SI அலகுகளை எழுத பின்பற்ற வேண்டிய விதிகளும், மரபுகளும்
1.
அறிவியல் அறிஞர்களின் பெயர்களால் குறிக்கப்படும் அலகுகளை எழுதும்போது, முதல் எழுத்து பெரிய எழுத்தாக (Capital
Letter) இருக்கக்
கூடாது. எ.கா: newton,
henry, ampere, watt
2.
அறிவியல் அறிஞர்களின் பெயர்களால் குறிக்கப்படும் அலகுகளின் குறியீடுகளை எழுதும்போது பெரிய எழுத்தால் எழுதவேண்டும். எ.கா: newton என்பது N,
henry என்பது, H, ampere என்பது A
, watt என்பது W
3.
குறிப்பிட்ட பெயரால் வழங்கப்படாத அலகுகளின் குறியீடுகளை சிறிய எழுத்தால் (Small
Letter) எழுத வேண்டும். எ.கா: metre என்பது m
மற்றும் kilogram
என்பது kg
4.
அலகுகளின் குறியீடுகளுக்கு இறுதியிலோ அல்லது இடையிலோ நிறுத்தல் குறிகள் போன்ற எந்தக் குறியீடுகளும் பயன்படுத்தக் கூடாது எ.கா: 50m என்பதை 50m.
என்று குறிப்பிடக் கூடாது.
5.
அலகுகளின் குறியீடுகளை பன்மையில் எழுதக் கூடாது. எ.கா: 10kg
என்பதை 10kgs
என எழுதக்கூடாது.
6.
வெப்பநிலையை கெல்வின் (Kelvin)
அலகால் குறிப்பிடும் போது டிகிரி குறி இடக் கூடாது. எ.கா: 283K
என்பதை 283°K
என எழுதக் கூடாது.
(செல்சியஸ் மற்றும் பாரன்ஹீட் அலகுகளைக் குறிப்பிடும்போது டிகிரி குறி இட வேண்டும் எ.கா: 100°C மற்றும் 108°F
என எழுத வேண்டுமே தவிர 100
C மற்றும் 108F என எழுதக்கூடாது.)
7.
அலகுகளின் குறியீடுகளை வகுக்கும்போது சரிவுக்
(/) கோட்டினைப் பயன்படுத்தலாம். ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட சரிவுக் கோடுகளைப் பயன்படுத்தக் கூடாது. எ.கா: ms-1 அல்லது m/s என எழுதலாம். J
/ K / mol என எழுதாமல் JK-1 mol-1 என எழுத வேண்டும்.
8.
எண் மதிப்பிற்கும், அலகுகளுக்கும் இடையில் இடைவெளி இடவேண்டும். எ.கா: 15
kgms-1 என்று எழுத வேண்டுமே தவிர 15kgms-1
என இடைவெளியின்றி எழுதக்கூடாது.
9.
ஏற்றுக்கொள்ளப்பட்ட குறியீடுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எ.கா:Ampere என்பதை amp
என்றோ second
என்பதை sec
என்றோ எழுதக் கூடாது.
10. எந்தவொரு இயற்பியல் அளவின் எண் மதிப்பையும் அறிவியல் முறைப்படியே எழுத வேண்டும். எ.கா: பாதரசத்தின் அடர்த்தியை 13600 kgm-3 என்று எழுதாமல் 1.36 × 104 kgm-3 என எழுத வேண்டும்.