதே வகையான பொருட்கள் பலவற்றைக் குறிப்பிடலாம். இம்முறை அளவுத்திட்டம் எனப்படும்.



2. பட விளக்கப்படம் வரைதல்

மேற்கண்ட பழங்களின் தரவுகளைக் கருதுக. 40 மற்றும் 60 ஆகியவை 10 இன் மடங்குகள் மேலும், 55 மற்றும் 35 ஆகியவை 5 இன் மடங்குகளாக இருக்கின்றன. ஒரு முழுப் பழத்தின் படம் 10 பழங்களையும், ஓர் அரைப் பழத்தின் படம் 5 பழங்களையும் குறிப்பதாகக் கொள்வோம்.

பட விளக்கப்படம் பின் வருமாறு அமையலாம்.



3. பட விளக்கப்படத்தை விவரித்தல்

மேற்கண்ட விளக்கப்படத்திலிருந்து பழங்களின் எண்ணிக்கையை மிக எளிதில் கணக்கிடலாம்..

மாம்பழங்களின் எண்ணிக்கை = 4 முழுப் படங்கள் 4 × 10 = 40 மாம்பழங்கள்

ஆப்பிள்களின் எண்ணிக்கை  = 5 முழுப் படங்கள் மற்றும் 1 அரைப் படம் (5 × 10) + 5 = 55 ஆப்பிள்கள்

வாழைப்பழங்களின் எண்ணிக்கை = 6 முழுப் படங்கள் 6 × 10 = 60 வாழைப்பழங்கள்

ஆரஞ்சுகளின் எண்ணிக்கை     = 3 முழுப் படங்கள் மற்றும் 1 அரைப் படம் (3 × 10) + 5 = 35 ஆரஞ்சுகள்


எடுத்துக்காட்டு 5.2

ஓர் ஆண்டில் விற்பனையான வண்டிகளின் எண்ணிக்கை பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.


குறிப்பு : ஒரு படம் பத்து வண்டிகளைக் குறிக்கும்.

விளக்கப்படத்தைப் பார்த்துப் பின் வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

(i) ஓர் ஆண்டில் விற்பனையான இருசக்கர வாகனங்கள் () ஈருளிகள் எத்தனை?

(ii) ஓர் ஆண்டில் 20 பேருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சரியா, தவறா எனக் கூறுக.

(iii) எத்தனை மிதிவண்டிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன?

(iv) எத்தனை மகிழுந்துகள் மற்றும் சுமையுந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன?

(v) மொத்தம் எத்தனை வண்டிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன?

தீர்வு

கொடுக்கப்பட்டவை : ஒரு படம் 10 வண்டிகளைக் குறிக்கிறது.

(i) 9 × 10 = 90 இருசக்கர வண்டிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

(ii) சரி

(iii) 4 × 10 = 40 மிதிவண்டிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன

(iv) படத்தில், 7 மகிழுந்துகள் மற்றும் 3 சுமையுந்துகளின் படங்கள் உள்ளன. ஆகவே, 70 மகிழுந்துகள் மற்றும் 30 சுமையுந்துகள் என 100 வண்டிகளின் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

(v) 7 மகிழுந்துகள், 3 சுமையுந்துகள், 9 இரு சக்கரவண்டிகள், 2 பேருந்துகள் மற்றும் 4 மிதிவண்டிகளின் படங்கள் உள்ளன.

ஆகவே, 70 + 30 + 90 + 20 + 40 = 250 வண்டிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

செயல்பாடு: ஆறாம் வகுப்பு மாணவர்களிடம் அவர்கள் விரும்பும் விளையாட்டுகள் குறித்த தரவுகளைக் கொண்டு ஒரு பட விளக்கப்படம் வரைக.

Tags : Statistics | Term 1 Chapter 5 | 6th Maths புள்ளியியல் | பருவம் 1 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 1 Unit 5 : Statistics : Representation of data using Pictograph Statistics | Term 1 Chapter 5 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : புள்ளியியல் : பட விளக்கப்படம் மூலம் தரவுகளைக் குறித்தல் - புள்ளியியல் | பருவம் 1 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : புள்ளியியல்