எண்கள் | பருவம்-1 அலகு 2 | 2வது கணக்கு - கூட்டல் | 2nd Maths : Term 1 Unit 2 : Numbers
கூட்டல்
கண்மணி, ஆஷா மற்றும் பிரஷாந்த் ஆகியோர் ஐஸ் குச்சிகளைப் பயன்படுத்திக் கைவினைப் பொருள்கள் செய்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் பயன்படுத்திய குச்சிகளின் மொத்த எண்ணிக்கையைக் கண்டறிந்து நீல நிறப் பெட்டியில் எழுதுக.
பல்வேறு பொருள்களைக் கொண்டு எண்களின் கூடுதலைக் காண மாணவர்களுக்கு ஆசிரியர் உதவலாம்.
வன விலங்குப் பூங்காவில் பயணம்
பூங்கா தொடர்வண்டியில் 20 நபர்கள் உள்ளனர். ஒவ்வொரு நிறுத்தத்திலும் தொடர்வண்டியில் ஏறும் நபர்களை ராஜ் எண்ணுகிறான்.
கலைச் சொற்கள் : எண்ணுதல், கூட்டுதல், மொத்தம், சேர்த்தல், ஒட்டுமொத்தம்
வெள்ளைப் புலிகளைப் பார்த்த பிறகு 2 குழந்தைகள் தொடர்வண்டியில் ஏறினர்.
20 + 2 = 22
நீர்வாழ் காட்சிச் சாலையிலிருந்து 5 குழந்தைகள் தொடர்வண்டியில் ஏறினர்.
22 + 5 = 27
2 குழந்தைகள் வண்ணத்துப்பூச்சிப்
பூங்காவிலிருந்து தொடர்வண்டியில் ஏறினர்.
27 + 2 = 29
ஆசிரியர் மேற்காணும் சூழலைப் பயன்படுத்தித் தொடர்வண்டியில் ஏறும் குழந்தைகளின் எண்ணிக்கையை மாற்றி அமைத்து மாணவர்களின் மொத்த எண்ணிக்கையைக் காண ஊக்கப்படுத்தவும்.
1. முத்து 32 எலுமிச்சைப் பழங்களையும், கண்ணன் 5 எலுமிச்சைப் பழங்களையும் வாங்கினார்கள். அவர்கள் வாங்கிய மொத்த எலுமிச்சைப் பழங்கள் எத்தனை?
2. அபி 24
கொய்யாப் பழங்களையும், ஜெஸி 33
கொய்யாப் பழங்களையும் பறித்தார்கள். அபி மற்றும் ஜெஸி பறித்த மொத்தப் பழங்கள்
எத்தனை?
1. பலூன் வியாபாரியிடம் 23 இளம் சிவப்பு நிற பலூன்களும் 4 மஞ்சள் நிற பலூன்களும் இருந்தன. அவரிடம் உள்ள மொத்த பலூன்களின் எண்ணிக்கையைக் காண்க.
2. பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் ஒரு பள்ளி 30 தங்கப் பதக்கங்களும் 21 வெள்ளிப் பதக்கங்களும் வென்றது. அப்பள்ளி வென்ற மொத்தப் பதக்கங்களின் எண்ணிக்கையைக் காண்க.
3. ரீனா, ஒரு நாள் 30 பேனாக்களைக் கடையிலிருந்து வாங்கினாள். அடுத்த நாள் மேலும் 50 பேனாக்களை வாங்கினாள். அவளிடம் உள்ள மொத்தப் பேனாக்களின் எண்ணிக்கை எத்தனை?
4. மணியிடம் 54 கரிக்கோலும், பொன்னியிடம்
21 கரிக்கோலும் மாலினியிடம் 23
கரிக்கோல்களும் இருந்தன. அவர்களிடம் இருந்த மொத்தக் கரிக்கோல்களின் எண்ணிக்கையைக்
காண்க.
