அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள் | கணினி அறிவியல் - பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் | 11th Computer Science : Chapter 13 : Introduction to Object Oriented Programming Techniques
C++ பொருள் நோக்கு நிரலாக்க மொழி
அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க
நுட்பங்கள்
மதிப்பீடு
பகுதி – ஆ
குறு வினாக்கள்
1. கட்டக நிரலாக்கம் நடைமுறை நிரலாக்க
கருத்தியலில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
விடை:
(i) நடைமுறை நிரலாக்கம்
என்பது கணிப்பொறிக்கு கட்டளைகளின் பட்டியல்களைக் கொடுத்து, ஒவ்வொரு கட்டளைகளையும் ஏதேனும்
ஒரு செயலை செய்யுமாறு கூறுவதாகும். இது விதிமுறைகளின் மீது அதிக கவனம் செலுத்துகிறது. வேலை செய்வதற்கு அழுத்தம் கொடுக்கிறது.
(ii) கட்டக நிரலாக்கம் என்பது கணிப்பொறிக்கு கட்டளைகளின் பட்டியல்களைக் கொடுத்து, ஒவ்வொரு கட்டளைகளையும் ஏதேனும்
ஒரு செயலை செய்யுமாறு கூறுகிறது. ஆனால் இந்த கருத்தியலானது பல கூறுகளைக் கொண்டது.
(iii) ஒவ்வொரு கூறும் தொடர்புடைய செயற்கூறுகளின் அமைப்பாகும். தரவானது செயற்கூறினுள் மறைக்கப்படுகிறது
கூறுகளை மாற்றியமைப்பதன் மூலம் தரவின் சீரமைப்பை மாற்ற முடியும்.
2. இனக்குழு மற்றும் பொருள்
வேறுபடுத்துக.
விடை:
இனக்குழு : C++ -ன் இனக்குழு ஆனது தரவுகளையும் அதற்கு தொடர்பான செயல்கூறுகளையும் உறைபொதியாக்கம்
என்னும் கருத்துருவை பயன்படுத்தி ஒரு தொகுதிக்குள் இணைக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது. இனக்குழு பயனர் வரையறுக்கும் தரவினமாகும். இனக்குழுவானது ஒரே மாதிரியான பொருள்களின்
குழுவைக் குறிக்கிறது.
பொருள் : பொருள் என்பது தொடர்புடைய செயற்கூறுகள், அச்செயற்கூறுகளுக்கான தரவுகள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு குழுவாகும். பொருளானது பொருள் நோக்கு நிரலாக்கத்தின்
அடிப்படை அலகாகும். பொதுவாக பொருளானது இனக்குழுவிலிருந்து உருவாக்கப்படுகிறது. இனக்குழுவின் சான்றுரு ஆனது இவை இனக்குழு மாறிகள் என்றும் அழைக்கப்படுகிறது.
3. பல்லுருவாக்கம்
என்றால் என்ன?
விடை: வேறுபட்ட செய்திகளுக்கு மாறுபட்டுச்
செயல்படும் ஒரு பொருளின் திறனே பல்லுருவாக்கம் என்றழைக்கப்படுகிறது.
4. உறைபொதியாக்கம்
மற்றும் அருவமாக்குதல் எவ்வாறு தொடர்பு படுத்தப்படுகிறது?
விடை: இனக்குழுவானது அருவமாக்க கருத்துருவை
வரையறுக்கப்பட்ட பண்புக்கூறுகள் மற்றும் அப்பண்புக்கூறுகளின் மீது செயல்படும் செயற்கூறுகளைக்
கொண்டு வரையறுக்கிறது. இது அவசியமான பண்புகளை உருவாக்கப்படும் ஒரு பொருளுக்குள் மறைத்து வைக்கிறது.
5. பொருள் நோக்கு நிரலாக்கத்தின்
குறைபாடுகள் யாவை?
விடை:
(i) அளவு (Size) : பொருள் நோக்கு நிரலானது மற்ற நிரல்களை விட
அளவில் பெரியது.
(ii) உழைப்பு (Effort) : பொருள் நோக்கு நிரலை உருவாக்குவதற்கு அதிக உழைப்பு தேவைப்படுகிறது.
(iii) வேகம் (Speed) : பொருள் நோக்கு நிரல்கள் அதிக அளவின் காரணமாக
பிற நிரல்களை விட மெதுவாக செயல்படுகிறது.
பகுதி - இ
சிறு வினாக்கள்
1. கருத்தியல்
என்றால் என்ன? பல்வேறு
வகையான கருத்தியல்களைக் குறிப்பிடுக.
விடை: கருத்தியல் என்பது நிரலின் கோட்பாடுகளை
ஒழுங்குபடுத்தி அமைத்தலாகும். இது ஒரு நிரலாக்க அணுகுமுறையாகும். கணினியைப் பயன்படுத்தி சிக்கல்களைத்
தீர்க்க பல்வேறு அணுகுமுறை உள்ளன. அவை நடைமுறை நிரலாக்கம், கட்டக நிரலாக்கம் மற்றும் பொருள்நோக்கு நிரலாக்கம் ஆகும்.
