விலங்குகளின் இயக்கம் | அலகு 19 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - மூட்டுகள் | 8th Science : Chapter 19 : Movements in Animals
மூட்டுகள்
இரண்டு தனித்தனி எலும்புகள் சந்திக்கும் இடம் மூட்டு என்று அழைக்கப்படுகிறது.
அசைக்கக்கூடிய தன்மையின் அடிப்படையில் மூட்டுக்களில் மூன்று வகைகள் உள்ளன. அவையாவன:
நிலையானவை, சற்று நகரக்கூடியவை மற்றும் நகரக்கூடியவை.
1. நிலையான
/ அசையா மூட்டுகள்
இந்த வகை மூட்டுகளில் இரண்டு எலும்புகளுக்கிடையில் எந்த ஒரு
இயக்கமும் காணப்படாது. மண்டையோட்டின் எலும்புகளுக்கு இடையிலான கட்டமைப்புகள் அசையாத
மூட்டுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
2. சற்று
நகரக்கூடிய மூட்டுகள்
இவ்வகை மூட்டுகளில், இரண்டு எலும்புகளுக்கு இடையில் மிகக் குறைந்த
(பகுதி) இயக்கம் மட்டுமே நிகழ்கிறது. ஒரு விலா எலும்புக்கும் மார்பக எலும்புக்கும்
இடையில் அல்லது முதுகெலும்புகளுக்கு இடையில் உள்ள மூட்டு, சற்று நகரக்கூடிய மூட்டிற்கு
எடுத்துக்காட்டு ஆகும்.
மூட்டுகள்
என்பவை இரண்டு எலும்புகள் சந்திக்கும் அல்லது இணையும் இடமாகும். தசைநார்கள் என்பவை
இணைப்புத் திசுக்களின் கடினமான குறுகிய பட்டைகள் ஆகும். இவை ஒரு எலும்புடன் மற்றொரு
எலும்பை இணைத்து மூட்டுகளை உருவாக்குகின்றன. டெண்டான்கள் என்பவை மீள் திசுக்களால் ஆனவை.
அவை மூட்டுகளின் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
3. நகரக்கூடிய
மூட்டுகள்
இரண்டு எலும்புகள் இணைந்து மூட்டுகளை உருவாக்குகின்றன. இந்த
வகையில், பல்வேறு வகையான அசைவுகள் நடைபெறுகின்றன. ஆறு முக்கியமான அசையும் மூட்டுகள்
உள்ளன. அவை அட்டவணை 19.2ல் தரப்பட்டுள்ளன.
4 சினோவியல்
மூட்டுகள்
இரண்டு எலும்புகளுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தும் குருத்தெலும்பால்
இணைக்கப்பட்ட திரவம் நிரம்பிய குழிகளையுடைய மூட்டுகளே சினோவியல் மூட்டுக்கள் ஆகும்.
இது 'டைஆர்த்ரோசிஸ்' மூட்டு என்றும் அழைக்கப்படுகிறது.
இவை எலும்புகளுக்கிடையே காணப்படும் மிகவும் நெகிழ்வான மூட்டு
ஆகும். ஏனெனில், எலும்புகள் நேரடியாக இணைக்கப்படுவதில்லை. மேலும், இவை எளிதாக நகரும்
தன்மை கொண்டுள்ளன. சினோவியல் மூட்டுகள் நான்கு முக்கியமான அம்சங்களைக் கொண்டுள்ளன.
அட்டவணை 19.3 இல் தரப்பட்டுள்ளன.
மூட்டுகளின் அழற்சி அழற்சி என்பது பொதுவாக குருத்தெலும்பில் ஏற்படும் உராய்வின் காரணமாகவோ அல்லது மூட்டுகளில் சினோவியல் திரவம் இல்லாததாலோ ஏற்படுகின்றது. இந்த நிலையில் ஒருவர், மூட்டுகளை நகர்த்தும் போது மூட்டுகளில் கடுமையான வலியை உணர்கிறார். இந்த நோய் கீழ்வாதம் கீழ்வாதம் அல்லது மூட்டுவீக்கம் ஆர்த்ரைடிஸ்) என்று குறிப்பிடப்படுகிறது. மூட்டுகளில் யூரிக் அமிலப் படிகங்கள் படிவதாலும் மூட்டுவீக்கம் ஏற்படுகிறது.