எண்கள் | பருவம்-1 அலகு 2 | 2வது கணக்கு - கழித்தல் | 2nd Maths : Term 1 Unit 2 : Numbers
கழித்தல்
படத்தினை உற்றுநோக்கி, பொருள்களைக் கோடிட்டு அடித்துக் கழித்தல் கூற்றினை எழுதவும் எழுத்துக்காட்டில் உள்ளதைப்போல்
1. விடை 2 பெறுவதற்கான கழித்தல் கூற்றினைக் கட்டத்தில் எழுதவும்.
2. விடை 6 பெறுவதற்கான எண் கூற்றினை எழுதவும்.
3. விடை 1 பெறுவதற்கான கழித்தல் கூற்றினை எழுதவும்.
4. பின்வருவனவற்றைக் கழிக்க
மாணவர்கள் கழித்தலைப் புரிந்து விடையளிக்க ஆசிரியர் உதவுக.
பிறந்த நாள் கொண்டாட்டம்
சதிஷ் தன் பிறந்த நாளில் 20 கடலை மிட்டாய்களைத் தன் நண்பர்களுக்கு வழங்கினான்.
கழித்தல் கூற்றினை நிறைவு செய்க.
20 – 4 = 16
16 – 3 = 13
13 – 5 = 8
8 – 2 = 6
6 – 3 = 3
3 – 3 = 0
ஆசிரியர் மேலே கொடுக்கப்பட்ட சூழலில் குழந்தைகள் எடுத்த கடலை மிட்டாய்களின் எண்ணிக்கையை வேறுபடுத்திப் பல்வேறு கழித்தல் கூற்றினை உருவாக்கலாம்
1. கமலியிடம் 25 வெள்ளரிக் காய்கள் உள்ளன. அவற்றில் 3ஐ தன் நண்பர்களுக்கு வழங்கினாள். அவளிடம் மீதமுள்ள காய்களின் எண்ணிக்கை எவ்வளவு?
2. ஒரு கடையில் 56 இளநீர்கள் உள்ளன. அவற்றில் 30 விற்பனையாகிவிட்டன. கடையில் மீதமுள்ள இளநீர்களின் எண்ணிக்கை என்ன?
1. லீலா 28 எலுமிச்சைகளைப் பறித்தாள். அவற்றில் 5 எலுமிச்சைகளைப் பழச்சாறு எடுக்கப் பயன்படுத்தினாள். மீதம் உள்ள எலுமிச்சைகளின் எண்ணிக்கை என்ன?
28 − 5 = 23
விடை : 23
2. பாலா 26 காகிதக் கப்பல்களும் கலா 6 காகிதக் கப்பல்களும் செய்தனர். கலாவை விட பாலா எத்தனை கப்பல்கள் அதிகமாகச் செய்தான்?
26 − 6 = 20
விடை : 20
3. சிவா 36 வேர்க்கடலைகள்
வைத்திருந்தான். அதில் விளையாட்டு நேரத்தில் 14
வேர்க்கடலைகளை உண்டுவிட்டான் எனில், அவனிடம் மீதம் உள்ள
வேர்க்கடலைகளின் எண்ணிக்கை என்ன?
36 − 14 = 22
விடை : 22
4. காவியாவின்
அம்மா 57 எள்ளுருண்டைகள் செய்தார். அவற்றுள் 13 எள்ளுருண்டைகளைக் காவியாதன் நண்பர்களுடன் உண்டாள். தற்போது மீதமுள்ள
எள்ளுருண்டைகளின் எண்ணிக்கை யாது?
57 − 13 = 44
விடை : 44
பல்வேறு வழிகளில் கழித்தல்
1. விரல்களைக் கொண்டு கழித்தல் : 38 - 5
38 – 5 = 33
2. எண்கோட்டில் கழித்தல் 38 – 5
38 – 5 = 33
3. மணிகளைக் கொண்டு கழித்தல் 38 – 25
38 – 25 = 13
4. ஆணிமணிச் சட்டத்தைக் கொண்டு கழித்தல் 98 – 25
98 – 25 = 73
மணிகளை அடித்துக் கழிக்க
48 – 5
விடை : 43
78 – 35
விடை : 43
ஆணிமணிச் சட்டத்தைக் கொண்டு கழிக்க 36 – 3 = 33
விடை : 33
69 – 47 = 22
விடை : 22
மதிப்பு காண்க.
