விலங்குகளின் இயக்கம் | அலகு 19 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - எலும்பு மண்டலம் | 8th Science : Chapter 19 : Movements in Animals
எலும்பு மண்டலம்
எலும்புமண்டலம் மனித உடலுக்கு கடினத்தன்மை அல்லது கட்டமைப்பை
வழங்குகிறது. இது மனித உடலைத் தாங்கி, அதற்கு பாதுகாப்பளிக்கிறது. இது எலும்பு, கருத்தெலும்பு,
தசைநாண் மற்றும் தசைநார் போன்ற இணைப்புத் திசுக்களால் ஆனது. எலும்புக்கூட்டில் மூட்டுகள்
இல்லையென்றால் எந்த ஒரு இயக்கமும் நடைபெறாது. கல்லைப் போன்றதொரு முக்கியத்துவம் மட்டுமே மனித உடலுக்கு
இருக்கும். உடலில் எலும்புகள் அமைந்திருப்பதன் அடிப்படையில் எலும்புக்கூடு இரண்டு வகைப்படும்.
புறச்சட்டகம்
(எக்சோஸ்கெலிட்டன்)
இது உடலின் வெளிப்புற அடுக்கில் காணப்படும் எலும்புக்கூடு ஆகும்.
வளரும் கருவின் புறப்படை அல்லது இடைப்படை அடுக்கிலிருந்து இது உருவாகிறது. மீன்களில்
உள்ள செதில்கள், ஆமையின் வெளிப்புற கடின அடுக்கு மற்றும் பறவைகளின் இறகுகள் ஆகியவற்றைப்
போல இது உடலின் உள் உறுப்புகளுக்கு பாதுகாப்பளிக்கிறது.
அகச்சட்டகம்
(எண்டோஸ்கெலிட்டன்)
இது மனித உடலுக்குள் காணப்படும் எலும்புக்கூடு ஆகும். இது இடைப்படையிலிருந்து
இவை அனைத்து உருவாகிறது. முதுகெலும்பிகளிலும் காணப்படுகின்றன. அவற்றின் உடல் அமைப்பை
இவை உருவாக்குகின்றன.
1. எலும்புக்கூட்டின்
செயல்பாடுகள்
எலும்பு மண்டலம் மனித உடலில் ஐந்து முக்கியப் பணிகளைப் புரிகிறது.
1. இது உடலுக்கு அமைப்பு மற்றும் வடிவத்தை வழங்குகிறது.
2. உடலின் உள்ளுறுப்புகளைத்தாங்கி அவற்றைச் சூழ்ந்து காணப்படுகிறது.
3. உடலைச் சீரமைக்கும் செயல்பாடுகளுக்குத் தேவையான கால்சியம்
மற்றும் பாஸ்பரஸ் ஆகிய இரண்டு முக்கியமான தாதுக்கள் எலும்புகளுக்குள் சேமிக்கப்படுகின்றன.
4. எலும்பு மஜ்ஜையில் இரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குகின்றன.
5. எலும்பு மண்டலத்தின் எலும்புகள் தசைகளின் செயல்பாட்டிற்கு
நெம்புகோல் செயல்படுகின்றன. டெண்டான் போல் எனப்படும் தசைநாண்கள் (எலும்புடன் தசையை இணைக்கும் திசுக்களின் இழை நாண்கள்)
மற்றும் லிகமெண்ட் எனப்படும் தசைநார்கள் (எலும்புடன் எலும்பை இணைக்கும் திசுக்களின்
இழை நாண்கள்) ஆகியவை இல்லாமல் தசை இயக்கம் நடைபெறாது.
• பீமர் அல்லது தொடை
எலும்பே மனித எலும்புக் கூட்டின் மிக நீளமான மற்றும் வலிமையான எலும்பு ஆகும்.
• நடுச்செவியில் உள்ள
'ஸ்டேபஸ்' என்ற எலும்பே மனித எலும்புக்கூட்டின் மிகச்சிறிய மற்றும் லேசான எலும்பு ஆகும்.
