Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | இனப்பெருக்க ஆரோக்கியம்

வளரிளம் பருவமடைதல் | அலகு 20 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - இனப்பெருக்க ஆரோக்கியம் | 8th Science : Chapter 20 : Reaching the age of Adolescence

   Posted On :  30.07.2023 07:58 am

வளரிளம் பருவமடைதல் | அலகு 20 | 8 ஆம் வகுப்பு அறிவியல்

இனப்பெருக்க ஆரோக்கியம்

ஒருவரின் உடல் மற்றும் மன அந்நபரின் ஆரோக்கியமாகக் கருதப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) இனப்பெருக்க ஆரோக்கியத்தை வளரிளம் பருவத்தின் நடத்தை, உணர்ச்சி, உடல் மற்றும் சமூக அம்சங்களின் மொத்தக் கூறாக வரையறுத்துள்ளது.

இனப்பெருக்க ஆரோக்கியம்

ஒருவரின் உடல் மற்றும் மன அந்நபரின் ஆரோக்கியமாகக் கருதப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) இனப்பெருக்க ஆரோக்கியத்தை வளரிளம் பருவத்தின் நடத்தை, உணர்ச்சி, உடல் மற்றும் சமூக அம்சங்களின் மொத்தக் கூறாக வரையறுத்துள்ளது. ஒவ்வொரு மனிதருக்கும், அவர் எந்த வயதைச் சார்ந்தவராக இருப்பினும் தன் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு, உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் தன் சுகாதாரம் ஆகியவை அவருக்குத் தேவைப்படுகிறது. பெண்கள் மற்றும் ஆண்கள் கடைபிடிக்க வேண்டிய சில பழக்கவழக்கங்கள் பின்வருமாறு,


தூய்மை

1. ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குளிக்க வேண்டும். அடிவயிறு, இடுப்புப்பகுதி மற்றும் பிறப்புறுப்புகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்தி நன்றாகத் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

2. உள்ளாடைகளை தினந்தோறும் மாற்ற வேண்டும். பருத்தியால் ஆன உள்ளாடைகளையே, சுத்தமாக துவைத்துப் பயன்படுத்த வேண்டும்.

3. பதின்ம வயதில் (Teen age) உள்ளவர்களுக்கு வியர்வைச் சுரப்பியின் அதிகப்படியான செயல்பாட்டினால் சில நேரங்களில் உடலில் துர்நாற்றம் ஏற்படும். உடலை சுத்தமாகப் பராமரிக்கவில்லையெனில், பூஞ்சை, பாக்டீரியா மற்றும் தேவையற்ற பிற நோய்த் தொற்று உண்டாக வாய்ப்பு உள்ளது.


மாதவிடாய் சுகாதாரம்

மாதவிடாய் சுழற்சியின் போது, உடல் தூய்மையில் பெண்கள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். துணிகளுக்குப் பதிலாக ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி விட்டு தூக்கி எறியக்கூடிய நாப்கின்கள் அல்லது டாம்பூன்களை பயன்படுத்துவதால் நோய்த் தொற்றிற்கான வாய்ப்பு குறைகிறது. துணிகளை விட சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்த வேண்டும். மாதவிடாயின் அளவைப் பொருத்து, அவை அடிக்கடி மாற்றப்பட வேண்டும். மீண்டும் மீண்டும் துணியினைப் பயன்படுத்துவதாக இருந்தால், சோப்பினை உபயோகித்து வெந்நீரில் துவைத்து நன்கு வெயிலில் உலர்த்திய பின் பயன்படுத்த வேண்டும்.

வளரிளம் பருவத்தினரின் நலமான வாழ்விற்கு தூக்கம் மிகவும் அவசியம் தேவையான அளவு ஆகும். பதின்ம வயதில் ஏற்படும் மன அழுத்தத்தை மேற்கொள்ள உதவுகிறது. இந்த வயதினர் சிறப்பாக செயல்பட, ஒவ்வொரு நாள் இரவிலும் சுமார் 8 முதல் 10 மணி நேரம் தூங்குவது அவசியமானதாகும். ஆனால், பதின்ம வயதினோரில் பெரும்பாலானோர் போதுமான அளவு தூங்குவதில்லை.


உடற்பயிற்சி

தூய்மையான காற்றில் நடைப்பயிற்சி மேற்கொள்வதும், விளையாடுவதும் உடலைக் கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது. இளம் வயது ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் வெளி அரங்கு விளையாட்டுகள் போன்றவற்றை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும். உடல் செயல்பாடானது சிறந்த ஆரோக்கியம், நல்ல தூக்கம் மற்றும் மன அமைதி ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது. மன அமைதி நாளுக்கு நாள் மகிழ்ச்சியை ஊக்குவிக்கிறது.


செயல்பாடு 3

உங்கள் வகுப்பில் வழக்கமாக உடற்பயிற்சி செய்யும் மற்றும் உடற்பயிற்சி மாணவர்களின் செய்யாத எண்ணிக்கை குறித்த தகவல்களைச் சேகரிக்கவும். அவர்களின் உடல் கட்டமைப்பு மற்றும் ஆரோக்கியத்தில் ஏதேனும் வித்தியாசம் இருப்பதை நீங்கள் கவனித்தீர்களா? நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஒரு அறிக்கையைத் தயாரிக்கவும்.

Tags : Reaching the age of Adolescence | Chapter 20 | 8th Science வளரிளம் பருவமடைதல் | அலகு 20 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 20 : Reaching the age of Adolescence : Reproductive Health Reaching the age of Adolescence | Chapter 20 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. வளரிளம் பருவமடைதல் | அலகு 20 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : இனப்பெருக்க ஆரோக்கியம் - வளரிளம் பருவமடைதல் | அலகு 20 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
வளரிளம் பருவமடைதல் | அலகு 20 | 8 ஆம் வகுப்பு அறிவியல்