எண்கள் | பருவம்-1 அலகு 2 | 2வது கணக்கு - குழுக்களாகப் பிரித்தல் | 2nd Maths : Term 1 Unit 2 : Numbers
குழுக்களாகப் பிரித்தல்
மேலே உள்ள படத்தின் சூழலை ஆசிரியர் விவரித்துக் கீழ்க்காணும் வினாக்களை வினவி குழுக்களாகப் பொருள்களை வகைப்படுத்தலை வலுவூட்டலாம்.
* படத்தில் என்னென்ன பொருள்களைக் காண்கிறாய்? எத்தனை கத்தரிக்கோல்கள் உள்ளன?
* பொத்தான்கள் உள்ள புட்டிகள் எத்தனை உள்ளன?
கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அவற்றின் முதல் எழுத்தைக் கொண்டு குழுக்களாகப் பிரித்தல் மற்றும் எண்ணுதல்.
'அ', 'ஆ' மற்றும் 'இ' என்ற எழுத்தில் தொடங்கும் வார்த்தைகள் பின்வருமாறு
முதல் எழுத்தைக் கொண்டு கீழ்க்காணும் சொற்களைக் குழுக்களாகப் பிரித்தும், எண்ணியும் எழுதுக.
செயல்பாடு
பிரித்து எண்ணுவோம்
* தேவையான அளவிற்குக் கற்கள், மணிகள், புளியங்கொட்டைகள்,
வேப்பங்கொட்டைகள் ஆகிய பொருள்களை எடுத்துக்கொள்க. அனைத்துப்
பொருள்களையும் பெட்டியில் கலந்து வைக்க வேண்டும்.
* மாணவர்களிடம் அவற்றை வகை
வாரியாகப் பிரிக்கச் செய்யவும்.
* அவற்றை எண்ணச் செய்து
எண்ணிக்கையை கூறவும்.
கற்றல்
பொருள்களைப் பத்துகளாகவும் ஒன்றுகளாகவும் குழுப் பிரித்தல்
செய்து பார்
பொருள்களைப் பத்துகளாகவும், ஒன்றுகளாகவும் பிரித்து எண்களை எழுதுக.