கொடுக்கப்பட்ட கூட்டல் கூற்றிலிருந்து 2 கழித்தல் கூற்றுகளை நாம் உருவாக்கலாம்.
* மாணவர்களை இருவர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கவும். பத்து குச்சிகளாகக் கொண்ட கட்டுகள் ஒன்பதை ஒரு பெட்டியிலும் உதிரிகளாக 9 குச்சிகளை ஒரு பெட்டியிலும் போடவும்.
* ஆசிரியர் ஒரு கழித்தல் கூற்றினைக் கரும்பலகையில் எழுதிவிட்டு ஒரு குழுவினை அழைக்கலாம்.
* கழித்தல் கூற்றிலுள்ள எண்ணிற்குத் தகுந்தாற்போல் குழுவிலுள்ள ஒருவர் பத்து குச்சிகள் கொண்ட கட்டுகளையும் மற்றொருவர் உதிரிக்குச்சிகளையும் எடுக்கவேண்டும்.
* கழித்தல் கூற்றிற்கான விடைகாண அவர்கள் எடுத்த கட்டுகளையும் உதிரிக்குச்சிகளையும் மீண்டும் பெட்டியில் போட்டு விட்டுத் தங்களிடம் மீதமுள்ள குச்சிகளை மற்றவர்களுக்குக் காட்டவும்.
* ஆசிரியர் மற்ற குழுக்களைக் கொண்டு செயல்பாட்டைத் தொடரலாம்.
நீயும் கணித மேதை தான்
கொடுக்கப்பட்டுள்ள அமைப்பினை உற்றுநோக்கிக் கழித்தல் கூற்றினை நிறைவு செய்க.
விடை: 55, 31, 21, 10, 5
மகிழ்ச்சி நேரம்
எடுத்துக்காட்டில் உள்ளதைப்போல் கழித்தல் கூற்றை எழுதி வெளி வட்டத்தினை நிறைவு செய்க.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கழித்தல் கூற்றுகளுக்கு விடை காண்க.
கழித்தல் கூற்று = தீர்வு
37 – 30 = 7
46 – 41 = 5
68 – 54 = 14
70 – 70 = 0
57 – 42 = 15
21 – 0 = 21
39 – 20 = 19
பின்வரும் எண்களைப் பயன்படுத்திப் பல்வேறு கணிதக் கூற்றுகளை உருவாக்கித் தீர்வு காண்க. 0, 20, 21, 30, 37, 39, 41, 42, 46, 54, 57, 68, 70
விடை
0 – 20 = 20
30 – 21 = 9
39 – 37 = 2
46 – 39 = 7
42 – 41 = 1
57 – 54 = 3
70 – 68 = 2
1. இலக்கியா 29 பூக்களைக் கொண்டு பூங்கொத்து உருவாக்கினாள். அவற்றில் 12 பூக்கள் விழுந்து விட்டன. பூங்கொத்தில் மீதமுள்ள பூக்களின் எண்ணிக்கை என்ன?
விடை
29 – 12 = 17
2. 19 குழந்தைகள் பூங்காவில் இருந்தனர். அவர்களில் 2 பேர் வெளியேறினால் பூங்காவில் மீதமுள்ள குழந்தைகள் எத்தனை பேர்?
விடை
19 – 2 = 17
3. தோட்டத்தில் 33 பறவைகள் இருந்தன. அதில் 11 பறவைகள் பறந்து சென்றுவிட்டால் மீதமுள்ள பறவைகளின் எண்ணிக்கை என்ன?
விடை
33 – 11 = 22
4. ஒரு பண்ணையில் 64 ஆடுகள் இருந்தன. 11 ஆடுகளை அடுத்த பண்ணைக்கு எடுத்துச்சென்று விட்டால் மீதம் எத்தனை ஆடுகள் இருக்கும்?
விடை
64 – 11 = 53
5. ஒருபெட்டியில் 38
வண்ணம் தீட்டும் தூரிகைகள் உள்ளன. 10 தூரிகைகளைப் பயன்படுத்திவிட்டால்,
பயன்படுத்தப்படாத தூரிகைகள் எத்தனை இருக்கும்?
விடை
38 – 10 = 28