விலங்குகளின் இயக்கம் | அலகு 19 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - இயக்கங்களின் வகைகள் | 8th Science : Chapter 19 : Movements in Animals
இயக்கங்களின் வகைகள்
இடம்பெயர்தல் மற்றும் இயக்கம் ஆகியவற்றைப் பற்றிக் கூறும்போது,
மூன்று வகையான இயக்கங்கள் உள்ளன.
1. அமீபாய்டு
இயக்கம்
இவ்வகையான இயக்கம் போலிக்கால்கள் மூலம் நடைபெறுகிறது. செல்லில்
உள்ள புரோட்டோபிளாசம் நகரும்போது இவையும் சேர்ந்து இயக்கத்தை ஏற்படுத்துகின்றன.
2. சிலியரி
இயக்கம்
புறத்தோலில் உள்ள ரோமம் போன்ற நீட்சிகளாகிய சிலியாக்கள் எனப்படும்
இணை உறுப்புகள் மூலம் இவ்வியக்கம் நடைபெறுகிறது. இவ்விரு இயக்கங்களும் நிணநீர் மண்டல
செல்களில் நடைபெறுகின்றன.
3. தசைகளின்
இயக்கம்
இது பல பகுதிகளை உள்ளடக்கிய இயக்கமாகும். இது, எலும்புத்தசை மண்டலத்தைக் கொண்டு நடைபெறுகிறது. இவ்வகை இயக்கம், மேம்பட்ட முதுகெலும்பிகளில் காணப்படுகிறது.
எலும்புத்தசை மண்டலத்தைக் கொண்டு நடைபெறும் இயக்கங்களைப் பற்றி புரிந்துகொள்ள, மூட்டுகள், எலும்புகள் மற்றும் தசைகளின் வகைகள் பற்றி நாம் புரிந்து கொள்ளவேண்டும்.