Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

விலங்குகளின் இயக்கம் | அலகு 19 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் | 8th Science : Chapter 19 : Movements in Animals

   Posted On :  10.09.2023 02:35 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 19 : விலங்குகளின் இயக்கம்

நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 19 : விலங்குகளின் இயக்கம் : நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

நினைவில் கொள்க

• ஒரு உயிரினத்தின் முக்கியமான பணிகளைப் புரிவதற்கு இயக்கம் அவசியம். இதன் இரு வகைகள்: தன்னிச்சையான இயக்கம் மற்றும் தன்னிச்சையற்ற இயக்கம்.

• வலிமையான தசைகளும், இலேசான எலும்புகளும் பறவைகள் பறக்க உதவுகின்றன. இறக்கைகளை விரித்து அவை பறக்கின்றன.

• தனது உடலின் இருபுறமும் வளைவுகளை ஏற்படுத்தி மீன்கள் நீந்துகின்றன.

• பாம்புகள் தரையில் வளைவுகளை ஏற்படுத்தி, சறுக்கிச் செல்கின்றன. அதிக எண்ணிக்கையிலான எலும்புகளும், தசைகளும் இணைந்து உடலை முன்னோக்கித் தள்ளுகின்றன.

• கரப்பான் பூச்சியின் கால்கள் மற்றும் உடலில் காணப்படும் கடினமான உறை, அதன் மேல் தோலாகமாறியுள்ளது. மூன்று ஜோடி கால்களுடன் இணைக்கப்பட்டுள்ள மார்புத் தசைகள் மற்றும் இரண்டு ஜோடி இறக்கைகள் அவை நடப்பதற்கும் பறப்பதற்கும் உதவுகின்றன.

• உடல் தசைகள் சுருங்கி விரிவதன் மூலம் மண்புழுக்கள் நகர்கின்றன. உடலின் கீழ்பகுதியில் காணப்படும் நீட்சிகள் தரையைப் பற்றிக்கொள்ள உதவுகின்றன.

• எலும்புகளும், குருத்தெலும்புகளும் இணைந்து மனித எலும்பு மண்டலத்தை உருவாக்குகின்றன. அவை உடலுக்கு வடிவம் மற்றும் கட்டமைப்பை வழங்கி இயக்கத்திற்கு உதவுகின்றன. அவை உடல் உள்ளுறுப்புகளையும் பாதுகாக்கின்றன.

• எலும்பு மண்டலமானது மண்டை ஓடு. முதுகெலும்பு, விலா எலும்பு, மார்பெலும்பு, தோள்பட்டை எலும்பு, கை, கால் எலும்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

• இரண்டு ஜோடி தசைகள் சுருங்கி விரிவதன் மூலம் எலும்புகள் நகர்கின்றன.

• தன்மை மற்றும் அசையும் திசையைக்கொண்டு மூட்டுக்கள் பல வகைப்படும்.

 

சொல்லடைவு

எதிரெதிர் தசைகள் தங்களது அசைவை ஒன்றுக்கொன்று எதிர்க்கும் தசைகள்.

இணையுறுப்புகள் கை மற்றும் கால்கள்

அச்சு உடல் மற்றும் தலை.

இருதலைத்தசை இருபுறமும் தோன்றக்கூடிய தசை

இதயத்தசை இதயத்தின் சுவர்களில் காணப்படும் தன்னிச்சையான தசை.

குருத்தெலும்பு கடினமான, மீள்தன்மையுடைய எலும்பாக மாறக்கூடிய தசை.

பீமர் மனித எலும்பு மண்டலத்தின் தொடை எலும்பு.

தசைநாண் மூட்டுக்களின் இயக்கத்திற்கு உதவும் வகையில் அவற்றைச் சுற்றியுள்ள கடினமான, மீள்தன்மை கொண்ட பட்டை போன்ற திசுக்கள்.

பெக்டோரல் வளையம் கைகளை தோள் பட்டையுடன் இணைக்கும் பகுதி

இடுப்பு வளையம் கால்களை இடுப்புடன் இணைக்கும் பகுதி.

எலும்புத்தசை எலும்புகளை நகர்த்தி அசைவை ஏற்படுத்தும் தன்னிச்சையான திசுக்கள்.

மார்பெலும்பு மார்புப் பகுதியில் காணப்படும் தட்டையான எலும்பு.

தசைநார் திசுக்களை எலும்புடன் இணைக்கக்கூடிய, விரைப்புத் தன்மையுடைய நார்போன்ற கடினமான பட்டைத்திசு.


பிற நூல்கள்

1. Guyton and Hall. J. E, (2006). Textbook of Medical Physiology- Eleventh Edition Elsevier saunders. International Edition.

2. Sembulingam.K and Prema Sembulingam., (2012). Essential of Medical Physiology 6th Edition.

3. R.L. Kotpal (2010). Modern text book of zoology: Inveretbrates. 12th Edition.

 

இணைய வளங்கள்

1. https://kids.kiddle.co/Muscular_system

2. https://kidshealth.org/en/kids/muscles.html

3. https://www.innerbody.com

4. https://www.visible body.com



Tags : Movements in Animals | Chapter 19 | 8th Science விலங்குகளின் இயக்கம் | அலகு 19 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 19 : Movements in Animals : Points to Remember, Glossary, Concept Map Movements in Animals | Chapter 19 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 19 : விலங்குகளின் இயக்கம் : நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் - விலங்குகளின் இயக்கம் | அலகு 19 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 19 : விலங்குகளின் இயக்கம்