Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | பொருநோக்கு நிரலாக்கத்தின் பலன்கள், தீமைகள்

பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள் - பொருநோக்கு நிரலாக்கத்தின் பலன்கள், தீமைகள் | 11th Computer Science : Chapter 13 : Introduction to Object Oriented Programming Techniques

   Posted On :  21.09.2022 05:27 pm

11வது கணினி அறிவியல் : அலகு 13 : அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள்

பொருநோக்கு நிரலாக்கத்தின் பலன்கள், தீமைகள்

கணினி அறிவியல் : அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள்

பொருநோக்கு நிரலாக்கத்தின் பலன்கள் (Advantages of OOP) 


மறுபயனாக்கம் (Re-usability): 

“ஒரு முறை எழுதுதல் பலமுறை பயன்படுத்துதல்” இனக்குழு பயன்படுத்தி இதை நிறைவேற்றலாம். 


மிகைமை (Redundancy): 

மரபுரிமம் தரவு மிகைமைக்கும் சிறந்த சான்றாகும். பல இனக்குழுக்களுக்கு தேவையான ஒரே செயல்பா ட்டை ஒரு பொது இனக்குழுவின் மூலம் வரையறுத்து அவற்றை மரபுரிமம் தருவிக்கப்பட்ட இனக்குழுவில் மூலம் தருவித்துக்கொள்ளலாம். 


எளிய பராமரிப்பு (Easy Maintenance): 

ஏற்கனவே இருக்கும் குறிமுறையில் சிறிய மாற்றங்களைச் செய்து புதிய பொருளை உருவாக்க முடியும் மேலும் இதை பராமரிப்பதும் மாற்றங்கள் செய்வதும் எளிது.


பாதுகாப்பு (Security):

தரவு மறைப்பு மற்றும் அருவமாக்கம் தேவையான தரவுகளை மட்டும் கொடுப்பதால் தரவு பாதுகாப்பு பராமரிக்கப்படுகிறது.


பொருள் நோக்கு நிரலாக்கத்தின் தீமைகள் (Disadvantages of OOP) 


அளவு (Size)

பொருள் நோக்கு நிரலானது மற்ற நிரல்களை விட அளவில் பெரியது. 


உழைப்பு (Effort)

பொருள் நோக்கு நிரலை உருவாக்குவதற்கு அதிக உழைப்பு தேவைப்படுகிறது. 


வேகம் (Speed)

பொருள் நோக்கு நிரல்கள் அதிக அளவின் காரணமாக பிற நிரல்களை விட மெதுவாக செயல்படுகிறது.


Tags : Object Oriented Programming Techniques பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள்.
11th Computer Science : Chapter 13 : Introduction to Object Oriented Programming Techniques : Advantages and Disadvantages of OOP Object Oriented Programming Techniques in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 13 : அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள் : பொருநோக்கு நிரலாக்கத்தின் பலன்கள், தீமைகள் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 13 : அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள்