அலகு 19 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - விலங்குகளின் இயக்கம் | 8th Science : Chapter 19 : Movements in Animals
அலகு 19
விலங்குகளின் இயக்கம்
கற்றலின் நோக்கங்கள்
இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன:
• வெவ்வேறு விலங்குகளின் இயக்கங்களைப் பற்றி அறிந்துகொள்ளல்.
• இயக்கம் மற்றும் இடம்பெயர்தலை வேறுபடுத்துதல்.
• இயக்கங்களின் வகைகளை வேறுபடுத்துதல்.
• மனித உடல் மற்றும் அதன் இயக்கங்களைப் பற்றி
அறிந்துகொள்ளல்.
• மூட்டுகளின் வகைகள் மற்றும் முக்கியத்துவம்
பற்றி அறிதல்.
• எலும்புக்கூட்டின் கூறுகளை அடையாளம் காணுதல்.
• தசையின் இயக்கம் மற்றும் அதன் வகைகளைப் புரிந்துகொள்ளல்.
அறிமுகம்
நமது உடலில் பல இயக்கங்கள் நிகழ்கின்றன. அமைதியாக அமர்ந்து உங்கள்
உடலில் நடைபெறும் இயக்கங்களை உற்றுக் கவனியுங்கள். நீங்கள் அவ்வப்போது கண்களைச்சிமிட்டுவீர்கள்.சுவாசிக்கும்
போது உங்கள் உடலில் இயக்கங்கள் நடைபெறலாம். நீங்கள் ஒரே இடத்தில் இருக்கும்போது உங்கள்
உடலின் வெவ்வேறு பகுதிகள் இயங்குகின்றன. விலங்குகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு
பல்வேறு வழிகளில் நகர்கின்றன. உதாரணமாக, பசு நடப்பதற்கு தன் கால்களைப் பயன்படுத்துகிறது.
பாம்பு சறுக்கியோ அல்லது ஊர்ந்தோ செல்வதற்கு தனது முழு உடலையும் பயன்படுத்துகிறது.
பறவை பறப்பதற்க இறக்கைகளைப் பயன்படுத்துகிறது. மீன்கள் துடுப்புகளைப் பயன்படுத்தி நீந்துகின்றன.
மனிதர்கள் நடப்பதற்கு பயன்படுத்துகிறார்கள். நடத்தல், ஊர்ந்து செல்தல், பறத்தல், நீந்துதல்
இவையே விலங்குகள் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்தச் செல்வதந்தப் பயன்படுத்தும் வழிமுறைகளாகும்.
இந்த இயக்கங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை இப்பாடத்தில் விரிவாகக் காணலாம்.