Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள் : நினைவில் கொள்க
   Posted On :  21.09.2022 05:28 pm

11வது கணினி அறிவியல் : அலகு 13 : அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள்

அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள் : நினைவில் கொள்க

கருத்தியல் என்பது நிரலின் கோட்பாடுகளை அமைத்தலாகும். இது ஒரு நிரலாக்க அணுகுமுறையாகும்.

நினைவில் கொள்க


• கருத்தியல் என்பது நிரலின் கோட்பாடுகளை அமைத்தலாகும். இது ஒரு நிரலாக்க அணுகுமுறையாகும். 


• நடைமுறை நிரல் அல்லது கூறுநிலை நிரல் என்பது கட்டளைகளின் பட்டியல்களைக் கொடுத்து, ஒவ்வொரு கட்டளைகளையும் ஏதேனும் ஒரு செயலை செய்யுமாறு உதவுகிறது. 


• நடைமுறை நிரல் விதிமுறைகளின் மீது அதிக கவனம் செலுத்துகிறது. இதில் நிரல்களை, துணை நிரல் கூறு அல்லது துணை நிரல் வடிவத்தில் அமைக்கிறது. 


• கூறுநிலை நிரல் ஆனது தொடர்புடைய விதிமுறைகளை கூறுகளில் சேர்த்து கூறுகளில் தரவை மறைக்கிறது. 


• பொருள் நோக்கு நிரலாக்கத்தில் கருத்தியல் நெறிமுறைகளைக் காட்டிலும் தரவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இது இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் மூலம் நிரலைச் செயல்படுத்துகிறது. 


• இனக்குழு பயனர் வரையறுக்கும் தரவினமாகும். இனக்குழுவானது ஒரே மாதிரியான பொருள்களின் குழுவைக் குறிக்கிறது. 


• பொருளானது பொருள் நோக்கு நிரலாக்கத்தின் அடிப்படை அலகாகும். பொருள் என்பது தொடர்புடைய செயற்கூறுகள், அச்செயற்கூறுகளுக்கான தரவுகள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு குழுவாகும். 


• தரவுகளையும் செயற்கூறுகளையும் ஒரு பொருள் வரையறை ஒன்றாகப் பினைத்துவைக்கும் செயல்நுட்பம் உறைபொறியாக்க்கம் எனப்படுகிறது. இது அருவமாக்கத்தை செயல்படுத்துகிறது.


• வேறுபட்ட செய்திகளுக்கு மாறுபட்டுச் செயல்படும் ஒரு பொருளின் திறனே பல்லுருவாக்கம் என்றழைக்கப்படுகிறது.


• அருவமாக்கம் என்பது பின்புல விவரங்களை தெரிவிக்காமல் அவசியமான அம்சங்களை மட்டுமே காட்டுவதைக் குறிக்கும்.


• மரபுரிமம் என்பது ஏற்கனவே இருக்கும் இனக்குழுகளின் அடிப்படையில் புதிய இனக்குழுக்களை (தருவிக்கப்பட்ட இனக்குழு) உருவாக்கும் செயல்முறையாகும். இதன் முக்கிய பலன் நிரல் குறிமுறை மறுபயனாக்கமாகும். மரபுரிமம் ஒரு கடத்தியாகும்.


11th Computer Science : Chapter 13 : Introduction to Object Oriented Programming Techniques : Introducton to Object Oriented Programming Techniques: Points to Remember in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 13 : அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள் : அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள் : நினைவில் கொள்க - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 13 : அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள்