அளவீடுகளில் துல்லியம்
இயற்பியல் அளவுகளை அளவிடும்போது, துல்லியம் என்பது அவசியமாகும். துல்லியம் என்பது நாம் அளக்கும் அளவீடானது எந்த அளவிற்கு உண்மையான அளவீட்டோடு ஒன்றி வருகிறது என்பதைக் குறிக்கிறது. அளவீடுகளில் துல்லியம் என்பது பொறியியல், இயற்பியல் மற்றும் அனைத்து அறிவியல் பிரிவுகளுக்கும் மையமாக இருக்கிறது. துல்லியம் என்பது நம் அன்றாட வாழ்க்கையிலும் அவசியமானதாகும். நகைக் கடைகளில் எவ்வளவு துல்லியமாக தங்கத்தை அளவிடுகிறார்கள் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். உணவு சமைக்கும்போது,
உப்பின் அளவு சிறிது அதிகமாகி விட்டால் துல்லியமாக அளவிடுவது அவசியமாகும்.
பிழையான அளவிடும் கருவிகள் மற்றும் அளவிடுபவர் புரியும் பிழைகளால் துல்லியமற்ற மதிப்புகள் கிடைக்கின்றன. துல்லியமான அளவுகளைப் பெறுவதற்கு, அளவிடும் கருவியின் துல்லியத்தன்மையை சரிபார்ப்பது என்பது எப்பொழுதும் முக்கியமானதாகும். மேலும், அளவீடுகளை மீண்டும் மீண்டும் செய்து சராசரியைக் காண்பதன் மூலமும் பிழைகளைச் சரிசெய்து அளவிடும் அளவுகளின் துல்லியமான மதிப்பினைப் பெற முடியும்.
❖ வேறு எந்தவொரு அளவினாலும் அளவிட முடியாத அளவுகளை அடிப்படை அளவுகள் என்கிறோம். எடுத்துக்காட்டு: நீளம், நிறை, காலம் மற்றும் வெப்பநிலை.
❖ வேறு அளவுகளினால் அளவிடக்கூடிய அளவுகள் வழி அளவுகள் எனப்படும். எடுத்துக்காட்டு: பரப்பளவு,
கன அளவு மற்றும் அடர்த்தி .
அலகு என்பது தெரியாத அளவு ஒன்றுடன் ஒப்பிடக்கூடிய படித்தரமான அளவு ஆகும்.
❖ நீளம், நிறை, காலம், வெப்பநிலை, மின்னோட்டம், ஒளிச்செறிவு மற்றும் பொருளின் அளவு என SI
முறையிலான அடிப்படை அளவுகள் ஏழு ஆகும்.
❖ சிறிய பரிமாணங்களின் நீளம் (அ) தடிமனைக் கண்டறிய வெர்னியர் அளவி மற்றும் திருகு அளவி போன்ற கருவிகள் பயன்படுகின்றன.
❖ ஒரு வானியல் அலகு என்பது சூரியனின் மையத்திலிருந்து பூமியின் மையம் வரையுள்ள சராசரித் தொலைவாகும். 1 AU = 1.496 × 1011 மீ.
❖ ஒளி ஆண்டு என்பது ஒளியானது தொடர்ந்து ஓராண்டு செல்லக்கூடிய தொலைவாகும். ஒளி ஆண்டு =
9.46
× 1015 மீ
❖ விண்ணியல் ஆரம் என்பது சூரிய குடும்பத்திற்கு வெளியேயுள்ள வானியல் பொருட்களின் தொலைவை அளவிடும் அலகாகும்.
❖ 1 ஆங்ஸ்ட்ர ம் (A°) = 10-10மீ
❖ பருமனின் SI
அலகு கனமீட்டர் (அ) மீ3. பொதுவாக பருமனை லிட்டர் (I) என்ற அலகாலும் குறிக்கலாம். 1மி.லி =
1 செ.மீ3
❖ திருகு அளவியின் மீச்சிற்றளவு 0.01 மி.மீ மற்றும் வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவு 0.01 செ.மீ
❖ பொதுத் தராசினைக் கொண்டு துல்லியமாக அளவிடக்கூடிய நிறை 5 கி.
❖ இயற்பியல் தராசின் துல்லியத் தன்மை 1 மி.கி
A-Z சொல்லடைவு
மீட்டர் (m) ஒளியானது 1/29,97,92,458 விநாடியில் வெற்றிடத்தில் கடக்கும் தூரம்.
கிலோகிராம் (kg) பிரான்ஸ் நாட்டில் செவ்ரஸ் எனும் இடத்திலுள்ள எடை மற்றும் அளவீடுகளுக்கான பன்னாட்டு அமைப்பில் வைக்கப்பட்டுள்ள பிளாட்டினம்- இரிடியம் உலோகக்கலவையால் செய்யப்பட்ட முன் மாதிரி உருளையிள் நிறை.
வினாடி (s) ஒளியானது 29,97,92,458 மீட்டர் தொலைவு வெற்றிடத்தில் பரவுவதற்குத் தேவையான காலம்.
கெல்வின் (K) வெப்ப இயக்கவியலின் வெப்பநிலையில் 1/273.16 பின்ன மதிப்பு.
ஆம்பியர் (A) வெற்றிடத்தில் ஒரு மீட்டர் இடைவெளியில் வைக்கப்பட்டுள்ள இரு கம்பிகளுக்கு இடையே ஒரு குறிப்பிட்ட விசையைத் தோற்றுவிக்கும் மின்னோட்டம்.
மோல் (Mole) கார்பன் – 12 அணுவின் 0.012 கிலோகிராம் நிறையில் உள்ள அடிப்படைத் துகள்களின் மதிப்பிற்குச் சமமான பொருளின் அளவு.
கேண்டிலா (cd) கொடுக்கப்பட்ட திசையில் ஒரு குறிப்பிட்ட அளவு திறனை வழங்கும் குறிப்பிட்ட அதிர்வெண் கொண்ட ஒளி மூலத்தின் செறிவு.