2. நடைமுறை
நிரலாக்கத்தின் அம்சங்கள் பற்றி குறிப்பு வரைக.
விடை:
(i) நிரலானது, துணை நிரல் கூறுகளாகவோ கூறு அல்லது துணை
நிரல்களாகவோ கட்டமைக்கப்படுகிறது.
(ii) அனைத்துத் தரவு உறுப்புகளும் முழு தளாவியவை ஆகும்.
(iii) சிறிய அளவிலான மென்பொருள் பயன்பாட்டிற்கு பொருத்தமானது.
(iv) நிரல் குறிமுறைகளைப் பராமரித்தலும் மேம்படுத்தலும் கடினமாகும். ஒரு மாறியின் தரவு வகைகளை மாற்ற
வேண்டுமெனில், அதே தரவு வகையைப் பயன்படுத்தும் துணை நிரல்கள் அனைத்திற்கும் அந்த தரவு
வகை மாற்றத்தை செய்ய வேண்டியது அவசியமாகும். இது அதிக நேரத்தை எடுத்துக்கொள்கிறது.
எடுத்துக்காட்டு:- FORTRAN மற்றும் COBOL
3. கட்டக நிரலாக்கத்தின் சில அம்சங்களைப்
பற்றி பட்டியலிடுக.
விடை:
(i) தரவைக் காட்டிலும் நெறிமுறைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
(ii) நிரலானது தனித்தனி கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
(iii) ஒவ்வொரு கூறும் ஒன்றுக்கொன்று சார்பற்றது மற்றும் தனித்த உள்ளமை தரவைக் கொண்டிருக்கும்.
(iv) கூறுகள் தனது சொந்த தரவுகளின் மீது மட்டுமல்லாமல் அனுப்பப்படும் பிறத் தரவுகளையும் கொண்டு செயல்படுகிறது.
எடுத்துக்காட்டு : - Pascal மற்றும் C
4. கூறுநிலையாக்குதல் மற்றும் மென்பொருள்
மறு பயனாக்கம் வரையறு.
விடை:
(i) கூறுநிலையாக்கம்
(Modularisation): நிரலானது கூறுகளாக பிரிக்கப்படுகிறது.
(ii) மென்பொருள் மறுபயனாக்கம்
(Software re-use): நிரலானது ஏற்கனவே
உள்ள அல்லது புதிய கூறுகளைக் கொண்டு தொகுக்கப்படுகிறது.
5. தகவல் மறைப்பு
- வரையறு.
விடை: வெளி உலகத்தினால் அணுக முடியாத தரவுகளை
இனக்குழுவிலுள்ள சில செயற்கூறுகளின் மூலம் அணுக முடியும். அவ்வாறு மறைத்து வைக்கப்படும்
தரவுகள் தரவு மறைப்பு எனப்படும்.
பகுதி - ஈ
பெரு வினாக்கள்
1. பொருள் நோக்கு நிரலாக்கம் மற்றும்
நடைமுறை நிரலாக்கம்-
வேறுபடுத்துக.
விடை:
நடைமுறை நிரலாக்கம்:
(i) நிரலானது, துணை நிரல் கூறுகளாகவோ கூறு அல்லது துணை நிரல்களாகவோ கட்டமைக்கப்படுகிறது.
(ii) அனைத்துத் தரவு உறுப்புகளும் முழு தளாவியவை ஆகும்.
(iii) சிறிய அளவிலான மென்பொருள் பயன்பாட்டிற்கு பொருத்தமானது.
(iv) நிரல் குறிமுறைகளைப் பராமரித்தலும் மேம்படுத்தலும் கடினமாகும்.
(v) ஒரு மாறியின்
தரவு வகைகளை மாற்ற வேண்டுமெனில், அதே தரவு வகையைப் பயன்படுத்தும் துணை நிரல்கள் அனைத்திற்கும் அந்த தரவு
வகை மாற்றத்தை செய்ய வேண்டியது அவசியமாகும். இது அதிக நேரத்தை எடுத்துக்கொள்கிறது.
எடுத்துக்காட்டு: FORTRAN மற்றும் COBOL
பொருள் நோக்கு நிரலாக்கம்:
(i) நெறிமுறைக்
காட்டிலும் தரவுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது.
(ii) தரவு அருவமாக்கமானது நடைமுறை அருவமாக்கத்துடன் கூடுதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
(iii) தரவு மற்றும் அவை தொடர்புடைய செயற்கூறுகள் ஒரு தொகுதிக்குள் குழுவாக இருக்கும்.
(iv) செயல்படுத்தக்கூடிய தரவுகளைக் கொண்டு நிரல்கள் வடிவமைக்கப்படுகிறது.
(v) ஒரே மாதிரியான
அல்லது வேறுபட்ட தரவு வகைகளுக்கு உறவுநிலையை ஏற்படுத்தலாம்.