2. எலும்புக்கூட்டின்
தொகுதிகள்
மனித எலும்புக்கூடு எலும்புகள், குருத் தெலும்புகள் மற்றும்
தசைநார்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. எலும்புகள் உடலின் கடினமான கட்டமைப்பை உள்ளடக்கியுள்ளன.
குருத்தெலும்புகள் என்பவை ஆதாரமளிக்கும் மற்றும் இணைக்கும் தசைகளாகும். உதாரணமாக, வெளிப்புறக்
காது மற்றும் மூக்கின் நுனிப்பகுதி ஆகியவை குருத்தெலும்பால் ஆனவை. தசைநார்கள் எலும்புகளை
ஒன்றாக இணைக்கின்றன. மனித எலும்பு மண்டலத்தில் பல்வேறு வகையான எலும்புகள் உள்ளன. அவையாவன:
நீண்ட எலும்புகள்: கைகளிலும், கால்களிலும் காணப்படுகின்றன. குறுகிய
எலும்புகள்: மணிக்கட்டிலும், முதுகெலும்புத் தொடரிலும் காணப்படுகின்றன.
தட்டையான எலும்புகள்: மண்டை ஓடு, விலா எலும்புகள், தோள்பட்டை
மற்றும் இடுப்புகளில் காணப்படுகின்றன.
ஒழுங்கற்ற எலும்புகள்: முதுகெலும்பு, முதுகெலும்புத் தொடர்,
கீழ்த்தாடை, அண்ணம், தாழ்வான நாசிக்குழாய், நாவடி வளை எலும்பு ஆகியவற்றில் காணப்படுகின்றன.
3 எலும்புக்கூட்டின்
பாகங்கள்
எலும்பு மண்டலமானது உடல் இயக்கத்திற்கு உதவும் எலும்புகள் மற்றும்
அதனுடன் தொடர்புடைய கட்டமைப்புகளால் ஆனது. இது இரண்டு முக்கியப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு
உள்ளது. அவை, அச்சு எலும்புக் கூடு மற்றும் இணையுறுப்பு எலும்புக்கூடு ஆகும்.
I. அச்சு எலும்புக்கூடு
மனித உடலின் அச்சு அல்லது மையக்கோட்டில் அமைந்துள்ள எலும்புகளை
அச்சு எலும்புக்கூடு கொண்டுள்ளது. அச்சு எலும்புக்கூட்டில் மண்டை ஓடு, முக எலும்புகள்,
ஸ்டெர்னம் (மார்பக எலும்பு), விலா எலும்புகள் மற்றும் முதுகெலும்புத் தொடர் ஆகியவை
உள்ளன.
அ. மண்டை ஓடு
மண்டை ஓடு என்பது சிறிய எலும்புகளால் ஆன கடினமான அமைப்பு ஆகும்.
இது 22 எலும்புகளால் ஆனது. அதில் 8 எலும்புகள் ஒன்றாக இணைவதால் கிரேனியம் உருவாகிறது.
மேலும், 14 எலும்புகள் இணைந்து முகத்தை உருவாக்குகின்றன. அசையும் மூட்டு கொண்ட ஒரே
எலும்பு கீழ்த்தாடை எலும்பாகும். இந்த நகரக்கூடிய மூட்டு, தசைகள் மற்றும் தசைநார்களால்
தாங்கப்படுகிறது. முதுகெலும்பின் மேற்புறத்தில் வைக்கப்பட்டுள்ள மண்டை ஓட்டை மேலும்,
கீழும் மற்றும் பக்கவாட்டிலும் நகர்த்தலாம்.
