வளரிளம் பருவமடைதல் | அலகு 20 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - வளரிளம் பருவத்தினருக்கான தனிப்பட்ட சுகாதாரம் | 8th Science : Chapter 20 : Reaching the age of Adolescence
வளரிளம் பருவத்தினருக்கான தனிப்பட்ட சுகாதாரம்
வளரிளம் பருவத்தில், வளரும் குழந்தைகள் உணவு, உடற்பயிற்சி மற்றும்
தனிப்பட்ட சுகாதாரம் ஆகியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். தனிப்பட்ட சுகாதாரம்
என்பது ஒரு மனிதனின் ஆளுமையினைக் குறிக்கும் தெளிவான குறியீடாகும். வளரிளம் பருவத்தினருக்கான
தனிப்பட்ட சுகாதாரப் பழக்கங்களாவன:
1. தினந்தோறும் குளித்தல்.
2. சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் கைகளைக் கழுவுதல்.
3. விரல் நகங்களை சுத்தமாக வைத்திருத்தல் மற்றும் நகப்பூச்சுகள்
உபயோகிப்பதைத் தவிர்த்தல். 4. ஒவ்வொரு முறையும் உணவு உண்பதற்கு முன்னும், பின்னும்
பற்கள் மற்றும் வாயை நன்றாக சுத்தம் செய்தல்.
5. உணவு சமைக்கும் போது முகம், மூக்கு அல்லது வாயினைத் தொடுதலைத்
தவிர்த்தல்.
6. உணவுப் பொருள்கள் அருகில் இருக்கும் போது இருமல் அல்லது தும்மலைத்
தவிர்த்தல். மேலும், பொது இடங்களில் இருமல் வந்தால் வாயினை கைக்குட்டையினைக் கொண்டு
மூடுதல்.
7. உணவினைச் சுவைபார்க்க விரும்பினால், சுத்தமான கரண்டியைப்
பயன்படுத்துதல்.
8. ஒவ்வொரு நாளும் உடைகளை, குறிப்பாக உள்ளாடைகளை மாற்றி, சுத்தமாகத்
துவைத்தல்
9. திறந்த வெளியில் மலம் கழிக்கக் கூடாது. சுத்தமான கழிவறைகளை
மலம் கழிக்க உபயோகப்படுத்த வேண்டும்.
10. உடல்நலம் பாதிக்கப்பட்டால் சுயமாக மருந்துகள் எடுத்துக்
கொள்ளாமல், மருத்துவரை அணுகுதல்.
.
செயல்பாடு 5
பின்வருவனவற்றிற்கு
பதிலளிக்க முயற்சி செய்.
•
நீ நாள்தோறும் உடற்பயிற்சி செய்கிறாயா?
•
நீ உனது உடலைச் சுத்தமாக வைத்திருக்கிறாயா?
•
நீ ஒவ்வொரு நாளும் எப்பொழுது தூங்கச் செல்வாய்?
•
நீ காலையில் எப்பொழுது தூங்கி எழுந்திருப்பாய்?
உன்
பதிலை உன்னுடைய நண்பர்களின் பதிலோடு ஒப்பிடு. உன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என நீ
நினைக்கிறாயா?