எடுத்துக்காட்டு: C++, Java,
python
2. பொருள் நோக்கு நிரலாக்கத்தின் நன்மைகள்
யாவை?
விடை:
(i) மறுபயனாக்கம்
(Re-usability): “ஒரு முறை எழுதுதல் பலமுறை பயன்படுத்துதல்” இனக்குழு பயன்படுத்தி இதை நிறைவேற்றலாம்.
(ii) மிகைமை (Redundancy): மரபுரிமம் தரவு மிகைமைக்கும் சிறந்த சான்றாகும். பல இனக்குழுக்களுக்கு தேவையான
ஒரே செயல்பாட்டை ஒரு பொது இனக்குழுவின் மூலம் வரையறுத்து அவற்றை மரபுரிமம் தருவிக்கப்பட்ட இனக்குழுவில் மூலம் தருவித்துக் கொள்ளலாம்.
(iii) எளிய பராமரிப்பு (Easy
Maintenance): ஏற்கனவே இருக்கும் குறிமுறையில் சிறிய மாற்றங்களைச் செய்து புதிய பொருளை
உருவாக்க முடியும். மேலும் இதை பராமரிப்பதும் மாற்றங்கள் செய்வதும் எளிது.
(iv) பாதுகாப்பு (Security): தரவு மறைப்பு மற்றும் அருவமாக்கம் தேவையான தரவுகளை மட்டும் கொடுப்பதால் தரவு பாதுகாப்பு பராமரிக்கப்படுகிறது.
3. பொருள் நோக்கு நிரலாக்கத்தை
ஆதரிக்கும் அடிப்படைக் கருத்துகளைப் பற்றி குறிப்பு வரைக.
விடை:
நடைமுறை மற்றும் கட்டக நிரலாக்கத்தில் உள்ள பின்னடைவுகளை
மேம்படுத்த பொருள் நோக்கு நிரலாக்கம் உருவாக்கப்பட்டது. பொருள் நோக்கு நிரலாக்கம் ஆற்றல்மிகு
வழியில் மென்பொருள்களை உருவாக்குதலில் பொருள் நோக்கு நிரலாக்கமானது மிகவும் முக்கியமானது
என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
பொருள் நோக்கு நிரலாக்க வழிமறை பின்வருவனவற்றை ஊக்குவிக்கிறது:
(i) கூறுநிலையாக்கம்
(Modularisation): நிரலானது கூறுகளாக பிரிக்கப்படுகிறது.
(ii) மென்பொருள் மறுபயனாக்கம் (Software re-use): நிரலானது ஏற்கனவே உள்ள அல்லது
புதிய கூறுகளைக் கொண்டு தொகுக்கப்படுகிறது.
பொருள் நோக்கு நிரலாக்கத்தின் சிறப்பியல்புகள்:
(i) உறைபொதியாக்கம் (Encapsulation)
(ii) தரவு அருவமாக்கம் (Data
Abstraction)
(iii) கூறுநிலையாக்கம் (Modularity)
(iv) பல்லுருவாக்கம் (Polymorphism)
(v) மரபுரிமம் (Inheritance)
(i) உறைபொதியாக்கம்: தரவுகளையும் செயற்கூறுகளையும்
ஒரு பொருள் என்னும் வரையறைக்குள் ஒன்றாகப் பிணைத்துவைக்கும் செயல்நுட்பம் உறை பொதியாக்கம் எனப்படுகிறது.
(ii) தரவு அருவமாக்கம் (Data
Abstraction): அருவமாக்கம் என்பது பின்புல விவரங்களை தெரிவிக்காமல் அவசியமான அம்சங்களை மட்டுமே வெளிப்படுத்துவதைக் குறிக்கும். இனக்குழுவானது அருவமாக்க கருத்துருவை
வரையறுக்கப்பட்ட பண்புக்கூறுகள் மற்றும் அப்பண்புக்கூறுகளின் மீது செயல்படும் செயற்கூறுகளைக் கொண்டு வரையறுக்கிறது.
(iii) கூறுநிலையாக்கம்
(Modularity): கூறுநிலை என்பது ஒரு அமைப்பை பல செயல்பாட்டுத்
தொகுதிகளாக (கூறுகள்) பிரித்து பின்னர் அவற்றைத் தொகுத்து பெரிய பயன்பாடாக வடிவமைக்கிறது.
(iv) பல்லுருவாக்கம்
(Polymorphism): வேறுபட்ட செய்திகளுக்கு மாறுபட்டுச் செயல்படும் ஒரு பொருளின் திறனே பல்லுருவாக்கம் என்றழைக்கப்படுகிறது.
(v) மரபுரிமம்: மரபுரிமம் என்பது ஏற்கனவே இருக்கும் இனக்குழுகளின் அடிப்படையில் புதிய இனக்குழுவை (தருவிக்கப்பட்ட இனக்குழு உருவாக்கும்
செயல்முறையாகும். இதன் முக்கிய பயனானது நிரல் குறிமுறை மறுபயனாக்கமாகும்.