ஆ. முள்ளெலும்புத் தொடர்
உடலின் பின்புறத்தில் நீண்டிருக்கும் முள்ளெலும்புத் தொடர் முதுகுத்தண்டு
அல்லது முதுகெலும்பு என்று அழைக்கப்படுகிறது. உடலின் மேல் பகுதியினைத் தாங்குகின்ற
தண்டுப் பகுதியாக இது உள்ளது. முள்ளெலும்புத் தொடர் முதுகு எலும்புகள் எனப்படும் தனிப்பட்ட
எலும்புகளால் ஆனது. முன்னெலும்புத் தொடரில் 7 கழுத்து எலும்புகள், 12 மார்பு எலும்புகள்,
5 இடுப்பு எலும்புகள், 5 திருகெலும்புகள் மற்றும் 3 வால் எலும்புகள் அடங்கியுள்ளன.
முள்ளெலும்புத் தொடர் மண்டை ஓட்டின் அடிப்பகுதியிலிருந்து இடுப்பு எலும்பு வரை சென்று
ஒரு குழாய் போன்ற அமைப்பை உருவாக்குகிறது. இந்தக் குழாயின் முதுகுத்தண்டு செல்கிறது.
முள்ளெலும்புகள் வழக்கு மூட்டுக்களால் இணைக்கப்பட்டுள்ளன. அவை உடலை முன்னும், பின்னும்
மற்றும் பக்கவாட்டிலும் வளைக்க உதவுகின்றன.
.முள்ளெலும்புத் தொடரின் செயல்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
• தண்டுவடத்தைப் பாதுகாக்கிறது.
• தலைப் பகுதியைத் தாங்குகிறது.
• விலா எலும்புகளுக்கான இணைப்பாக செயல்படுகிறது.
• மார்பு மற்றும் இடுப்பு வளையங்கள் இணையும் இடமாகச் செயல்பட்டு
அவற்றிற்கு உறுதியளிக்கிறது.
• மனித எலும்புக்கூட்டிற்கு அசைவை அளிக்கிறது.
• நடக்கவும், சரியான தோரணையில் நிமிர்ந்து நிற்கவும் உதவுகிறது.
இ. மார்பெலும்பு அல்லது விலா எலும்பு
விலா எலும்பு மார்புப் இடம்பெற்றுள்ளது. இது 12 ஜோடி விலா எலும்புகளைக்
கொண்ட கூம்பு வடிவ அமைப்பாகக் காணப்படுகிறது. விலா எலும்புகள் பின்புறத்தில் உள்ள முதுகெலும்புகளுடன்
இணைக்கப்பட்டு ஒரு கூண்டு போன்ற அமைப்பாகக் காணப்படுகின்றன. முன்புறத்தில் 10 ஜோடி
விலா எலும்புகள் மார்பக எலும்புடன் இணைக்கப்பட்டுள்ளன. 2 ஜோடி விலா எலும்புகள் தனித்துக்
காணப்படுகின்றன. இவை மிதக்கும் விலா எலும்புகள் என்று அழைக்கப்படுகின்றன. சுவாசித்தல்
நிகழ்வின்போது சுருங்கி விரிவடையும் வகையில் விலா எலும்பு அமைக்கப்பட்டுள்ளது. நுரையீரல்,
இதயம், கல்லீரல் மற்றும் பிற உறுப்புகளையும் இது மூடிப் பாதுகாக்கின்றது.
மனிதன்
மற்றும் ஒட்டகச் சிவிங்கியின் கழுத்தில் ஒரே எண்ணிக்கையிலான எலும்புகள் உள்ளன. ஆனால்,
ஒட்டகச் சிவிங்கியின் முதுகெலும்புகள் மிக நீளமானவை.
II. இணையுறுப்பு எலும்புக்கூடு
இணையுறுப்பு எலும்புக் கூடு, உடலின் இணையுறுப்புகளிலுள்ள எலும்புகளையும்
இணை உறுப்புகளை அச்சு எலும்புக் கூட்டுடன் இணைக்கும் அமைப்பிலுள்ள எலும்புகளையும் கொண்டுள்ளது.