கூட்டலின் பல்வேறு வழிகள்
1. விரல்களைப் பயன்படுத்திக் கூட்டல் : 24 + 3
24 + 3 = 27
2. எண்கோட்டைப் பயன்படுத்திக் கூட்டல் : 14 + 5
14 + 5 = 19
3. மணிகளைப் பயன்படுத்திக் கூட்டல் : 32 + 24 + 13
32 + 24 + 13 = 69
4. ஆணிமணிச் சட்டத்தைப் பயன்படுத்திக் கூட்டல் : 26 + 61
26 + 61 = 87
பின்வருவனவற்றுக்குக் கூடுதல் காண்க
பின்வருவனவற்றைக் கூட்டுக.
i) 34 + 35 = 69
ii) 13 + 2 + 1 = 16
iii) 14 + 10 + 2 = 26
|iv) 34 + 30 + 3 = 67
v) 30 + 26 + 40 = 96
iv) 45 + 23 + 21 = 89
பத்துகள் மற்றும் ஒன்றுகளுக்கு வண்ணமிட்டுக் கொடுக்கப்பட்டுள்ள எண்களின் கூடுதல் காண்க. 43 + 25
உதிரி மணிகளை வண்ணமிட்டு ஒன்றுகளின் கூடுதல் காண்க.
10 மணிச்சரங்களை வண்ணமிட்டுப் பத்துகளின் கூடுதல் காண்க.
எடுத்துக்காட்டில் உள்ளதைப்போல் இடப்புறம் உள்ள எண்களை 10 மற்றும் 14 உடன் கூட்டி வலப்புறத்திலுள்ள வட்டங்களை நிறைவு செய்க.
விடை :
அ)
20 + 10 = 30
25 + 10 = 35
36 + 10 = 46
48 + 10 = 58
ஆ)
32 + 14 = 46
40 + 14 = 54
53 + 14 = 67
65 + 14 = 79
கூடுதலாக அறிவோம்
இரண்டும் – ஒன்றே
23 + 5 = 28
13 + 0 = 13
23 + 35 = 58 35 + 23 = 58
* மாணவர்களை இரு குழுக்களாகப் பிரித்துக் குழுவிற்கு 100 குச்சிகள் வீதம் (10 குச்சிகளாகக் கொண்ட கட்டுகளையும், உதிரிக் குச்சிகளையும் சேர்த்து) கொடுக்கவும்.
* ஆசிரியர் கூட்ட வேண்டிய இரு எண்களைக் கூறவும் (எ.கா.) 42, 56
* முதல் குழு 40 (4 பத்துக்கள்) + 2 குச்சிகளையும் இரண்டாம் குழு 50 (5 பத்துகள்) + 6 குச்சிகளையும் எடுக்க வேண்டும்.
* இரு குழுக்களிலும் உள்ள கட்டுகளையும், உதிரிகளையும் ஒன்றாகச் சேர்த்த பின், இருக்கும் உதிரிகளைத் தனியாகவும் கட்டுகளைத் தனியாகவும் கூட்டுக.
* ஆசிரியர் முதலில் ஒன்றுகளையும் பிறகு பத்துகளையும் கூட்டி விடை காண அறிவுறுத்தவும்.
1. 30 குழந்தைகள் கயிறு தாண்டும் விளையாட்டு விளையாடினர். மேலும் 20 குழந்தைகள் அவ்விளையாட்டில் சேர்ந்தனர். எனில், அவ்விளையாட்டில் உள்ள மொத்தக் குழந்தைகளின் எண்ணிக்கை என்ன?
30 + 20 = 50
விடை : மொத்த குழந்தைகள் = 50
2. சுஜி 12 குழந்தைகளையும் 15
பெரியவர்களையும் பூங்காவில் எண்ணிப் பார்த்தாள் எனில் அவள் எண்ணிப் பார்த்த மொத்த
மனிதர்களின் எண்ணிக்கை என்ன?
12 + 15 = 27
3. ஒரு மீனவர் காலையில் 22 மீன்களையும் மதியம் 12 மீன்களையும் பிடித்தார். அவர் பிடித்த மொத்த மீன்களின் எண்ணிக்கை என்ன?
22 + 12 = 34
விடை : மொத்த மீன்கள் = 34
4. வகுப்பறையில் 15 ஆண்களும் 24
பெண்களும் இருந்தனர். வகுப்பில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை என்ன?
15 + 24 = 39
விடை: மொத்த மாணவர்கள் = 39
5. ஒரு பறவைகள் சரணாலயத்தில் 33 கிளிகளும் 15 மயில்களும் இருந்தன. எனில், அங்கிருந்த மொத்தப் பறவைகள் எத்தனை?
33 + 15 = 48
விடை: மொத்த பறவைகள் = 48