Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | தரவுகளைப் பட்டை வரைபடம் மூலம் குறித்தல்

புள்ளியியல் | பருவம் 1 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு - தரவுகளைப் பட்டை வரைபடம் மூலம் குறித்தல் | 6th Maths : Term 1 Unit 5 : Statistics

   Posted On :  21.11.2023 07:10 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : புள்ளியியல்

தரவுகளைப் பட்டை வரைபடம் மூலம் குறித்தல்

ஒருபட்டை வரைபடம் என்பது (செங்குத்து அல்லது கிடைமட்ட) இணைப் பட்டைகள் சம நீளங்களிலும் / சம உயரங்களிலும் கொடுக்கப்பட்ட எண்ணிக்கைக்கு விகிதத்தில் அமைந்துள்ளவை ஆகும்.

தரவுகளைப் பட்டை வரைபடம் மூலம் குறித்தல்

ராகவியின் தந்தை ஒரு கைப்பேசிக் கடையின் உரிமையாளர் ஆவார். அவள், ஒரு வாரத்தில் விற்பனையான கைப்பேசிகளின் தரவுகளைப் பின்வருமாறு காண்கிறாள்.


4 மற்றும் 37 மற்றும் 305 எனக் கைப்பேசிகள் விற்பனையாகி இருப்பின் என்ன செய்ய வேண்டும்? எத்தனை படங்கள் பயன்படுத்த வேண்டும்?


இந்தத் தரவுகளைக் குறிக்கப் படவிளக்கப்படத்திற்குப் பதிலாக வேறு ஏதேனும் பயன்படுத்தலாமா?

குறிப்பு

ஒருபட்டை வரைபடம் என்பது (செங்குத்து அல்லது கிடைமட்ட) இணைப் பட்டைகள் சம நீளங்களிலும் / சம உயரங்களிலும் கொடுக்கப்பட்ட எண்ணிக்கைக்கு விகிதத்தில் அமைந்துள்ளவை ஆகும்.


1. பட்டை வரைபடம் வரைதல்

படி 1. ஒன்றுக் கொன்று செங்குத்தான இரண்டு கோடுகள் வரைக. அவற்றில் ஒன்று கிடைமட்டமானது மற்றொன்று செங்குத்தானது


படி 2. பொருத்தமான தலைப்பு (ஒரு வாரத்தில் விற்ற கைப்பேசிகளின் தரவு) கொடுக்கப்படுகிறது. (கிடைமட்டக் கோடுவாரத்தின் நாட்கள்; செங்குத்துக் கோடுவிற்பனையான கைப்பேசிகளின் எண்ணிக்கை).


படி3. பொருத்தமான அளவுத்திட்டம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. பயன்படுத்தப்பட்ட அளவுத்திட்டம் வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது.  


படி 4. செங்குத்துக் கோடு '0' இல் தொடங்குமாறு எடுத்துக்கொள்வோம் மற்றும் தரவுகளின் மதிப்புகள் அளவுத்திட்டத்தின்படி சமத்தொலைவில் இருக்குமாறு குறிக்கவேண்டும்.


படி 5. ஒவ்வொரு தகவலுக்கும் கிடைமட்டக் கோட்டின் மீது செங்குத்துப் பட்டைகள் வரையப்படுகின்றன. அவற்றுக்கான தகவல்களாகத் ஞாயிறு, திங்கள், செவ்வாய்., சனி எனக் குறிக்கப்படுகின்றன.



இதுபோன்றே கிடைமட்டப் பட்டை வரைபடமும் வரையலாம்.


2. பட்டை வரைபடத்தை விளக்குதல்

மேற்கண்ட பட்டை வரைபடத்தைக் கவனித்துத் தரவுகளை எளிதில் விளக்கவும் பகுப்பாய்வு செய்யவும் முடியும்

அதிக எண்ணிக்கையிலான கைப்பேசிகள் சனி அன்று விற்பனையாயின (55)

குறைந்த எண்ணிக்கையிலான கைப்பேசிகள் புதன் அன்று விற்பனையாயின (20).

ஒரு வாரத்தில் விற்பனையான மொத்த கைப்பேசிகளின் எண்ணிக்கை (50+45+40+20+35+30+55 = 275).

ஒரு குறிப்பிட்ட நாளில் விற்பனையான கைப்பேசிகளின் எண்ணிக்கை

(எடுத்துக்காட்டாக, வெள்ளியன்று 30, போன்றவை).

செயல்பாடு: செய்தித்தாள் மற்றும் மாத இதழ்களிலிருந்து திரட்டப்பட்ட தரவுகளுக்குப் பட்டை வரைபடம் வரைந்து விளக்குக.

சிந்திக்க

ஒவ்வொரு பட்டையின் அகலமும் சமம்

அடுத்தடுத்த இரண்டு பட்டைகளுக்கிடையேயான இடைவெளிகளும் சமம். இவற்றின் சிறப்பு என்ன?

• 1 அலகு = 1 மாணவர்

என்ற அளவுத்திட்டத்தைப் பயன்படுத்த முடியுமா? உங்கள் விடையை சோதிக்க.


எடுத்துக்காட்டு 5.3


பின்வரும் பட்டை வரைபடத்தைக் கவனித்து வினாக்களுக்கு விடையளிக்கவும்

(i) எந்தச் செயல்பாடு அதிக எண்ணிக்கை மாணவர்களால் கடைபிடிக்கப்படுகிறது

(ii) புதிர்களைத் தீர்ப்பதில் ஈடுபடும் மாணவர்கள் மொத்தம் எத்தனை பேர்?

(iii) கதைகளையோ அல்லது பாடங்களையோ படிப்பவர்களின் மொத்த எண்ணிக்கை ______.

(iv) குறைந்த எண்ணிக்கையுள்ள மாணவர்களால் கடை பிடிக்கப்படும் செயல்பாடு ________.

(v) நகைச்சுவை நூல்களைப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை _________.

தீர்வு

(i) கதைகளைப் படிப்பதில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் ஈடுபடுகின்றனர்.

(ii) புதிர்களைத் தீர்ப்பதில் 7 மாணவர்கள் ஈடுபடுகின்றனர்.

(iii) 8 + 4 = 12 மாணவர்கள் கதைகளையோ அல்லது பாடங்களையோ படிப்பதில் ஈடுபடுகின்றனர்.

(iv) பாடங்களைப் படிப்பதில் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் ஈடுபடுகின்றனர்

(v) 5 மாணவர்கள் நகைச்சுவை நூல்களைப் படிப்பதில் ஈடுபடுகின்றனர்.

Tags : Statistics | Term 1 Chapter 5 | 6th Maths புள்ளியியல் | பருவம் 1 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 1 Unit 5 : Statistics : Representation of data using Bar Graph Statistics | Term 1 Chapter 5 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : புள்ளியியல் : தரவுகளைப் பட்டை வரைபடம் மூலம் குறித்தல் - புள்ளியியல் | பருவம் 1 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : புள்ளியியல்