இணையுறுப்பு எலும்புக்கூடு பொதுவாக, தோள்பட்டை எலும்பு, கை, மணிக்கட்டு, மேற்கை எலும்புகள்,
இடுப்பு, கால், கணுக்கால் மற்றும் பாத எலும்புகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது
அ. தோள்பட்டை
எலும்பு / பெக்டோரல் எலும்பு
தோள்பட்டை எலும்பு முன்பக்கத்தில் காலர் எலும்பாலும்,பின்புறத்தில்
தோள்பட்டைசுத்தியாலும் உருவானது. காலர் எலும்பினை ஒரு முனையில் மார்பக எலும்பும், மறுமுனையில்
தோள்பட்டை சுத்தியும் தாங்குகின்றன. தோள்பட்டை எலும்பு, குழி போன்ற ஒரு அமைப்பை உள்ளடக்கியுள்ளது.
அது மேல் கையின் பந்துப் பகுதியை இணைக்கிறது. இது பந்துக் கிண்ண மூட்டை உருவாக்குகிறது.
இந்த வளையம் பெக்டோரல் வளையம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஆ. இடுப்பு எலும்பு
இடுப்பு எலும்பு பெல்விக் வளையம் என்றும் அழைக்கப்படுகிறது.
இது உடலின் முழு எடையையும் தாங்குவதற்கேற்ற வலுவான எலும்புகளால் ஆனது. இது பின்புறத்தில்
ஐந்து இணைந்த முதுகெலும்புகளால் ஆனது. மேலும் இதன் மேற்பகுதியில் குழிபோன்ற அமைப்பு
காணப்படுகிறது. தொடை எலும்புகள் ஒரு பந்துக் கிண்ண மூட்டுடன் இடுப்பின் இரு புறமும்
இணைக்கப்பட்டுள்ளன.
இ. கை எலும்பு
கை எலும்பு என்பது ஹீமரஸ் (மேற்கை எலும்பு), ஆர எலும்பு, அல்னா
(முழங்கை எலும்பு), கார்பல்கள் (மணிக்கட்டு எலும்பு), மெட்டாகார்பல்கள் (உள்ளங்கை எலும்பு)
மற்றும் ஃபலாஞ்சஸ் (விரல் எலும்பு) ஆகியவற்றால் ஆன மேல் கை ஆகும். இந்த எலும்புகள்
அனைத்தும் கீழ் மூட்டுகளால் இணைக்கப்பட்டுள்ளன. இவை ஒரே திசையில் மட்டுமே செயல்படக்
கூடியவை. ஹீமரஸ் மேல் கையை உருவாக்குகிறது. முன் கையானது ஆரம் மற்றும் அல்னாவால் ஆனது.
மணிக்கட்டு கார்பல்களால் ஆனது. மெட்டாகார்பல்களால் ஆனது. ஃபலாஞ்சஸ்களால் ஆனவை.
ஈ.கால் எலும்பு
கால் எலும்பு என்பது தொடை எலும்பு, டிபியா (கால் முள்ளெலும்பு),
ஃபிபுலா (கால் எலும்பு), டார்சல்கள் (கணுக்கால் எலும்பு), மெட்டாடார்சல்கள் (முன் பாத
எலும்பு) மற்றும் ஃபலாஞ்சஸ் (விரல் எலும்பு) ஆகியவற்றால் ஆன காலின் கீழ்பகுதி ஆகும்.
இந்த எலும்புகள் அனைத்தும் கீழ் மூட்டுகளால் இணைக்கப்படுகின்றன. இவை ஒரே திசையில் மட்டுமே
செயல்படக் கூடியவை. முழங்கால் பட்டெல்லா அல்லது முழங்கால் தொப்பி எனப்படும் தொப்பி
போன்ற அமைப்பால் இது மூடப்பட்டிருக்கும். பீமர் தொடை எலும்பை உருவாக்குகிறது. கால்
டிபியா மற்றும் ஃபிபுலாவால் ஆனது. கணுக்கால் டார்சல்களால் ஆனது. கால் மெட்டாடார்சல்களால்
ஆனது. கால் விரல்கள் ஃபலாஞ்சஸ்களால் ஆனவை.