வளரிளம் பருவமடைதல் | அலகு 20 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - இனப்பெருக்கத்தில் ஹார்மோன்களின் பங்கு | 8th Science : Chapter 20 : Reaching the age of Adolescence
இனப்பெருக்கத்தில் ஹார்மோன்களின் பங்கு
இனப்பெருக்கத்தை ஒழுங்குபடுத்தும் முதன்மை ஹார்மோன்களான ஆண்ட்ரோஜன்,
ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் போன்ற ஸ்டீராய்டு வகை ஹார்மோன்கள் முறையே ஆண்தன்மை,
பெண்தன்மை மற்றும் கர்ப்பகால மாற்றங்கள் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன. ஆண்கள் மற்றும்
பெண்களில் இனப்பெருக்கம் மற்றும் இனப்பெருக்க நடத்தைகள் முக்கியமாக LH (லூட்டினைசிங்
ஹார்மோன்) (பாலிக்கிள்களைத் தூண்டும் மற்றும் FSH ஹார்மோன்) ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
பாலிக்கிள்களைத்
தூண்டும் ஹார்மோன் (FSH)
பெண்களில் FSH எனும் ஹார்மோன் கிராஃபியன் பாலிக்கிள்களின் வளர்ச்சியைத்
தூண்டி ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்கிறது. ஆண்களில் விந்து நாளங்களின் வளர்ச்சி மற்றும்
விந்தணுவாக்கத்திற்கு இது அவசியமாகிறது.
லூட்டினைசிங்
ஹார்மோன் (LH)
பெண்களில் அண்டம் விடுபடுதல், கார்பஸ்லூட்டியம் உருவாக்கம் மற்றும்
லூட்டியல் ஹார்மோனான புரோஜெஸ்ட்டிரான் உற்பத்தி, கிராஃபியன் பாலிக்கிள்களின் இறுதி
முதிர்வுநிலை ஆகியவற்றிற்கு இந்த ஹார்மோன் தேவைப்படுகிறது. ஆண்களில் விந்தகங்களில்
காணப்படும் இடையீட்டுச் (லீடிக்) செல்களைத் தூண்டி டெஸ்டோஸ்டீரானை உற்பத்தி செய்கிறது.
ஈஸ்ட்ரோஜன்
ஒரு தனித்த ஹார்மோன் அல்ல. அது ஒன்றுக்கொன்று தொடர்புடைய பலஸ்டீராய்டுஹார்மோன்களின்
தொகுப்பாகும்.
புரோலாக்டின்
(PRL) அல்லது லாக்டோஜெனிக் ஹார்மோன்
பாலூட்டுதலின் போது பாலை உற்பத்தி செய்வது இதன் பணியாகும்.
ஆக்சிடோசின்
ஹார்மோன்
ஆக்சிடோசின் ஹார்மோன் மார்பகங்களில் இருந்து பால் வெளியேறுதலுக்குக்
காரணமாகிறது. மேலும், குழந்தைப் பிறப்பின்போது தசைகளை சுருங்கச் செய்து குழந்தைப் பிறப்பை
எளிதாக்குகிறது.