Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

வளரிளம் பருவமடைதல் | அலகு 20 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் | 8th Science : Chapter 20 : Reaching the age of Adolescence

   Posted On :  10.09.2023 02:35 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 20 : வளரிளம் பருவமடைதல்

நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 20 : வளரிளம் பருவமடைதல் : நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

நினைவில் கொள்க

• வளரிளம் பருவம் என்பது இனப்பெருக்க முதிர்ச்சியின் காலம். இது பொதுவாக 11 முதல் 19 வயது வரை இருக்கும்.

• வளரிளம் பருவத்தில் ஆண்களின் குரல்ஒலிப் பெட்டகமானது தளர்ச்சியுற்று தடிமனாக இருப்பதால் குரலானது கரகரப்பாக உள்ளது.

• நாளமில்லாச் சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் சுரப்புகள் ஹார்மோன்கள் எனப்படும். இவை செல்வதற்கு தனியான நாளங்கள் கிடையாது. எனவே, இவை நேரடியாக இரத்த ஓட்டத்தில் கலக்கின்றன.

• ஆண் இன் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜனும் பெண் இன ஹார்மோனான டெஸ்டோஸ்டீரானும்,  பலவிதமான இரண்டாம்நிலை பால் பண்புகளின் வளர்ச்சிக்குக் காரணமாகின்றன.

• வளர்ச்சியடைந்த கருவுற்ற முட்டையைப் பெறுவதற்கு பெண்களின் கருப்பையின் சுவர் தன்னைத் தானே தயார்படுத்திக் கொள்கிறது. கருவுறுதல் நிகழவில்லையெனில், தடித்த கருப்பையின் சுவரானது உரிந்து இரத்தத்துடன் வெளியேறுகிறது. இதுவே, மாதவிடாய் என்று அழைக்கப்படுகிறது.

• வளரிளம் பருவத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு சரிவிகித உணவை உட்கொள்வது அவசியமாகும்.

 

சொல்லடைவு

வளரிளம் பருவம்  குழந்தைப் பருவத்திலிருந்து வயது வந்தோர் நிலைக்கு மாறும் காலம்.

பூப்படைதல் பருவமடைதலின் முதல் மாதவிடாய் சுழற்சி.

மாதவிடைவு மாதவிடாய் நிற்கும் நிலை.

அண்டம் விடுபடுதல் அண்டகத்திலிருந்து அண்டம் வெளியேறுதல்.

பருவமடைதல் உயிரினங்கள் பாலின முதிர்ச்சியடையும் பருவ நிலை

இரண்டாம்நிலை பால் பண்புகள் பெண்களிலிருந்து ஆண்களை வேறுபடுத்தும் பண்புகள்.




பிற நூல்கள்

1. Animal physiology Verma P.S and Agarwal, V.K. and Tyagi B.S. S.Chand and Company, New Delhi.

2. Text book of Human Physiology. Saradha Subrahmanyam K., Madhavankutty K. and Singh H.D

3. Animal Physiology. Foundations of Modern biology series. Knut Schmidt and Nielsen.

4. K. Chinthanaiyalan (2013). Psychological effects of puberty and growth spurt in adolescents. GCTE Journal of Research and Extnsion in Education.Vol. 8 (2). 5 – 10.

 

இணைய வளங்கள்

1. https://eadership.ng/2018/04/08/toilethygiene

2. https://www.boldsky.com/health/ wellness/2018/world-menstrual-hygiene-day9-basic-menstrual-hygiene-tips-122728.html

3. https://www.boldsky.com/health/ wellness/2018/world


இணையச் செயல்பாடு

வளரிளம் பருவமடைதல்

இச்செயல்பாடுகள் மூலம் வளரிளம் பருவம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

கீழ்க்காணும் உரலி / விரைவுக்குறியைப் பயன்படுத்தி இணையப் பக்கத்திற்குச் செல்க.

திரையில் தோன்றும் பக்கத்தில் "Hormones, Menstrual cycle" போன்ற கானொலிகள் இருக்கும். "Hormones" என்ற கானொலி இணைப்பைச் சொடுக்கவும்.

அடுத்தடுத்த கானொலியைக் காண இச்செயல்பாட்டைத் தொடர்ந்து செய்யவும்.

உரலி: https://www.ticklinks.com/Domain/Open-Links-Library/Course/53/SSC-TN---Class-VIII/Subject

Tags : Reaching the age of Adolescence | Chapter 20 | 8th Science வளரிளம் பருவமடைதல் | அலகு 20 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 20 : Reaching the age of Adolescence : Points to Remember, Glossary, Concept Map Reaching the age of Adolescence | Chapter 20 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 20 : வளரிளம் பருவமடைதல் : நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் - வளரிளம் பருவமடைதல் | அலகு 20 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 20 : வளரிளம் பருவமடைதல்