Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | மீள்பார்வை - மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம்

வரலாறு - மீள்பார்வை - மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம் | 9th Social Science : History : Evolution of Humans and Society - Prehistoric Period

   Posted On :  11.09.2023 10:15 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 1 : மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம்

மீள்பார்வை - மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம்

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம்

மீள்பார்வை

மனிதர்களின் வரலாறு புவியின் வரலாற்றோடு நெருக்கமாகப் பிணைந்துள்ளது. புவி சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. „

மனித மூதாதையர்களான ஹோமினின்கள் சுமார் 5-7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றினார்கள். „

மனிதர்களின் தோற்றம் குறித்து மக்கள் தெய்வீகமான விளக்கங்களை தொடக்க காலத்தில் தந்தனர். ஆனால் விஞ்ஞானரீதியாக மனிதர்கள் பெருங்குரங்குகளிலிருந்து (GreatApes) பரிணமித்தார்கள் என்ற கொள்கையை முன்வைக்கிறது

மனிதர்கள் விலங்குகளைப் பழக்கப்படுத்தி, பயிர் செய்ய ஆரம்பித்தார்கள். இந்த வேளாண்மைப் புரட்சி பல மாற்றங்களுக்கு இட்டுச் சென்றது. மனிதர்கள் நிரந்தரமான வீடுகளில், ஊர்களில் வசித்தார்கள். பானைகள் செய்தார்கள். உபரியின் உற்பத்தி மூலம் பல்வேறு கலைகளை வளர்த்துக் கொண்டார்கள்.

தமிழ்நாட்டில் முதன்முதலில் மனிதர்கள் சுமார் 2-1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

இடைப் பழங்கற்காலப் பண்பாடு தமிழ்நாட்டின் சில பகுதிகளில் காணப்படுகின்றது.

இடைகற்கால மக்கள் தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வாழ்ந்திருக்கிறார்கள்.

புதிய கற்கால சான்றுகள் தமிழகத்தின் வட மேற்கு பகுதியில் கிடைக்கின்றன.

இரும்புக்காலத்தில் மக்கள் பல்வேறு நிலப்பகுதிகளில் மேலும் பரவினார்கள். இவர்கள் பின்னால் வந்த சங்ககாலத்திற்கு அடித்தளமிட்டார்கள்.

வேளாண்மையில் இரும்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

Tags : History வரலாறு.
9th Social Science : History : Evolution of Humans and Society - Prehistoric Period : Summary of Evolution of Humans and Society - Prehistoric Period History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 1 : மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம் : மீள்பார்வை - மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம் - வரலாறு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 1 : மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம்