அளவீடு - அலகுகளுக்கான முன்னீடுகள் | 9th Science : Measurement and Measuring Instruments
அலகுகளுக்கான முன்னீடுகள்
அலகுகளுக்கான முன்னீடுகள் என்பவை, ஒரு அளவீட்டின் எண்ணளவைக் குறிப்பதற்காக ஒரு அலகின் குறியீட்டிற்கு முன்பாக எழுதப்படும் குறியீடுகள் ஆகும். அவை மிகப்பெரிய அல்லது மிகச்சிறிய அளவுகளைக் குறிப்பதற்கு பயன்படுகின்றன. கிலோமீட்டர் என்பதில் கிலோ (k)
என்பது முன்னீடு ஆகும். முன்னீடு என்பது பத்தின் அடுக்கிலுள்ள நேர்க்குறி அல்லது எதிர்க்குறி எண்ணைக் குறிக்கின்றது. ஒரு சில அலகுகளுக்கான முன்னீடுகள் அட்டவணை 1.6 ல் கொடுக்கப்பட்டுள்ளன.
இயற்பியல் அளவீடுகளின் மதிப்புகள் மிகப்பெரிய அளவில் மாறுபடக்கூடியவை. நாம் அணுவின் உட்கருவின் ஆரத்தினை 10-15மீ எனவும்,
இரு விண்மீன்களுக்கு இடையேயான தொலைவை 1026மீ எனவும் குறிக்கிறோம். எலக்ட்ரானின் நிறையை 9.11
× 10-31 கிகி எனவும், நமது பால்வழித்திரள் அண்டத்தின் நிறையை 2.2
× 1041 kg எனவும் குறிக்கிறோம்.
அட்டவணை 1.6 அலகுகளுக்கான முன்னீடுகள்