அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள்
கற்றலின் நோக்கங்கள்
இந்த பாடத்தைப் படித்தபின்னர் மாணவர்கள்.
• பொருள் நோக்கு நிரலாக்க கருத்துருவை பற்றி அறிந்து கொள்ளுதல்.
• செயல்முறை, கூறுநிலை மற்றும் பொருள் நோக்கு நிரலாக்கம் இடையேயான வேறுப்பாட்டை தெரிந்துக் கொள்ளுதல்.
• பொருள் நோக்கு நிரலாக்கத்தின் நன்மைகள், தீமைகள் பற்றி அறிதல்.
அறிமுகம்
இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் அடிப்படையாகக் கொண்ட நிரல் அணுகு முறையை விவரிக்க பொருள் நோக்கு நிரலாக்க கருத்துரு உதவுகின்றன. பொருள் நோக்கு கருத்தியல், தரவு மற்றும் பண்பியல்புகளைக் கொண்ட பொருள்களின் தொகுப்பை மென்பொருளாக அமைக்க அனுமதிக்கிறது. இது தளர்வாக இணைக்கப்பட்ட தரவு மற்றும் பண்பியல்புகளைக் கொண்ட மரபுசார் செயற்கூறு நிரலாக்கப் பயிற்சிக்கு மாறுபட்டது.
1980 – களில் பொருள் என்ற சொல் நிரலாக்க மொழிகளில் தொடர்புபடுத்தப்பட்டது. 1990-களில் உருவாக்கப்பட்ட பெரும்பாலான மொழிகள் பொருள்நோக்கு சிறப்பியல்புகளை பெற்றுள்ளன. இந்த பாடமானது பொருள் நோக்கு நிரலாக்க கருத்தியல்களை அறிமுகப்படுத்துகிறது.